நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதர்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் பேர்புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர் பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர்
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.
கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.
செயல் வீரர்
காமராஜர் கட்சியில் தலைவராக இருந்தபோது முழுநேரத் தொண்டராவே இருந்தார்.
செயல், செயல், செயல் எனச் செயலில் கரைந்ததால் கர்ம வீரர் என்று புகழப்பட்டார் காமராஜர்.
‘நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ‘பாரதி’யின் இலக்கணம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.
காங்கிரஸ் காரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.
2. சுதந்திரத்துக்குப் பின் கட்சியில் பங்கு கொண்டவர்கள்.
காமராஜர் இளமைக் காலம் தொட்டே இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்து முழுநேரச் செயல் வீரர் என்னும் முத்திரைக் குத்தப்பட்டார்.
பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாடு, ‘செய் அல்லது செத்து மடி’ தீர்மானத்தை நினைவேற்றியது.
பம்பாய் காங்கிரசின் முடிவுகளை துண்டு பிரசுரங்ளாக நாடெங்கும் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
1942 ஆகஸ்ட் 8 – ஆம் தேதி காங்கிரஸ் கூட்டிய, இம் மாநாட்டில்தான் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்தானம் நிறைவேறியது.
மாநாட்டுத் தீர்மானங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்து மக்கள் அறியச் செய்ய வேண்டும். அப்பொறுப்பை ஏற்று, காமராஜர் அவர்கள் துண்டுப் பிரசுரங்களோடு தமிழ்நாடு நோக்கி ரயிலேறினார்.
திரு. சஞ்சீவரெட்டி அவர்களும் தலைவருடன் வந்தார். எந்நேரமும் எந்த ரயில் நிலையத்தில் வைத்தும் கைதாகலாம் என்ற நிலையில் பயணமானார்கள்.
இடையில் கைதாகி விட்டால் மாநாட்டுத் தீர்மானங்கள், மக்களை அடையாமல் போய்விடும். எனவே தனக்கிடப்பட்ட வேலையை செய்த் முடிப்பதுவரை, எக்காரணம் கொண்டும் கைதாகிவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்ட தலைவர் தலைவர் காமராஜர் அவர்கள், இடையில் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிட்டார்.
அன்றிரவு ராணிப்பேட்டை கல்யாணராமையர் வீட்டில் தங்கிவிட்டு ஒரு வணிகரைப்போல் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கோணிப் பைகளையும் தூக்கியபடி மாறூ வேடத்தில், தமிழகமெங்கும் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நேராக விருதுநகர் வந்தார் பெருந்தலைவர்.
தனக்கிடப்பட்ட செயலைத் தடையின்றிச் செய்து முடித்துவிட்டதால் தானாகவே விருதுநகர் காவல் நிலைய அதிகாரி திரு. எழுத்தச்சன் அவர்களை அழைத்துக் கைது செய்துகொள்ளும்படி கூறினார். இளமை முதலே பெற்றுக் கொண்ட செயலை எப்படியேனும் செய்து முடிக்கும் செயல் வீரராகவே கர்மவீரர் திகழ்ந்தார்கள்.
இந்தப் பயிற்சியும் பழக்கமும்தான் தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு வந்தபோது செயல்புரிய வாய்ப்பாக அமைந்தது.
எல்லோர்க்கும் இலவசக் கல்வி என்றதை செயலாக்கத் துணிந்தபோது கல்விச் செயலாளர்களும் திட்ட வல்லுனர்களும் செலவைக் கணக்கிட்டுக் காட்டி ‘முடியாது’ – என்று கூறி விட்டார்கள்.
அப்போது காமராஜர் அவர்கள், ”முடியாது என்று சொல்லவா நீங்கள் வந்தீர்கள் முடியும்ண்ணேன், முடிக்க என்ன வழி என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.
செயலை முடிப்பதில் செலவைப் பார்க்க கூடாது. செயலை முடிக்கச் செயலை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எண்ணும் செயல்வீரரே கர்மவீரர்.
திருச்சியில் ‘பெல்’ (BELL) நிறுவனம் அமைத்ததும் கரமவீர்ரின் செயல் வீரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இன்று உலகமெல்லாம் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்யும் அந்த பெல் (BELL) நிறுவனம் காமராஜரின் செயல் வெற்றி எனலாம்.
மக்கள் பணியில், செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார் தலைவர். முடியும் என்ற நோக்கோடுதான் செயல் பணிகளைத் தொடங்க வேண்டும். திட்டமிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்.
அந்த செயல் வெற்றிதான் அவர் காலத்தில் அணைக்கட்டுகளாக, மின் திட்டங்களாக, தொழிற்சாலைகளாக உருப்பெற்றன.
ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.
யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.
காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=275571
Courtesy : www.dinamalar.com
------------------------------------------------------------
Courtesy : Sakthivel Palanisamy sir for sharing the below info.
படிக்காத மேதையின் சாதனைகள்! திரு காமராஜர் 1954 முதல் 1963 நடந்த அவர் ஆட்சி ஒன்பது ஆண்டுகளில், கட்டபட்ட அணைகள், மணிமுத்தாறு, வைகை, ஆழியார், சாத்தனூர் மற்றும் கிருஷ்ணகிரி அணைகள். அவர் கொண்டுவந்த நீர் பசன திட்டங்கள், கீழ் பவனி, மணி முத்தாறு, க...ாவேரி டெல்டா, வைகை, அமராவதி, ஆரணி ஆறு, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு. திரு காமராஜர் தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்த பெரிய தொழிற்சாலைகள், BHEL திருச்சி, நெய்வேலி நிலகரி தொழிற்சாலை, மணலி ரேபிநேரி, ஊட்டி போட்டோ பிளம்ஸ், பெரம்பூர் ரயில்வே பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, ஊட்டி மற்றும் நெய்வேலியில் அனல் மின்நிலையங்கள் .......... எல்லாவற்றிற்கும் மேலாக எம் சிறுவர்க்கு மதிய உணவு திட்டம், தொழிற் கல்வி, முந்தைய ஆட்சியில் இருந்த பள்ளிகள் 12,000 அவர் ஆட்சியில் அவை 27,000 ................. - இப்படி திரு காமராஜரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றிக்கும் மகுடம் அவர் என் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர். (இந்த தகவல் அனைத்தையும் சென்ற ஆண்டு கனடாவில் இருந்து ஒரு நண்பர் தினமலரில் எழுதியிருந்தார் அதை மீண்டும் காமராஜர் பிறந்தநாளில் நான் எழுதி உள்ளேன்) மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் காமராஜரின் ஆற்றலை யாரோடும் ஒப்பிட முடியாது. பெல் நிறுவனம் எப்படி வந்தது என்று தெரியுமா? காமராஜர் முதல்வராக இருந்த பொழுது பல மாநிலங்களின் போட்டிக்கு இடையே போராடி பெல் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அப்பொழுது பெல் நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பனி திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அனால் அவர்கள் நிறுவனம் தொடங்க தோதான இடம் இல்லை என்று சொல்ல, காமராஜர் அவர்களிடம் இதை சொல்லத்தான் அரசாங்கம் உங்களை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளதா? என்று கேட்டுவிட்டு. பிறகு காமராஜர் அதிகாரிகளிடம் தான் திருச்சி வழியாக செல்லும் பொழுது ஒரு பெரிய விவசாயம் செய்யமுடியாத இடத்தை பார்த்ததாகவும் (தற்போது பெல் நிறுவனம் அமைந்துள்ள இடம்) அந்த இடத்தை போய் பார்த்து விட்டு வருமாறு சொன்னாராம். பிறகு அந்த அதிகாரிகள் காமராஜரிடம் வந்து அந்த இடம் நிறுவனம் தொடங்க மிகவும் பொருத்தமான இடம் என்று சொன்னார்களாம். இப்படி ஒரு தரிசு நிலத்தை வழயில் பார்த்த காமராஜர் அதை ஒரு தொழிற்சாலை ஆக்க கனவு கண்டு அதை மெய்யாக்கி காட்டினார். அனால் இன்றைய அரசியல் வாதிகள் கண்ணில் அதுபோல இடம் தென்பட்டால் வேலி போட்டு தன் பிள்ளைகள் பெயருக்கு பட்டா வாங்கி விடுவார்கள்.
http://www.perunthalaivar.org/english/life-history/
http://www.perunthalaivar.org/english/2008/01/25/karma-veerar/
http://en.wikipedia.org/wiki/K._Kamaraj
-----------------------------------------------------
நன்றி : http://urssimbu.blogspot.in
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர் ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்கலை வாசிக்க கற்றுக்கொண்டார் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
முறையான கல்வி இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறியாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வளவு செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும் நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும் சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம், அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும்.
நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
இதன் ஒலியாக்கம் "96.8 ஒலி வானொலி சிங்கப்பூர்"
புகைப்படதொகுப்பு நண்பன் "GOOGLE"
இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கின்றேன்
மறக்காமல் உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்
வாழ்க வளமுடன்
Courtesy : Sakthivel Palanisamy sir for sharing the second part of above info.
ReplyDelete