Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!
Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Friday, August 16, 2013

ஓவியம்


மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை மெயின் ரோட்டில் உள்ள சுவற்றில் வரையப்பட்ட ஓவியம் இது.....,
மயிலாடுதுறையில் பரவலாக பேசப்பட்ட செய்தி.....,
இந்த ஓவியம் வரைய எந்த வகையான கலர் பெயிண்டுகளும் பயன்படுத்த படவில்லை.....,
 பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கலர் சாக்பீஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.....,

இந்த ஓவியத்தை வரைந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம் அளித்தார்.....,
இவர் படம் வரையும் போது மக்கள் கூட்டமாக பார்த்தல் சிறிது போக்குவரத்து ஏற்ப்பட்டது.....,
இவர் இவ்வாறு தான் அணைத்து ஊர்களிலும் படம் வரைவதாக கூறப்படுகிறது..

Thursday, August 15, 2013

ஜெசிந்தா - கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்


கல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்

வடபழனி துரைசாமி சாலையோரத்தில், வாகனங்களுக்கு கீழே படுத்து வேகமாகவும், லாவகமாகவும் பழுது பார்க்கும், பெண் மெக்கானிக் ஜெசிந்தாவின் செயல்பாடுகள், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கத் தான் செய்யும். ஆனால் அவருக்கு, வாகனங்களில் பழுது பார்க்கும் பணி அனைத்தும் அத்துப்படி.

வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் அவரிடம் உரையாடியதில் இருந்து...

* வாகனங்களில் என்னென்ன பழுதுகளை பார்க்கிறீர்கள்?
ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிரீஸ் அடிப்பது, ஆயில் மாற்றுவது, கிளட்ச் ஒயர் மாற்றுவது மற்றும் வாகனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதுகளை சரி பார்ப்பேன்.

* யாரிடம் தொழில் பழகுனீங்க?
என் கணவர் ஜெயக்குமார் தான் என் குரு; அவர் ஆட்டோ ஓட்டுனர். வாகனங்களில் பழுது பார்ப்பதில் அடிப்படையான விஷயங்களையும், வாகனங்களுக்கு கிரீஸ் அடிப்பது குறித்தும் சொல்லி தந்தார். அதன் பின், அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டே, நிறைய கற்று வருகிறேன்.

* மெக்கானிக் பணியில் விருப்பம் வந்தது எப்படி?
சூழ்நிலை தான் விருப்பமாக மாறியது. எனக்கு யாரும் உதவ முன் வராத போது, மெக்கானிக் பணியை ஆர்வத்துடன் எடுத்து செய்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மகன், வீட்டின் மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 4 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட போது, நான் வேலை பார்த்த நிறுவனம் எனக்கு உதவவில்லை. போதிய பணம் இல்லாததால், என் மகன் இறந்துவிட்டான். அவனது இறப்பே என்னை, சுய தொழில் துவங்க தூண்டியது. அந்த நிமிடம், அந்த நிறுவனத்தை உதறிவிட்டு, இந்த தொழிலில் இறங்கி விட்டேன்.

* நிறுவனத்தில் வேலை பார்த்தீர்களா?
ஆமாம். டி.எம்.எல்.டி., என்கிற தொழிற்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில், "சிஸ்டம் ஆப்ரேட்டராக' பணி புரிந்தேன்; பின், எம்.ஏ., முடித்தேன். தற்போது எம்.பில்., படித்து வருகிறேன். பிஎச்.டி., படிக்க வேண்டும் என்பது லட்சியம்.

* படிப்பு, நிறுவன வேலையெல்லாம் உதறிவிட்டு நடைபாதையில் எப்படி...?
துவக்கத்தில் சற்று கூச்சமாக தான் இருந்தது. பழுது பார்ப்பதில் ஆர்வம் வந்ததில், கூச்சம் தானாக போனது. பழுது பார்க்க வருவோரின் பாராட்டுகள், நம்பிக்கையையும், துணிச்சலையும் தந்தன.

