Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, August 9, 2013

கணவன் மனைவி & COMPUTER

Source : ரிலாக்ஸ் ப்ளீஸ்

மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.

மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.

மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.

மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.

மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.

மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.

மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.

மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.

மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.

மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.

மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.

மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.

மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER

Thursday, July 25, 2013

வாழ்க்கை வலி

குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை
குழந்தை பிறக்காத தம்பதியின் வாழ்க்கை
வாழ்க்கை துணையில்லாத விதவை
விதவை செல்லமுடியாத திருமணம்
திருமணம் முடியாத கன்னிப்பெண்
கன்னிப்பெண் தொலைத்துவிட்ட கற்ப்பு
கற்ப்பு பற்றி கவலைப்படாத விபச்சாரி
விபச்சாரியின் வயிற்றில் பிறந்த குழந்தை

-வாழ்க்கை வலி

Visit our Page -► தமிழால் இணைவோம்

Saturday, July 13, 2013

செத்தான்டா சேகரு

ஒரு குடிகாரன் பாரில் உக்காந்து அழுது கிட்டிருந்தான். .
அவன் முன்னால் ஒரு கிளாசில் நிறைய சரக்கு இருந்தது.

அப்போ அங்க வந்த இன்னொருவன் அதை எடுத்துது மட மடன்னு குடிச்ச்சிட்டான்.

இந்தப் பையன் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தான்,.
வந்தவனும் ஓகே .....ஓகே .....எனக்கு அழுவது பிடிக்காது. உனக்கு வேண்டும் என்கிற அளவுக்கு வாங்கித் தருகிறேன் அழாதே என்றான்.

இவனோ, அது பிரச்சினை இல்லை. இன்று எனக்கு ஆபீசில் சரி பாட்டு. வீட்ட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. நானும் வீட்டுக்கு வர காரை எடுக்கப் போனேன். கார் திருட்டுப் போயிருந்தது. போலிசும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வாடகை கார் பிடித்து வீட்டுக்குப் போனேன். வீடு போனதும் தான் தெரிந்தது என் பர்சை அந்த வாடகைக் காரில் விட்டுட்டேன்ன்னு,....

அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை, அவளும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. சரின்னு தான் இந்த பாருக்கு வந்தேன்.

என் வாழ்கையை இத்தோட ..... முடிச்சுக்க்கலாம்ன்னு தான் சரக்கு முழுசும் விஷம் கலந்து வைத்து விட்டு..... காத்திருந்தேன்.

அப்போ தான் அதைநீ எடுத்து சொட்டு விடாம குடிச்ச,
இப்போ உன்னை நினைத்துத் தான் அழுது கிட்டு இருக்கேன். 

Monday, July 8, 2013

சாந்தியும், சமாதானமும்

ரெண்டு மூணு நாளா மனசே சரியில்லை.

ஒரு நல்ல மனிதரைப் பார்த்து அறிவுரை கேக்கலாம்னு தோணிச்சி.

அப்பதான் அவரோட நினைவு எனக்கு வந்துச்சி. எங்க ஊர்ல ஒரு யோகி இருக்கார். எப்போ பார்த்தாலும்,

"மனம் சாந்தியும், சமாதானமும் அடையட்டும்"னு சொல்லிகிட்டேயிருப்பார்.

அவரைப் போய் பார்க்கலாம்னு நினைச்சி அவர் வீட்டை தேடிப் போனேன். வீடு பூட்டியிருந்துச்சி.

பக்கத்து வீட்டுல போய் கேட்டேன்,

"ஏங்க ... இங்க "மனம் சாந்தியும், சமாதானமும் அடையட்டும்"னு சொல்லிகிட்டு இருப்பாரே ... அவர் இல்லையா?"

"ஓ ... அவரா? இங்கே இல்லைப்பா"

"ஏன்?"

"ஒரு நாள் "சாந்தி"யை அடைஞ்சிட்டார்"

"அய்யய்யோ ... அப்புறம் என்னாச்சி?" பதறினேன் நான்.

