நண்பன்
ஒருவன் பழைய ஸ்கூட்டி வாங்குவதற்காக வந்திருந்தான் .முகவரி கண்டு பிடிக்க
முடியாமல் சிரமப்பட்டு என்னை அழைக்கவே நானும் சென்றிருந்தேன். அந்த
வீட்டில்தூசி படிந்து கவனிப்பார் அற்று கிடந்தது ஒரு ரோஸ் நிற ஸ்கூட்டி .அருகில் பார்த்த போது வாங்கி சில மாதங்களே ஆகியிருந்தது.
நண்பன் என்ன விலை என்று கேட்டான் மெலிந்த தோற்றமுடைய அந்த வீட்டு மனிதர் ''ஐயாயிரம் கொடுத்துட்டு எடுத்துட்டு போங்க ''என்றார் .இவ்வளவு மலிவான விலைக்கு ஏன் இதை விற்கிறீர்கள் ?என்று கேட்ட போது இதை வாங்கி கொடுத்து என் மகளை பறி கொடுத்துட்டேன் சார் !காலேஜ் படிக்க போன பொண்ணு ...டேங்கர் லாரி அடிச்சு செத்து போயிட்டா .
என் பொண்ணு நல்லா படிப்பா சார் .பத்தொன்பது வயசு பாட்டெல்லாம் அற்புதமா பாடுவா .ரெண்டு நிமிஷத்துல ரோட்ல அடிபட்டு தலை நசுங்கி செத்து போயிட்டா .இந்த வண்டியை அப்படியே மயானத்தில கொண்டு போய் வச்சு கொளுத்தி போடலாம்னு கூட நெனச்சேன்.
என் பொண்ணு கரெக்டாதான் போனா .ஆனா லாரிக்காரன் அடிச்சுட்டான் .கேஸ் நடக்குது .என்ன பிரயோஜனம் ? நானேகார் எல்லாம் விட்டுட்டு இப்போ டவுன் பஸ்ல தான் போறேன். ரோட்டை கடக்க பயமாயிருக்கு .என் பொண்டாட்டி வீட்டை விட்டு வெளியே வர்றதே இல்லை .நீங்களாவது இதை பத்திரமா ஓட்டுங்க .என் பொண்ணு அநியாயமா செத்து போயிட்டா யாரை தப்பு சொல்றதுன்னே தெரியல என தன் அடங்காத துக்கத்தை வெளிப்படுத்தினார்.
அந்த ஸ்கூட்டியை விலை கொடுத்து வாங்க மனமின்றி நண்பன் ஒடிந்து போய் நின்றான் .நான் ஒருபோதும் பார்த்தறியாத அந்த மாணவியின் சாவுச்செய்தி என்னை கலக்கமடையச் செய்தது என்ன தவறு செய்தால் அந்த மாணவி ? ஏன் விபத்து என்று அதை ஒரு செய்தியாக கடந்து போகிறோம் ?பெண்ணை இழந்த குடும்பம் கொள்ளும் இந்த வலி , ஏன் யாரோ ஒருவரின் துயரமாக கைவிடப்படுகிறது ?
சிறிது வெளிச்சம் -எஸ் .ராமகிருஷ்ணன்
இன்று வயது வராத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது சாதாரண காட்சி மட்டுமல்ல .பல சிறுவர்கள் அவர்களது தம்பி தங்கையை சில சமயங்களில் அம்மாவே அவர்களது பின்னால் அமர்ந்து கூட்டி செல்கிறார்கள் .இன்று எந்த போலீசாரும் சாலை விதி மீறல்களையோ ,அனுமதிக்கப்பட்ட நபருக்கு மேல் பயணிப்பதையோ பொருட்படுத்துவதே இல்லை .எனக்கு வட்டத்தை தெரியும் ,மாவாட்டறவன தெரியும் என அல்ப விஷயங்களிலெல்லாம் அரசியல் வியாதிகள் தலையிடுவதால் சாவுங்கடா என விட்டு விட்டார்கள்.
சாலையில் செய்யப்படும் விதிமீறல்களையும் தவறுகளையும் திருத்திக்கொள்ள யாருக்கும் மறு வாய்ப்பு கிடைப்பது இல்லை .அப்பன் காசில் வாங்கி அலப்பறை கொடுக்கும் தறுதலைகள் போகட்டும் .வாகனம் கீழே விழுந்தால் தூக்க கூட வலுவற்ற சிறுவர்களெல்லாம் வாகனம் ஓட்ட அனுமதிப்பது ஏன் ? சாலைகளில் பலி கொடுப்பதற்காகவே குழந்தைகளை பெற்று கொள்கிறார்களோ ?

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.