* மீண்டும் நிறுவன வேலைகளுக்கு செல்ல விருப்பமில்லையா?
நான் இங்கு பார்க்கும் தொழிலில், தினமும், 500 ரூபாய் கிடைக்கிறது. என் மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்கும், என் குடும்பத்தை பார்த்து கொள்ளவும் முடிகிறது. பிஎச்.டி., முடித்த பின், மீண்டும் கல்லூரியில் பணி புரியலாம் என்று யோசித்து வருகிறேன். கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து பணிபுரிந்து, கல்லூரி முதல்வர் பதவி வரை உயர வேண்டும் என்பதே என் லட்சியம்.

- Aatika Ashreen

Source : ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலத்திலும் Relaxplzz)

Friday, August 9, 2013

ஞானகாந்தி


ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானகாந்தி.

இவர் டீசல், காஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை வடிவமைத்துள்ளார்.

இதனையடுத்து விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில், சுமார் 1 மணிநேரம் பேருந்தை இயக்கி காட்டினார்.

இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது, இந்த பேருந்து ஹைட்ரஜன் வாயு மூலமாக ஓடுவதால், 1 சதவிகிதம் கூட புகை மாசுவை ஏற்படுத்தாது.

குறைந்த அளவில் ஓசை மட்டும் வெளிப்படும், பேருந்தின் மேல் பகுதியில் சிலிண்டர்கள் இடம்பெற்றிருக்கும்.

இதில் இருந்து குழாய்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்தி பேருந்தின் பின்பகுதியில் உள்ள நவீன கருவிகள் மூலம் ஹைட்ரஜன் வாயு உருவாகி இயங்கும்.

8 சிலிண்டர்களில் உள்ள தலா 30 கிலோ ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி 220 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனகே இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா சைஸ் வால்வோ பேருந்தை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 13, 2013

தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கம்

தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் ! தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்....

Monday, July 8, 2013

மகேந்திர சிங் டோனி

மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்

இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் !கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் தோனியை கீபிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .

இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.
அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்

இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.

எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வைப்பிகுகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148
அடித்து கவனம் பெற்றார்.இலங்கையுடன் ஆன போட்டியில் செஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்தியா அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்

வாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சத்தம் கூட அடிக்காத தோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஒரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்

உலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் ! அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து ஆமாம். இவர் உலகக்கோப்பையை ஜெயிக்க போறார் என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி

லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .

ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வாளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் அம்மா உணவு தயாரிக்க வறுமையால் நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்

ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்

தோனி உச்சபட்ச தன்னம்பிக்கை காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,"ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும் .முடியாதா என்ன ?"என்றார் .அது தான் தோனி.

நன்றி : பூ.கொ. சரவணன் 
 
மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்

இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் !கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் தோனியை கீபிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .

இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.
அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்

இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.

எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வைப்பிகுகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148
அடித்து கவனம் பெற்றார்.இலங்கையுடன் ஆன போட்டியில் செஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்தியா அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்

வாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சத்தம் கூட அடிக்காத தோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஒரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்

உலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் ! அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து ஆமாம். இவர் உலகக்கோப்பையை ஜெயிக்க போறார் என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி

லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .

ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வாளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் அம்மா உணவு தயாரிக்க வறுமையால் நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்

ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்

தோனி உச்சபட்ச தன்னம்பிக்கை காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,"ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும் .முடியாதா என்ன ?"என்றார் .அது தான் தோனி.

நன்றி : பூ.கொ. சரவணன்

சுரேந்தர் - மெரினா - 9150270159


இன்று மெரினா பீச்சில் ஒரு திறமைமிக்க மனிதரை பார்த்தேன் .

அரை மணி நேரம் , அவர் முன் உட்கார்ந்தால், நம்மை அவ்வளவு அழகாக வரைந்து கொடுத்து விடுகிறார், 50 ரூபாயில் .

இன்று மெரினா பீச்சில் ஒரு திறமைமிக்க 
மனிதரை பார்த்தேன் .