"அப்புறம் என்ன ... இப்போ சமாதானத்துக்காக அலைஞ்சிகிட்டிருக்கார்"

Source : # ரிலாக்ஸ் ப்ளீஸ்

Wednesday, July 3, 2013

20 வருட திருமண வாழ்க்கை

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்க :


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

# இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...

Monday, July 1, 2013

ஆண் பாவம்!

#பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா அவளையே சுத்தி சுத்தி வரான், வேலை வெட்டி இல்லாத பயல்ன்னு மட்டம் தட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு ஒதுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழுறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு சொல்லுவாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க.. ?"அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா"ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!"ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?"ன்னு ஏச்சு.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு புலம்பல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.

Tuesday, June 18, 2013

சின்ன வயசுல நான்

நன்றி : களவாணி பய & சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?



1.புஸ் ஆன பட்டாச எடுத்து பேப்பர்லாம் கிழிச்சு அந்த தூள எடுத்து பத்த வச்சு புஸ்ன்னு எரியும் அத பாத்து சந்தோசப்பட்டது

2.வீடுகட்ட கொட்டுன மணல்ல.. பல வீடு கட்டிருக்கேன்

3.மயில் இறகு குட்டி போடும்-னு ஷார்ப்நற் துல தீனியா போட்டு புக்-ல வளர்ப்போம்

4.யாராவது காலை தாண்டி போனா வளர மாட்டேன்னு நினைச்சேன்

5.சைக்கிள் ஓட்டக் கத்துக்கும் போது நான் இடிச்ச பக்கத்து வீட்டு கிழவி ஆறாவது நாள்ல டிக்கெட் வாங்கிடுச்சு

6.பள்ளி மதிய உணவு முடிந்து செல்லும் போது அக்ரஹார வீட்டு calling bell அடித்து எழுப்பி விட்டு ஓடிவிடுவேன்

7.உங்க வீட்டுக்கு பாம்பு வரும் சிலேட்டு குச்சி போடுன்னு பொம்பள புள்ளைகள பயமுறுத்தினேன்

8.டீச்சர் அனைவரையும் சுட்டு விட்டு நாம் மட்டும் இருந்தால் என்னாகும் என்று கேட்டு headmistress வந்து enquiry நடத்தினார்

9.கட்டிப்பிடிச்சி தூங்குனா குழந்தை பிறந்துடும்னு நினைச்சேன்

10.White & white உடையில் தலை விரிகோலத்துடன் புகைக்கு நடுவில் வருவது தான் ஆவி என்று நம்பியது

11.எழுத்தாளர் சுஜாதான்னா ஒரு பொண்ணுன்னு நெனச்சேன்

13.சிலேட்டு குச்சி சாப்பிட்டுருக்கேன்

14.எங்க மாத்ஸ் டீச்சர் வண்டி பஞ்சர் பண்ணது

15.ஈவில் டெட் படத்தப் பாத்துட்டு நைட்டு உச்சா வந்தா கூட பயத்துல எந்திரிக்க மாட்டேன்

16.நீராருங் கடலொடுத்த பாடும் போது கண்ண மூடினே இருப்பேன் தொறந்தா மிஸ் அடிப்பாங்கனு பயம்.

17.பலமுறை வானத்தையே பார்த்துட்டு இருந்தேன் ‘சக்திமான்’ வருவார்னு!

18. பரீட்சை காலையில் மட்டும் திடீர் பக்தி பிரவாகம்

19.exam கு சரியா படிக்கலன்னா இன்னிக்கு CM அல்லது PM போய் சேர்ந்துடனும்னு வேண்டிக்குவேன்!

20.கெட்ட வார்த்தை கேட்டாவே காதை பொத்திக்குவேன்

21.அன்வர் 194 அடிச்சப்ப பொரண்டு பொரண்டு அழுதேன்

22.சச்சின் அவுட் ஆனா அழுவேன் ..

