Source page : ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலத்திலும் Relaxplzz )
சுற்றுச் சூழல் போராளி கோவை ம.யோகநாதன். கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார்.
இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார் . மரக் கன்றுகளை நடுவதொடு விட்டுவிடாமல் ஒரு ஆண்டுவரை மரங்களை பாதுகாத்து, பராமரிக்கும் விதத்தையும் சொல்லி கொடுக்கிறார். சுதேசியாக வாழும் இவர் வெளிநாட்டு மரக் கன்றுகளை தொடுவதில்லை என்பதில் வைராக்கியம் உள்ளவர். தனது வருமானத்தில் பெரும் பகுதியை இந்த பசுமை வேள்விக்கே செலவிடுகிறார். மரம் வெட்டும் கொடுமையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
வார விடுமுறையான ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகைப்படக்காட்சி(Slide Show) நடத்தி விழிப்புணர்வு புரட்சி செய்து வருகிறார். இதுவரை 3000 பள்ளிகளுக்கு மேல் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தி இருக்கிறார். இவரின் இந்த சேவைக்காக, தமிழக அரசு, 2008ல் "சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது" , குடியரசு துணைத் தலைவரிடமிருந்து, 2010ல் "பசுமைப் போராளி விருது", "சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாணவரும், தன் பிறந்த நாளன்று, ஒரு மரக்கன்றை நட்டு, பராமரித்து வளர்த்து வரும் வகையில், "உயிர் வாழ ஒரு மரம்'”என்ற திட்டத்தை உருவாக்கி, இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்களை சேர்ந்துள்ளார். இவரின் சேவையை கண்டு வெளிநாட்டவர் ஒருவர் இவருக்காக ஒரு இணணயதளம் இலவசமாக அமைத்து தந்திருக்கிறார்.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.