அரை மணி நேரம் , அவர் முன் உட்கார்ந்தால்,
நம்மை அவ்வளவு அழகாக வரைந்து கொடுத்து 
விடுகிறார், 50 ரூபாயில் .

இதில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், 
ஆச்சர்யம் என்னவென்றால் , அவர் ஒரு software engineer. 
தற்போது, பணியில் இல்லை , பல்வேறு உள்ளடி 
வேலையால் பணி இழந்து இருக்கிறார் .

மீண்டும் அந்த பணிக்கு போகவேண்டும் என்று
விருப்பமில்லை. அனிமேஷன் இல் பணிபுரிந்து 
விட்டு , கை நிறைய சம்பளம் வாங்கிவிட்டு, 
இந்த தொழிலுக்கு ஏன் வந்தீர்கள் என்று 
கேட்டதற்கு , உள்ளே பணிபுரிவதற்கு பல்வேறு
சவால்கள் இருக்கிறது. இதில் , பல அரசியல் வேற, 
அதையெல்லாம் தாண்டி, நிலைத்து நிற்க 
நேர்மை மட்டும் பத்தாது. அதான் வேலையை 
விட்டு விட்டேன் என்றார் .

சரி இதில் என்ன வருமானம் வருகிறது என்று 
கேட்டதற்கு, வரைவதற்கு 100 ரூபாய் கேட்கலாம் .
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்று 
விடுகிறார்கள் . ஆகையால் 50 ரூபாய்க்கு வரைந்து
கொடுக்கிறேன் என்றார் .

சின்ன குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி கொடுக்க 
போகிறேன் . அதற்கான சந்தர்பம் வந்தால், என் 
நிலைமை மாறிவிடும் . தினந்தோரம் சாப்பிடணுமே 
என்ன பண்றது, அதற்காக தான் இங்கே வந்து 
வரைந்து கொடுக்கிறேன் என்றார் .

திறமையானவர்கள் நிலைமை , அதிலும் கொஞ்சம் 
நேர்மை. சரிபட்டு வராது, வாழ்க்கையில் ரொம்பவே 
போராடனும் . அவரை பார்த்த பொழுது இது மட்டும் 
தான் தோன்றியது .

அவர் என் மகளை வரைந்த பொழுது, ஒரு இடத்தில 
கூட ரப்பர் பயன்படுத்தவில்லை . அவ்வளவு 
அழகாக என் மனதில் , ஓவியம் வரைந்துகொண்டே 
இருந்தார் .

அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்,
சென்னைவாசிகள் இந்த எண்ணிற்கு தொடர்பு 
கொள்ளுங்கள். உங்கள் ஒத்தழைப்பு இருந்தால், 
நல்ல திறமைசாலி , நேர்மையானவர் , நல்ல 
நிலைமைக்கு வருவார் .

அவர் பெயர் சுரேந்தர். அவர் எண்: 9150270159.

மெரினா பீச்சில், சாயந்தரம் 4 மணிக்கு மேலே 
சுரேந்தர் இருப்பார்.

நன்றி : ரௌத்திரம் பழகு

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

இதில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், ஆச்சர்யம் என்னவென்றால் , அவர் ஒரு software engineer. தற்போது, பணியில் இல்லை , பல்வேறு உள்ளடி வேலையால் பணி இழந்து இருக்கிறார் .

மீண்டும் அந்த பணிக்கு போகவேண்டும் என்று விருப்பமில்லை. அனிமேஷன் இல் பணிபுரிந்து விட்டு , கை நிறைய சம்பளம் வாங்கிவிட்டு, இந்த தொழிலுக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு , உள்ளே பணிபுரிவதற்கு பல்வேறு சவால்கள் இருக்கிறது. இதில் , பல அரசியல் வேற, அதையெல்லாம் தாண்டி, நிலைத்து நிற்க நேர்மை மட்டும் பத்தாது. அதான் வேலையை
விட்டு விட்டேன் என்றார் .