23.தேர்வுக்கு முந்தைய நாள் இரவு சாமி படத்துக்கு முன்னாடி பென்சிலை வைத்து பவர் ஏற்றி எடுத்துச் சென்றிருக்கிறேன்

24.இந்தியா வும் ,பாகிஸ்தான் ஒன்னு சேர்ந்துடணும் , அப்றோம் பாரு டா இந்த ஆஸ்திரேலியாவ எப்புடி அடிப்போம் னு யோசிச்சன்.

25. Aeroplane அ கொஞ்சம் கீழ பறக்க வெச்சா நாம வீடு மொட்ட மாடிலையே எறங்க வேண்டிய வங்கலாம் எறங்கிடலாம்ன்னு நெனச்சேன் ..


26. உடும்பு பிடிச்சா, 7 கழுத கத்தினாதான் விடும்னு நம்பினேன்

27.ஊசிப் போடுற டாக்டரை ஒரு வாட்டி கடிச்சது ..

28.விளம்பரத்துக்காக ஆட்டோவில் தரும் நோட்டீஸை விடாமல் விரட்டிச் சென்று வாங்கியிருக்கிறேன்

29. “தலைவலி” எப்டி இருக்கும்னு தாத்தாகிட்ட கேட்டு அவருக்கே தலைவலி வர வச்சுட்டேன்

# இவ்வளவும் பொறுமையா படிச்சீங்களே, இதுல  நம்பர் பாயின்ட் காணோமே கவனிச்சீங்களா.. அது என்னனு தெரிஞ்சுக்கணுமா..? சரி வேணாம் விடுங்க, எதுக்குங்க பிரச்சன...

Wednesday, May 16, 2012

ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி?

(இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)

1. முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்காருதுன்னு வச்சிக்குவோம்... அத மடார்ன்னு அடிச்சி கொன்னுட கூடாது. உடனே உங்க கேமராவ எடுங்க. அந்த கொசுவ மட்டும் zoooooooooooooooom பண்ணி ஒரு ஃபொட்டோ எடுத்து "என்னை இன்று கடிக்க வந்த கொசு அப்புடிங்கற கேப்ஷனோட போட்டீங்கன்னு வைங்க லைக்கு அள்ளிக்கும்.

2. அப்புறம் நீங்க Onsite la இருக்கமாதிரி (இல்லைன்னா கூட) காட்டிக்கனும்.. அதாவது உங்க profile ல லொக்கேஷன்கிற எடத்துல யூரோப்புல உள்ள எவனுக்குமே தெரியாத ஒரு ஊர போட்டுக்கனும். அது மட்டும் பத்தாது... நீங்க லெதர் ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு ஒரு மரத்த கட்டி புடிச்ச மாதிரியோ, இயற்கைய ரசிக்கிற மாதிரியோ ஒரு ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கனும். (லெதர் ஜாக்கெட் மிகவும் முக்கியம் அமைச்சரே) அப்பதான் நீங்க ஆன் சைட்டுல இருக்கீங்கன்னு நம்புவாங்க.

3. கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள அப்லோடு பண்ணனும். அது என்ன கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோன்னு கேக்குறீங்களா..அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா அது எல்லாரும் எடுக்குற சாதாரண ஃபோட்டோ... அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா அதுக்கு பேரு photography. அதுமட்டும் பத்தாது... அந்த போட்டோவுல உங்க friend list la உள்ள எல்லாரையும் மறக்காம tag பண்ணி விட்டுடனும்.

4. நீங்க கொடைக்கானலோ இல்லை ஊட்டியோ டூர் போனீங்கன்னா அங்க ஒரு சுமாரா ஒரு 500 போட்டோ எடுத்துருப்பீங்க... அத அப்புடியே ஃபேஸ்புக்குல பொளக்குன்னு அப்லோட் பண்ணிட கூடாது... "குப்புசாமி Uploaded 305 photos in his album kodai tour" ன்னு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்துச்சின்னு வச்சிக்குங்க... எல்லாரும் வெறிச்சி ஓடிருவாய்ங்க. நீங்க அப்லோட் பண்ண ஃபோட்டோக்கள்ல சைடு ஆங்கிள்ல திரும்பி நிக்கிறது, சிரிக்கிறது , மொறைக்கிறது வெக்கப்படுறது, பிஸ் அடிக்கிறதுன்னு கண்ட ஃபோட்டோக்கள்லாம் இருக்கும்... அதுல கேமரா ஷேக் ஆயி பொகை மூட்டமாவே ஒரு 50 ஃபோட்டோ இருக்கும். அத அப்புடியே upload பண்ணுவீங்க. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா உங்கள எல்லாரும் unfriend பன்ண கூஅட வாய்ப்பு இருக்கு

