திருநெல்வேலி
பக்கம் "பைய" என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள், கேட்டு
இருக்கறீர்களா ? அந்த சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள் . சைக்கிள்
எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால் அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின்
குரல் வரும் , "ஏல பைய போயிட்டு வா என்னா"
அன்று காமத்துபால் படித்துக் கொண்டிருந்தேன். காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாக சிரிக்கிறாள். இந்த சூழ்நிலையை வள்ளுவர் சொல்கிறார்
"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."
இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர்.
அட, 2000 ஆயிரம் வருடதிற்கு முன் திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தையை இன்னும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்று வியந்தேன்.
தமிழ் பிறந்த இடம் பொதிகை தானோ, திருநெல்வேலி மக்கள் வார்த்தைகளில் இன்னும் ஆதித் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பெருமைப்படுகிறேன் அந்த தமிழ் கற்றதர்க்கு.
-Siva Subramaniam.

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.