சரி இதில் என்ன வருமானம் வருகிறது என்று கேட்டதற்கு, வரைவதற்கு 100 ரூபாய் கேட்கலாம். ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுகிறார்கள் . ஆகையால் 50 ரூபாய்க்கு வரைந்து கொடுக்கிறேன் என்றார் .

சின்ன குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி கொடுக்க போகிறேன் . அதற்கான சந்தர்பம் வந்தால், என் நிலைமை மாறிவிடும் . தினந்தோரம் சாப்பிடணுமே என்ன பண்றது, அதற்காக தான் இங்கே வந்து வரைந்து கொடுக்கிறேன் என்றார் .

திறமையானவர்கள் நிலைமை , அதிலும் கொஞ்சம் நேர்மை. சரிபட்டு வராது, வாழ்க்கையில் ரொம்பவே போராடனும் . அவரை பார்த்த பொழுது இது மட்டும் தான் தோன்றியது .

அவர் என் மகளை வரைந்த பொழுது, ஒரு இடத்தில கூட ரப்பர் பயன்படுத்தவில்லை . அவ்வளவு அழகாக என் மனதில் , ஓவியம் வரைந்துகொண்டே இருந்தார் .

அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், சென்னைவாசிகள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஒத்தழைப்பு இருந்தால், நல்ல திறமைசாலி , நேர்மையானவர் , நல்ல நிலைமைக்கு வருவார் .

அவர் பெயர் சுரேந்தர். அவர் எண்: 9150270159.

மெரினா பீச்சில், சாயந்தரம் 4 மணிக்கு மேலே சுரேந்தர் இருப்பார்.
 
நன்றி : ரௌத்திரம் பழகு

Source -► தமிழால் இணைவோம்

Friday, July 5, 2013

மணிமாறன்

மணிமாறனை வாழ்த்துவோம் வாருங்கள்...!

முகம் மறைக்கும் தாடி, கந்தல் ஆடை, உடல் போர்த்திய அழுக்கு, பக்கத்தில் போனாலே துர்வாடை. எல்லா ஊர் பிளாட்பாரங்களிலும் - பஸ் ஸ்டாண்டுகளிலும் இப்படிப்பட்ட ஆசாமிகளைப் பார்க்க முடியும். நம்மையெல்லாம் அருவருப்புடன் ஒதுங்கிச் செல்ல வைக்கும் இவர்கள்தான் மணிமாறனைப் பொறுத்தவரை செல்லக் குழந்தைகள். 




இப்படிப்பட்டவர்களுக்கு முடி வெட்டி, குளிப்பாட்டி, ஆடைகள் தந்து அரவணைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கிறார் இந்த 27 வயது இளைஞர்.

பழனி புது பஸ் ஸ்டாண்ட்...
ஊரே பார்த்திருக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு படாத பாடுபட்டு ஷேவ் செய்து கொண்டிருக்கிறார் மணிமாறன்.

‘‘யாருடா நீ...’’

‘‘எம் பேரு மணிமாறன். திருவண்ணாமலையில இருந்து வர்றேன். என்னைய உங்க புள்ளையப் போல நெனச்சுக்குங்க!’’ - எத்தனை முறை பதில் சொன்னாலும், நிமிடத்துக்கொரு முறை அவரிடமிருந்து ‘‘யாருடா நீ’’ கிளம்பிக்கொண்டே இருக்கிறது.
அவரின் திமிறல், விலகல், தாக்குதல் என அத்தனையையும் சமாளித்து கட்டிங், ஷேவிங், குளியல் முடித்தபோது, அடையாளமே தெரியாத ஒரு பர்சனாலிட்டியாகிப் போயிருந்தார் அந்த ‘யாருடா நீ’.
‘‘பாவம் சார், அவர் பேரு கூட அவருக்குத் தெரியல. ஊருக்கு ஒரு மனுஷன் இப்படித் திரியிறான்.

