சுற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவரை இன்று சந்தித்தபோது குமுறித் தீர்த்துவிட்டார்:
"உத்ரகாண்ட் பிரளயத்தால் எத்தனை வளங்கள், மனித உயிர்கள் இழப்பு. இதற்குக் காரணம், "இயற்கைச் சீற்றம்" என்கிறார்கள். உண்மைதான். ஆனால் இயற்கையைச் சீண்டுவது மனிதன்தான்.
இயற்கையை மனிதன் சேதப்படுத்தும்போதெல்லாம், "மனிதா என்னைக் காப்பாற்று" என்று அது கூக்குரல் இடுவதுதான் வெள்ளம், நிலச்சரிவு போன்ற வெளிப்பாடுகள். ஆனால் மனிதன் தொடர்ந்து அப்படித்தான் செயல்படுகிறான்" என்று விவரித்தவர் கடைசியாகச் சொன்னார்:
"இயற்கையை மனிதன் அழித்தால், மனிதனை இயற்கை அழிக்கும்... முற்றிலுமாக!"
டி.வி.எஸ். சோமு
Visit our Page -► தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.