சில நாட்கள் முன்பு .. தெரிந்தவர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தேன் ....
அப்பொழுது திடீரென்று அவர் ...
"என்னாங்க ..தமிழ் தமிழ் னு சொல்றீங்க ..உங்க பேச்சு ல அவ்வளவு இங்கிலீஷ் இருக்கே ..?"
"எத சொல்றீங்க ?"
"Car நு சொல்றீங்க .... Bullet நு சொல்றீங்க.... computer , laptop , cell , smart phone ...அவ்வளவு தமிழ் பற்று னா தூய தமிழ் ல பேசலாமே ங்க .... ஒவ்வொன்றுக்கும் தமிழ் வார்த்தை பிடிக்க வேண்டியது தானே .."
(என்ன கலாயிக்க try பண்றாராம் )
" சார் ..நீங்க சொன்ன எதுவுமே நம்மளால் கண்டு பிடிக்க பட்டவை அல்ல .... they are proper nouns .. கண்டுபிடிச்சவங்க வைத்த பெயர கூப்பிட்டா என்ன தப்பு? .... அதுவுமில்லாமல் தமிழ் வளர்க்க தூய தமிழ் ல பேசணும் நு யார் சொன்னது ? தமிழை புறக்கணிக்காமல் ... தமிழை நம் அடுத்த தலைமுறைக்கு ஒரு மொழியாக மட்டுமில்லாமல் நம் அடையாளமாக கொண்டு சென்றால் போதும் ங்க .... நீங்க சற்று நேரம் முன்னாடி 'tanjore' போனும் நு சொன்னீங்க .... அது அவன் வெச்ச பெயரா ? நாம தானே வெச்சோம் ...'தஞ்சாவூர்' நு சொல்லலாமே ? "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
" இப்பெல்லாம் தமிழ் தமிழ் னு சொல்றது ஒரு பேஷன் ஆகி போச்சு " -- நான் கேட்கும் பரவலான கருத்து இது .......... இங்கு தமிழ் வளர்ச்சிக்காக உண்மையாக பேசும் / செயல் படும் யாரும் அதை Fashion ஆக பார்பதில்லை ... தமிழ் வழி கல்வி படிங்க னு யாரும் சொல்ல வில்லை ... விஞ்ஞான உலகத்தில் ஆங்கில கல்வி தான் படிக்க வேண்டும் ... தமிழை புறக்கணிக்க வேண்டாம் என்று தான் வேண்டுகோள் ...
இருபது ஆண்டு கழித்து - ஒரு சூழலில் ஒரு சீன வாலிபனும் , பிரெஞ்சு வாலிபனும் , தமிழ் வாலிபனும் நண்பர்களாக இருப்பார்கள் -- அப்பொழுது அவர்கள் இருவரும் தத்தம் தாய் மொழியில் பேச , எழுத பயின்று இருப்பார்கள் ..நம்மாளுக்கு அது தெரியாது ... இந்த வெட்கம் கெட்ட சூழலை தான் மாற்ற வேண்டுகிறோம் !
தூய தமிழ் பேசவோ , வெறும் தமிழ் வார்த்தைகள் மட்டும் பயன்படுத்தவோ இங்கு யாரும் வற்புறுத்தவில்லை -- அறிவியல் , பொறியியல் , மருத்துவ வளர்ச்சிகளில் அப்படி பேசவும் சாத்தியமில்லை - தேவையுமில்லை .... ஆனால் தமிழ் குடும்பகளிலையே , அடுத்த தலைமுறைக்கு தமிழ் தேவையில்லை என்று தீர்மானிப்பதை கண்டு தான் வருத்தமளிக்கிறது ....
"தமிழ் படித்தால் என்ன கிடைக்க போகிறது ..ஒரு காலத்தில் தமிழன் உலகை ஆண்டான் --அதற்காக இப்போ என்ன செய்ய முடியும் ... நம் அறிவியல் , நம் கண்டுபிடிப்புகள் அனைத்துமே புதைந்து போயின ... இப்போ குழந்தைகளுக்கு சொல்லி தருவது வீண் பாரம் தான் " -- இப்படி பேசியவர்களும் உண்டு .....