இவங்கல்லாம் யாரு, எந்த ஊரு, எப்படி வாழ்ந்தாங்க... ஒண்ணும் தெரியாது. உங்களையும் என்னையும் விட சொகுசா காரு பங்களான்னு இவர் வாழ்ந்திருக்கலாம்... யாரு கண்டா? சில்லறை போடுறதையும் ‘சீ போ’ன்னு விரட்டுறதையும் தாண்டி இவங்களுக்கு என்ன செய்ய முடியும்னு ஒரு நாள் யோசிச்சேன். அதுதான் இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!’’ என்கிற மணிமாறன், திருவண்ணாமலை பக்கம் தலையாம்பள்ளம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். ‘‘அங்க இருந்து பழனி வரைக்கும் வந்திருக்கீங்களே’’ என்றால், ‘‘நீங்க வேற... ஒடிசா வரைக்கும் போறேன் சார்’’ என்று ஸ்தம்பிக்க வைக்கிறார்.

‘‘எனக்கும் ஏழைக் குடும்பம்தான். அப்பா, அம்மாவுக்கு கூலி வேலை. கஷ்டத்துல வளருற பசங்களுக்கு ரெண்டு விதமான எண்ணம் வரும்... ‘இனிமே கஷ்டப்படவே கூடாது. நிறைய சம்பாதிச்சு சேர்த்து வைக்கணும்’ங்கிறது ஒண்ணு... ‘கஷ்டம்னா இப்படியா இருக்கும்? இதை யாருக்கும் வரவிடவே கூடாது’ங்கறது இன்னொண்ணு. நான் இதுல ரெண்டாவது வகை. 16 வயசுல முதல்முதலா வேலை பார்த்து முதல் சம்பளத்துல 50 பேருக்கு சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கிக் கொடுத்தேன்.

‘சேவை செய்ய நிறைய பணம் தேவையில்லை. நேரமும் மனசும்தான் தேவை’ன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அதனால அதுக்கு ஏத்த மாதிரி என் தொழிலை அமைச்சுக்கிட்டேன். சனி, ஞாயிறுல திருப்பூர்ல இருந்து துணிகளைக் கொண்டு வந்து கடைகள்ல விக்கிறதுதான் இப்ப என் தொழில். மத்த நேரமெல்லாம் ரோட்டோரத்துல உள்ள மனுஷங்களுக்காகத்தான். மாசம் தவறாம வந்து அவங்களை சுத்தமாக்கி, தோற்றத்தை மாத்தி திரும்ப அங்கேயே விட்டுட்டுப் போறேன்’’ என்கிற மணிமாறன், இதற்காகவே தனியாக படித்திருக்கிறாராம்.
‘‘பல பேர் தொழுநோயாளிகளா இருப்பாங்க. கல்லடி பட்டோ, தவறி விழுந்தோ பெரிய காயங்களோட இருப்பாங்க. முறையான சிகிச்சை இல்லாம மோசமான கண்டிஷன்ல இருப்பாங்க. சுத்தம் செய்யிறதுல எனக்கு அருவருப்பு இல்ல. ஆனா அதை முறையா செய்யத் தெரியணுமே... நாம என்ன டாக்டரா, நர்ஸா? அதுக்காகத்தான் பெங்களூருவுல ஒரு கோர்ஸ் படிச்சேன்.

எனக்கு இது ரொம்ப சாதாரணமான விஷயம்தான். ஆனா, சுத்தியிருக்கறவங்களுக்கு இது பெருசா படுது. ஒண்ணு, ‘பைத்தியக்காரன்’னு காதுபடவே பேசுவாங்க. இல்லாட்டி, ‘ஆஹா... ஓஹோ’ன்னு பாராட்டுவாங்க. நான் ரெண்டுத்தையும் ஒரே மாதிரிதான் பார்க்கறேன். ஆனாலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இதுக்காக என்னைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்ததை மறக்கவே முடியாது.

