Source : தமிழால் இணைவோம்
1) ஏறி பயணம் செய்யிற பேருந்துல கல்லை விட்டு எறிவோம், எரிக்கவும் செய்வோம் ஏன்னா இது சுதந்திர நாடு.
2) ரோட்ல கண்ட கண்ட இடத்துல அசிங்கம் பண்ணுவோம், குப்பை கொட்டுவோம் ஏன்னா இது சுதந்திர நாடு.
3) சேலை, சுடிதார், மோர்டன் ஆடை இப்படி என்ன ஆடை போட்டாலும் அந்த பெண்னை கைபேசில படம் பிடிசுகிட்டே வரலாம், அத எவனும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.
4) வேலை இல்லாதவன் பத்தாயிரம் ரூபா திருடினா சிறைல போடலாம், அரசாங்க வேலைல உள்ளவன் பத்தாயிரம் கோடி திருடினாலும் வெளிய சுத்தலாம் ஏன்னா இது சுதந்திர நாடு.
5) வீடு இல்லாதவன் புறம் போக்கு நிலத்துல அரையடி ஆக்கிரமிச்சா இடிக்க சட்டம் இருக்கு, பணக்காரன் ஆறு ஏக்கர் புறம் போக்க வளச்சு போட்டா சட்டமே மாற்றி அமைக்கப்பட்டு ஏன்னா இது சுதந்திர நாடு.
6) நடைபாதை உணவகத்துல சாப்பாட்டுல பூச்சி இருந்தா உணவு பாதுகாப்பு சட்டம் பாயும இதுவே அரசாங்க உணவு சேகரிப்பு கிடங்குள பூச்சிகள் இருந்த உணவு பாதுகாப்பு சட்டமே திருத்தி அமைக்கப் படும்... ஏன்னா இது சுதந்திர நாடு.
7) மாடா உழைச்சு நல்ல அரிசிய அரசாங்கத்துக்கு விப்பான் ஆனா மலிவுவிலை கடைகள் மூலமா நாறிப்போன அரிசிய தான் அரசாங்கம் உழவனுக்கு கொடுக்கும் அத இவன்னாலயும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.
8 ) ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி 67 வருடம் ஆச்சு ஆனா நீதி மன்றத்துல தமிழில் வழக்காட சுதந்திரம் வாங்கி ஒரு வருடம் கூட ஆகல, இதுவும் சுதந்திர நாடு.
9) இலங்கையில் லட்சகணக்கான இந்தியர்களை(தமிழர்கள்) கொன்னான் நடவடிக்கை எடுக்கல, அமெரிக்காவில் பத்து இந்தியர்களை(சீக்கியர்கள்) கொன்னா உடனே நடவடிக்கை எடுக்குறாங்க. யாரும் ஏன்னு கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.
10) இல்லாதவனுக்கு ஏற்றவாறு சட்டம் இயற்றாமல் அவனை இல்லாமல் ஆக்கத்தான் சட்டம் இயற்றுகிறார்கள். இதை கேட்க்க ஆளில்லை ஏன்னா இது சுதந்திர நாடு.
11) நம்ம வரிப்பனத்துல நமக்கே இலவசம் கொடுப்பான் அதையும் இலுச்சுகிட்டு வாங்கிகிட்டு அவனுக்கே ஓட்டு போடுவோம்..
என்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.
#நந்தமீனாள்
மதுரை.
Source -► தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.