பகிர்வுக்கு நன்றி : Suren & Vijay
ஈரைந்து மாதங்கள் மட்டும்
சுமையாய் இருப்பேன் என எதிர் பார்திருந்திருப்பாய் !
இருபத்தைந்து ஆண்டுகளும் சுமையாய் இருக்கிறேனே !
தரி கேட்டு திரிந்தவனை
தடம் மாறி போனவனை
தட்டிக்கொடுத்து ஆதரித்தாயே !
உனக்கு நான் என்ன செய்ய முடியும் ?
அம்மா !
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
அதனால்,
... உன்னை தெய்வத்திற்கு ஒப்பிட மாட்டேன் !
அப்படி ஒருவன் இருப்பனேயாயின்
அவன் உன் முன் கதிரொளியில் மறையும் நிலவே ஆவான் !
எழுநூறு கோடி மக்கள் இருப்பினும்
எனக்கென்னவோ உனக்காக மட்டுமே
உலகம் இயங்குவதாய் எண்ணம் !
"அம்மா"
மூன்றெழுத்தில் முடிந்து விட்டது என் வாழ்கை !
-Vijay S
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.