இப்ப என்னைப் போலவே நல்லது செய்யணும்ங்கிற எண்ணத்தோட இன்னும் ஆறு பேர் என் கூட சேர்ந்திருக்காங்கன்னா, அதுக்கு இந்த அங்கீகாரம்தான் காரணம். அவங்களோட சேர்ந்து 2009ல ‘உலக மக்கள் சேவை மையம்’ ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி பதிவு செஞ்சேன். அதன் மூலமா தொடர்புகள் விரிஞ்சிருக்கு. கர்நாடகம், குஜராத், டெல்லி, அசாம், ஒடிஷா, பீகார், உத்தரப் பிரதேசம்னு தகவல் வர்ற இடத்துக்கெல்லாம் போறோம். சில இடங்கள்ல நாங்க ஒரு முறை போனதுமே, ‘இனிமே நாங்க பார்த்துக்கறோம் தம்பி’ன்னு பக்கத்துல உள்ள ஸ்கூல், ஹாஸ்பிடல்னு யாராவது முன்வர்றாங்க. ஒரு விளக்கை ஏத்தி வச்ச சந்தோஷம் பிறக்குது இதுல’’ என்கிற மணிமாறன் இந்தச் சேவை வேகத்தில் திருமணம் பற்றிக்கூட இதுவரை சிந்திக்கவில்லையாம்.

‘‘நாம நினைக்கிறோம், இவங்கல்லாம் பைத்தியக்காரங்க, பிச்சைக்காரங்கன்னு. ஆனா, இவங்கள்ல பல ஞானிகளை நான் சந்திச்சிருக்கேன். அழுக்கு உடம்புல இருந்து ஜவ்வாது வாசனை வந்ததைப் பார்த்து மிரண்டிருக்கேன். ‘என் தோற்றம் இப்படியே இருக்கட்டும்’னு இடி இடிச்ச மாதிரி சொன்னவங்ககிட்ட பதில் பேசாம திரும்பியிருக்கேன். இவங்களோட புழங்குற புண்ணியம் யாருக்குக் கிடைக்கும்? இதுவே எனக்குப் போதும்’’ - புன்னகை துளிர்க்கிறது மணிமாறனிடம்!


- பா.கணேசன்

Wednesday, July 3, 2013

லியொனார்டோ டா வின்சி Vs பல்லவ ஓவியன்


நன்றி :  Sasi Dharan

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. 

சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர். 

 லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர். 

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச்  செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும். 

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும். 

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

விவசாயி படிக்காததாலோ என்னவோ

நன்றி : இன்று ஒரு தகவல்.  &  தமிழால் இணைவோம்
(படித்ததில் வலித்தது)


ஒருநாள் கண்டிப்பாக Flat கள் அனைத்தும் விவசாய நிலமாக மாறும் நிலை வரும் அனால் அப்போது விவசாயிகள் யாரும் உயிருடன் இருக்கமாட்டார்கள்!
(படித்ததில் வலித்தது)
ஒருநாள் கண்டிப்பாக Flat கள் அனைத்தும் விவசாய நிலமாக மாறும் நிலை வரும் அனால் அப்போது விவசாயிகள் யாரும்  இருக்கமாட்டார்கள்!

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.
அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.
சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.
டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன்வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

சிந்திக்க வேண்டிய விஷயம்...!

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.
அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.
சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.
டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன்வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

நன்றி : இன்று ஒரு தகவல்.

Visit our Page -► தமிழால் இணைவோம்
சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Monday, June 24, 2013

"அங்கோர் வாட்" - உலகின் பெரிய வழிபாட்டுத்தலம்















மீள்பதிவு!

உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது.

பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! அதாவது "கிரீஸ்", அல்லது "ரோமன்" காலத்தில் இவர்கள் யாரோ இதை கட்டி இருக்கிறார்கள் என்று தவறாக எழுதிவிட்டார் .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!




Also Refer :  


3. UNESCO : http://whc.unesco.org/en/list/668






Friday, June 15, 2012

மலேசியா வாசுதேவன்.

நன்றி : தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

“ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். எனது காலத்தில் எல்லா இசையமைப்பாளர்களையும் நான் மிகவும் மதித்துள்ளேன். ஆனால் வாய்ப்புக்காக அவர்களிடம் சென்றதில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளி விட்டு எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை"

"எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறைதான் இருக்கிறது. அதுவே போதும். இவ்வாழ்வில் பெருமைப்படுவதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை, வருத்தப்படுவதற்கும் ஒன்றுமில்லை. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையும் ஆள் நான்” என்று ஒரு பேட்டியில் மலேசியா வாசுதேவன் கூறியிருந்தார்.

