புகார் கொடுக்க வந்தவரிடம் பரிவு காட்டிய எஸ்ஐக்கு பாராட்டு! ! ! !
பட்டினப்பாக்கம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன். இவரிடம் மந்தவெளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆடிட்டர் சங்கரராமன் (60) தனது தபால் நிலைய பாஸ் புத்தகம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்து அதற்கான சான்றிதழ் பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த புகார் குற்றப்பிரிவு சம்பந்தமானது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரிவை சேர்ந்த எஸ்ஐ ஜானகிராமன் அவரை அலைக்கழிக்காமல்அவரது செல்போன்நம்பரை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார். ஆடிட்டருக்கோ சந்தேகம்.
ஆனால் அடுத்த 2 நாளில் அவருக்கு போன் வந்தது. உங்களுக்கு சான்றிதழ் ரெடியாகி விட்டது, வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் எஸ்ஐ ஜானகிராமன். சங்கரராமனுக்கு ஆச்சரியம். சான்றிதழை பெற்றுக் கொண்டு எஸ்ஐ ஜானகிராமனிடம் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு பாராட்டு கடிதம் எழுதி இ,மெயில் அனுப்பினார். அதில், எஸ்ஐ ஜானகிராமனின் அன்பானஉபசரிப்பும், துரித நடவடிக்கையும் என்னை கவர்ந்தது. அவர் வைத்திருக்கும் முறுக்கு மீசை பயமுறுத்துவதற்கு பதில் நம்மை பார்த்து புன்முறு வல் பூத்ததுபோல் இருந்தது. இதுபோன்ற போலீஸ்காரரை என் 40 ஆண்டு கால பணியில் நான் பார்த்ததும் இல்லை.கேள்விப்பட்டதும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதை படித்த கமிஷனர் ஜார்ஜ் எஸ்ஐ ஜானகிராமனை அழைத்து பாராட்டினார். ஆடிட்டரின் கடிதத்தை 500 பிரதிகள் எடுத்து சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பினார். எஸ்ஐ ஜானகிராமனை முன் மாதிரியாக கொண்டு அனைத்து போலீஸ்காரர்களும் செயல்படுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
Visit our Page -► தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.