கருமை
எப்போதும் அழகுதான். ஆழ்ந்த மெளனத்தை போதிக்க கருமை என்னும் நிறம்
மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. பிரபஞ்சப் பெருவெடிப்புக்கு முன்பான ஆதி
மோனநிலை கருமை. கருமை வெறுமனே இருளின் நிறம் மட்டுமல்ல அது ஞானத்தின்
நிறம். எதுவமற்ற வெண்மையில் இருக்கும் வசீகரத்தை விட எல்லா ரகசியங்களையும்
உள்ளடக்கியிருக்கும் கருமை...அதிவசீகரமானது.
வியாபர யுத்திகளால் நம்மை மூளைச் சலவை செய்து சிகப்பாய் இருப்பது உயர்வு என்று சொல்லிக் கொடுக்கும் கற்பிதப் பாறைகளை பகுத்தறிவுக் கடப்பாறைகளால் பெயர்த்து எறிவோம். நமது இனத்தின் ஒப்பற்ற அடையாளத்தை எப்போதும் போற்றுவோம்...கவர்ச்சியான கருமை நிறத்தை கொண்ட ஒரு தேசிய இனம் என்பதில் பெருமிதம் கொள்வோம்..!
நன்றி: தேவா சுப்பையா

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.