இன்று மலேசியா வாசுதேவனின் 69 ஆம் பிறந்தநாள்.

Tuesday, June 5, 2012

அபூர்வ ஆட்டோக்காரர் - பஞ்சதுரை


மீட்டருக்கு மேல் வாழ்த்து!
Photo: அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!

இந்த தகவலைப் படிக்க இந்து நிமிடங்கள் ஒதுக்குவீர்களா ???
பிடித்திருந்தால் பெருமையாக SHARE செய்யுங்கள் 

*'மீ*ட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர்,பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை
செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே
பேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.

 'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல்
வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல
நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்த
ரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!'' என்றனர்.

''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ
ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த
அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி
பணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

இந்த தகவலைப் படிக்க இந்து நிமிடங்கள் ஒதுக்குவீர்களா ???
பிடித்திருந்தால் பெருமையாக SHARE செய்யுங்கள்

*'மீ*ட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர்,பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே பேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.

'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல் வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்தரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!'' என்றனர்.

''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி
பணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

Sunday, May 6, 2012

தமிழன் இனத்தின் பெருமை!





தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை!!
அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை!!!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு

நாம் இதைப் பகிருவோம் நண்பர்களே!

நன்றி: முகநூல் தமிழ்ப் பக்கம்
பகிர்வுக்கு நன்றி : Sudhakar MuthuKrishnan

இந்த வீராங்கனையின் பரிதாப நிலை

நன்றி : Nagoorkani Kader Mohideen Basha
 
இந்த வீராங்கனையின் பரிதாப நிலையைப் பற்றி கேள்விப்படும் மற்ற வளரும் விளையாட்டு வீரர்களின் மனநிலை என்னவாகும்...?
 
 
 
 
ஒரு கோடிஸ்வர கிரிக்கெட் வீரருக்கு நோய் என்றதும் துடித்து விட்டார்கள் இந்திய அரசியல்வாதிகளும், ஊடகங்களுக்கும் மற்றும் விளையாட்டுத்துறையும். ஆனால் இந்தியாவுக்காக
வில்வித்தையில் தங்கபதக்கம வாங்கிய இந்த தங்கப்பெண் தன் வீட்டை பழுதுபார்க்க பண வசதி இல்லாமல் தனக்கு தங்கம பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்..

இந்திய விளையாட்டுத்துறைக்கு கிரிக்கெட் விரர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிவார்களா..?

கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எனனென்ன பரிசுகள்
தரப்படுகின்றன..? வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கம வாங்கி கொடுத்த ஒரு விராங்கனைக்கு இந்திய அரசால் ஒரு வீடு கூடவா தரமுடியவில்லை.?

அண்டை நாட்டில் இருக்கும கண்ட நாய்களுக்கு எல்லாம் சர்வதேச இளைஞன் விருது தரும் இந்த மானங்கெட்ட முட்டாள் இந்திய
அரசாங்கத்திற்கு இந்த விராங்கனைகளைப் போன்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...?

கொலவெறி பாடலுக்காக சம்பந்தபட்டவர்களோடு விருந்து சாப்பிடும் மாண்புமிகு இந்திய பிரதமருக்கு இந்த விளையாட்டு வீராங்கனை தெரியவில்லையா...?

இந்த வீராங்கனையின் பரிதாப நிலையைப் பற்றி கேள்விப்படும் மற்ற வளரும் விளையாட்டு வீரர்களின் மனநிலை என்னவாகும்...?

இப்படியே போனால் இநதியாவுக்கு கிரிக்கெட் தவிர மற்ற எந்த  விளையாட்டிலும் வெள்ளி டம்ளர் கூட கிடைக்காது..

இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம்...