5. பசிக்கொடுமை, ஏழ்மை இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கி எழனும்.... "உதாரணமா உகாண்டா மக்கள் சாப்பாட்டிறே கஷ்டப்படுறாங்க... நம்ம ஊர்ல சினிமா காரங்க மேல பால ஊத்திகிட்டு இருக்காங்க.. " அப்புடின்னு ஒரு சைடு பசியால் வாடுற மக்களையும், இன்னொரு பக்கம் ரஜினி படத்துக்கோ அஜித் படத்துக்கோ ரசிகர்கள் பால் ஊத்துற மாதிரி உள்ள படத்தையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஃபோட்டோ upload பண்ணனும்.. அதுனால நீங்க பட்டினியா இருக்கனும்னோ இல்ல பசிக்கிறவங்களுக்கு சாப்பாடு போடனும்னோ அவசியம் இல்ல. நீங்க பசிக்குதுன்னு பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாம 1000 ரூவாய்க்கு பீஸ்ஸா... பர்க்கர்... ஸ்பிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரோல் ன்னு என்ன வேணா சாப்புடலாம். எவனுக்கும் தெரியாது.

6. அப்புறம் இந்த விஜய்,அஜித் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்கள பாத்தாலே உங்களுக்கு அலர்ஜி வரனும்.. அதாவது நீங்க US la தான் born and brought up மாதிரியும், only இங்கிலீஸ் படங்கள் தான் பாப்பீங்கங்குற மாதிரியும் "இந்த தமிழ் படங்களே இப்புடித்தான்... so boring ya" அப்புடின்னும் சீனப்போடனும்...

7. அப்புறம் இந்த டி.ஆர், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இவங்கல்லாம் உங்க கண்ணுல மனுஷங்களாவே தெரியக்கூடாது... அவங்கள எதோ வினோதமான ஜந்துக்கள் மாதிரியே நீங்க ட்ரீட் பண்ணனும்.. அவங்கள பத்தின போஸ்ட் எல்லாத்துலயும் "so funny ya" "funny guys" இந்த மாதிரி கமெண்ட்ஸ் மட்டுமே போடனும். "funny" ங்கற வார்த்தை மிக முக்கியம்.

8. உங்க ஒரிஜினல் பேர முடிஞ்ச அளவு உபயோகிக்க கூடாது... கத்திக்குத்து கந்தன், பெட்டி பெருமாளு, வெட்டு வேலு, பாக்கு ரவின்னு ரவுடிங்க எப்புடி அடைமொழியோட இருக்காங்களோ அதே மாதிரி உங்க பேருக்கு முன்னாடியோ பின்னாடியோ எதாவது ஒரு அடைமொழிய நீங்களே சேத்துக்குங்க.. உதாரணமா உங்க பேரு அசோக்குன்னா அத டான் அசோக்குன்னும் அசாருன்னா அத அசால்டு அசாருன்னும் மாத்தி வச்சிக்கலாம்.. காலப்போக்குல அதுவே உங்களுக்கு நிரந்தரமான பேராயிடும்.

9. அப்புறம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி பண்ணனும்.. அது எப்புடி பண்றது? கைக்காசு எதும் போயிருமோன்னு பயப்படாதீங்க.. அது ரொம்ப ரொம்ப ஈஸி.. ஒரு குழந்தை சோகமா இருக்கமாதிரி ஒரு ஃபோட்டோ... அதுக்குள்ள, இந்த குழந்தை எலும்பு புற்று நோயால் அவதிப்படுகிறது... அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவை..Facebook accepted to give 10 paise per each like... please like and save the child" அப்புடின்னு ஒரு ஃபோட்டோவ எவனாவது share பண்ணிருப்பான்.... அதுக்கு மத்தவங்க மாதிரியே ஒரு லைக்போட்டு முடிஞ்சா share பண்ணி விடுங்க.. அவ்ளோதான் கொழந்தைய காப்பத்தியாச்சி... மத்ததெல்லாம் facebook பாத்துக்கும்.

10. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... நேர்ல பாத்தா நீங்க சில பேர்ட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...முன்னாடி விட்டு பின்னாடி அசிங்க அசிங்கமா கூட திட்டிருப்பீங்க.. ஆனா ஃபேஸ்புக்ல அப்புடி வெளிப்படையா எல்லாம் பேசக்கூடாது.. "கலக்குங்க மச்சி" "சூப்பர் மச்சி" "ஆல் த பெஸ்ட் மச்சி" இப்புடிதான் பேசி பழகனும்.. குறிப்பா பொண்ணுங்களுக்குள்ள நிறைய கொழாயடி சண்டை வரைக்கும் நடந்துருக்க்கும்.. ஆனா ஃபேஸ்புக்ல "hi dear" "you are looking awesome dear" "have fun dear" "u rocking dear" இந்த மாதிரி தான் பேசனும். dear ங்கறது பொண்ணுங்களுக்கு தான்... பசங்க அவசரப்பட்டு யூஸ் பண்ணி தோஸ்தானாவ ஃபார்ம் ஆயிராதீங்க..

11. அப்புறம் சில ஃபோட்டோக்கள் upload பண்ணனும்னு போது உங்களுக்கு அதுக்கு என்ன description குடுக்குறதுன்னு தெரியாது.... அந்த மாதிரி சமயங்கள சமாளிக்க ஒரு ஆயுதம் இருக்கு... "how many likes?" அப்புடின்னு போட்டு விட்டுடனும்.... சில தாவர உண்ணிகள் அதுக்கும் லைக் போடும்... ஆன சில ஊண் உண்ணிகள் கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

12. உங்க ஸ்டேடஸ்க்கு likes வாங்குறது ரொம்ப முக்கியம்... சில சமயம் என்ன status போடுறதுண்ணே தெரியலையா...ஒரு சூப்பர் ஐடியா இருக்கு...

If you find your ஜட்டி size in the below numbers.. like it.. அப்புடின்னு போட்டு கீழ

"75, 80, 85, 90, 95, 100, 110"

இப்புடி போட்டுருங்க... இதுக்குள்ள எல்லாரும் வந்துதான் ஆகனும்... கண்டிப்பா லைக் போட்டு தான் ஆகனும்.. அப்ப கோவணம் கட்டுறவங்கள கவர் பண்ண என்ன பண்றதா? அட கோவணத்துக்கெல்லாம் சைஸ் இல்லப்பா... free size தான்.

14. ஸ்டேடஸ் update ரெம்ப ரெம்ப முக்கியம்.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள சர்ஃப் வாங்கிட்டு வர சொன்னிச்சின்னி வச்சிக்குங்க உடனே பொசுக்குன்னு போயிற கூடாது... வந்து facebook ல "surf வாங்க போறேன்"னு status update பண்ணிட்டு தான் போகனும்.. ஏஞ்சொல்றேன்னா நீங்க சொல்லாம கொல்லாம சர்ஃப் வாங்க பொய்ட்டீங்கன்னு வச்சிக்குங்க உங்க ஆடியண்ஸ் எல்லாம் எங்க பொயிட்டீங்க எங்க பொய்ட்டீங்கன்னு தவியா தவிச்சி போயிருவாங்கல்ல.. அது மட்டும் இல்ல நீங்க உச்சா போறதுக்கு முன்னால கூட ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு தான் போகனும்...

15. அதே மாதிரி நீங்க உங்க location la பாப்ப நாயக்கம் பட்டி ன்னு போட்டு வச்சிருப்பீங்க.. திடீர்னு அலுவலக பணிக்காக ரெண்டு நாளூ எருமைநாயக்கம் பட்டிக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம் உடனே லொக்கேஷன் மாத்திரனும்... ஏன்னா உங்கள பாக்க வர்ற உங்க ரசிகர்கள், பாப்பநாயக்கம்பட்டிக்கு போய் ஏமாந்துரகூடாது பாருங்க...