உண்மை தான் ...நாம் சுரண்ட பட்டோம் ... மிதி பட்டோம் .... பல்வேறு காரணத்தால் நம் அறிவியல் , எழுத்துக்கள் அழிக்க பட்டது ..மீதி இருப்பது கொஞ்சமே .. மதம் மாற்று - மொழி மாற்று -இடம் மாற்று ..இப்படி அடையாளங்கள் வேண்டுமென்றே அழிக்க பட்டன ..... இது எல்லாவற்றையும் மீறி ...
தமிழ் என்பது ஒரு மொழி அல்ல ..அது ஒரு பண்பாடு ..கலாச்சாரம் ..அடையாளம் .... அதனால் மட்டுமே இத்தனை ஆயிரம் வருடம் தாண்டியும் , இன்றும் வாழ்கிறது (தமிழை போன்ற ஆதி மனிதன் மொழிகளான Greek , Latin , Sanskrit எதுவுமே இப்பொழுது வழக்கில் இல்லை ) உலகிலேயே நடப்பில் உபயோகிக்க படும் மொழிகளில் , தமிழ் ஒன்றுக்கு தான் --தமிழனுக்கு மட்டும் தான் , தன் ஆதி வரலாறும் அவன் பயன் படுத்தும் மொழியிலேயே (தமிழில்) கிட்டும் ..... இது எவ்வளவு பெருமை ...........
...குழந்தைகளுக்கு தமிழ் கற்று கொடுங்கள் ...தமிழின் பெருமையை சொல்லி கொடுங்கள்...இதை தான் காப்பாற்ற வேண்டி கோரிக்கையே தவிர ...ஆங்கிலம் கற்காதே ...இந்தி, French , German கற்காதே என்று சொல்வதிற்கில்லை ... இந்தி கற்றுவிட்டு , இந்தியில் தமிழின் பெருமையை நண்பர்களுக்கு சொல்லி கொடுக்க சொல்லுங்கள் .... தமிழ் இழுக்கு அல்ல ..பெருமை என்று சொல்லி கொடுங்கள் .... அகழ்வாராய்ச்சி (Archaelogical Discoveries ) இன்னும் உலகில் எத்தனையோ கண்டு பிடிக்க படாமல் உள்ளது ... ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ ஒவ்வொரு பெருமையாக வெளி வரும் ..அதற்க்கு அடுத்த தலைமுறைக்கு அதன் அவசியம் புரிய வேண்டும்.....
"உலகமயமாக்கலில் , உலகே ஒரு சிறு கிராமம் என்று சொல்லும் போது , இவருக்கு அப்படி என்ன தமிழ் மேல் இப்படி ஒரு பிடிப்பு" என்று சொல்பவர்களுக்கு - உலகம் சிறு கிராமம் ஆனது மகிழ்ச்சி தான் ..ஆனால் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய அடையாளம் இருக்கும்...அவர்கள் அவர்களின் தாய் மொழி கற்கின்றனர் ...அவர்கள் பெயர் களையே குழந்தைகளுக்கு சூட்டு கின்றனர்...அவர்கள் கலாச்சாரத்தை மரபை சொல்லி வளர்க்கின்றனர் ... ..ஆனால் நம் வீட்டில் தான் நாம் மற்றொருவருடைய அடையாளத்துக்காக ஏங்குகிறோம் ...அதை மாற்ற வேண்டி கோரிக்கையே தவிர எங்களுக்கு வேற எண்ணமில்லை ... கிராமத்துக்கு (உலகம் ) பிரச்சனை என்றால் கை கொடுப்போம் ... நம் தெருவில் (நாடு ) பிரச்சனை என்றால் பொங்கி எழுவோம் ..குரல் கொடுப்போம் ..
தெருவை சுத்தமாக ஆரோக்யமாக வைக்க உதவுவோம் ...
நம் வீட்டையும் பார்த்து கொள்வோமே ?!

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.