Pls Share if u agree with this

Saturday, May 5, 2012

கார்ல் மார்க்ஸ்


பகிர்வுக்கு நன்றி :  : Nagoorkani Kader Mohideen Basha
 
'உலகத் தொழிலாளர்களின் காட்பாதர்' மார்க்ஸின் பிறந்த நாள் இன்று 05.05.2012.

“என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை"

- சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி.

மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை!

இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார்க்சியம்" எனும் தத்துவத்தை பிரசவிக்க அடித்தளமாக இருந்தது!

மார்க்சியத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் மனைவிதான் ஜென்னி!

தன் வீட்டுப் பொருளாதாரம் சுழியமாகிப் போன நிலையில் உலகத் தொழிலாளர்களின் உரிமைப் புரட்சிக்கு சுழிபோட்டவர் கார்ல் மார்க்ஸ்.. இன்று அவரது பிறந்த நாள்! (மே 5)

தொழிலாளியின் உழைப்பு, அதற்கு கொடுக்கும் விலை, அது செல்லும் பாதை, அதனால் சமுதாயத்தில் எப்படியான மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பதையெல்லாம் தம் வறுமையையும் பொருட்படுத்தாமல் ஆராய்ந்து ஆராய்ந்து "மார்க்சியம்" எனும் தத்துவத்துக்கு மூலவேராக "மூலதனம்" எனும் பெருநூலைக் கொடுத்தவர் காரல்மார்க்ஸ்!

பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான ரைன் நதிக்கரையோரத்தில் யூத மதத்தில் 1818-ம் ஆண்டு மே 5-ம் நாள் பிறந்தார் மார்க்ஸ்! படிப்பை முடித்த கையோடு ரைன் கெஜட் எனும் பத்திரிகையில் சேர்ந்தார்... பத்தே மாதத்தில் அதன் ஆசிரியரானார்! அவரது கட்டுரைகள் ஜெர்மனி மக்களுக்கு உதயசூரியனை முன்னிறுத்தியது!

ஏடும் எழுதுகோலும் எடுத்தாலே சிறைவாசம் என்ற அடக்குமுறையை எதிர்நோக்கிய கார்ல் மார்க்ஸுக்கு கரம் கொடுத்தவர் ஏங்கெல்ஸ்! இந்த தோழர்கள்தான் இன்றும் பெயரைக் கேட்டாலே சிலிர்க்க வைக்கும் "கம்யூனிஸ்டுகளின்" காட் பாதர்கள்!

நாடு கடத்தப்பட்ட காலங்களிலும் கூட தன் சிந்தனையை இழந்துவிடவில்லை! வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் வறுமையின் கோரப் பிடியில் உயிரிழக்க.. தாமோ மரணத்தின் விளிம்பில் நிற்க.. அந்தக் காலத்தில்தான் காலப்பொக்கிஷமான "மூலதனம்" என்ற நூலை எழுதி முடிக்கிறார் கார்ல் மார்க்ஸ்.

உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் தொழிலாளர்களை மூலதனமாகக் கொண்டு முதலாளி வர்க்கம் அவர்களையே சுரண்டும் கொடூரங்களை அ, ஆனா பாடம் எடுப்பதுபோல மூலதனத்தில் பகிரங்கப்படுத்தியவர் மார்க்ஸ்

மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் வரலாற்று நூல்களே இன்றைய இடதுசாரி உலகத்துக்கு ஆணிவேர்! இவர்களது தத்துவங்களை ஏந்தியவர்கள்தான் லெனினும் மாவோவும்! இவர்களுக்கே தொடர்பில்லாத தேசங்களில்தான் இவர்களது லட்சியங்கள் நிறைவேறி இருக்கின்றன!

மாமேதை மார்க்ஸின் சிந்தனைகள் நூற்றாண்டுகளைக் கடந்தும் விடுதலையை நேசிக்கும் எந்தத் தலைமுறையும் கையில் ஏந்தக் கூடிய புரட்சிகர ஆயுதமாகவே இருக்கும்!