16. அப்புறம் இந்த பொண்ணுங்கள கண்டா உங்களுக்கு சுத்தமா புடிக்கவே கூடாது.. ச்ச ச்ச... வெளியில மட்டும் தான்...உதாரணமா ஒரு காதல் தோல்வி பாட்டு வந்துச்சின்னு வச்சுக்குங்க அதுல பொண்ணுங்கள தாக்குற மாதிரி உள்ள ரெண்டு லைன அப்புடியே லபக்குன்னு கவ்வி உங்க ஸ்டேடஸ்ல போட்டுக்கணும்.... அப்பதான் நீங்க ரவுடியா ஃபார்ம் ஆக முடியும்... உங்க நண்பர்கள் வட்டமும் பெருசாகும்.. ஏன்னா இந்த குடிகாரய்ங்களும், பொண்ணுங்களால பாத்திக்கப்பட்டவிங்களூம் தான் உடனே friend ஆயிருவாய்ங்க. நீங்க பல பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்குன அப்புறம் தான் அந்த state ku போனீங்கங்குற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது.

17. அப்புறம் இந்த ஆடு வெட்டுறவிங்க, கோழி வெட்டுறவிங்க, மரத்த வெட்டுறவிங்களையெல்லாம் "பாவிங்க" "மனிதாபிமானம் இல்லாதவிங்க"
"இதுங்கள்ளாம் என்ன ஜென்மம்" "இரக்கமில்லாதவர்கள்" ன்னு எப்புடி எப்புடி முடியுமோ அப்புடியெல்லாம் திட்டனும்.. ஏன்னா வெட்டுறங்கதான் குற்றவாளிங்க.. என்ன... நம்ம ஆடு கோழியெல்லாம் திங்கலைன்னா அவங்க ஏன் வெட்ட போறாங்கன்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்க கூடாது... அவங்க பண்றது தப்பு தான்.. இதயெல்லாம் கேட்டா நீங்க அப்பாடக்கர் ஆக முடியாது...

என்ன ஓகே வா..வெற்றியோட வாங்க

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.

Courtesy : Mark Zuckererg :)

Courtesy : Srinivasan (Who shared this)

Sunday, April 8, 2012

Don't COPY if u can't PASTE..!! :)

A Famous Inspirational Speaker Said:
"Best Years of My Life were spent in the Arms of a Woman who was not MY WIFE !"

Audience was in Shock & Silence.
He added, SHE WAS MY MOTHER..

Applause & Laughter!

A Top Manager Tried this at Home.
After a Heavy Drink, He said loudly to his Wife, in Kitchen: Best Years of My Life were spent in the Arms of a Woman who was not my WIFE..!

Standing for a Moment trying to recall the 2nd Half, he finally blurted out: I can't remember who She was..

By the time he regained his Senses, He was on a Hospital Bed, recovering from Burns of Boiling Water.

And finally the Moral of the Story is : DON'T COPY IF YOU CAN'T PASTE..!! :)

Saturday, March 24, 2012

A little Indian boy to GOD (Rs 50 & Rs 20)

Courtesy & Thanks : Unknow (Got it in a forward mail)

Funny but true.. read....laugh

A little Indian Boy wanted Rs50, so he prayed 4 weeks, but nothing happened.
Finally he decided 2 write a letter 2 God requesting Rs50.

When post office staff received a letter addressed 2 God, they forwarded it 2 the President.

... ... President was so amused, she instructed her secretary 2 send the little boy Rs 20.
As she thought Rs50 would be a lot of
money for him.

The little boy was delighted with Rs20 & decided 2 write a thank u note 2 God.

'Dear God, Thank u very much 4 sending d money. However,
I noticed dat u ev sent it through 'Rashtrapati Bhavan' (Through Government Building) & those corrupt donkeys ate my 30 rupees! :D'

Hope U Will Share It Too And thus Give Your Friends Some Good Laugh :p