
தினசரி செய்தித்தாள்கள் மெகா ஊழல்களைப் பற்றி பக்கம் பக்கமாக விவரங்கள், விசேஷங்களை வெளியிட்டபடி இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊழல் கதைகள் பூதம்போல் புறப்பட்டு முதல்நாள் வெளிவந்த ஊழலை சிறியதாக்குகிறது. நாடு முழுவதும் இந்தநிலை. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் ஒன்று மாற்றி ஒன்று ஊழல் வெடிப்பு & தலைமை தாங்குவது தமிழ்நாடு!
இந்திய ஊழல் சரித்திரத்திற்கு நடுவிலும் ஒரு மாநிலம், இந்தியாவில் ஊழல் குறைந்த & மக்கள் நல மாநிலமாகவே முன்னேறி, இந்திய ஊழல் தீபகற்பத்திற்கு நடுவே ஒரு புனிதத் தீவாகவே விளங்குகிறது என்றால் அது குஜராத். இந்தக் கருத்தைச் சொல்வது நானல்ல ஐ.நா.சபை. குஜராத்தில் நடைபெறும் நல்லாட்சி நிர்வாகம், அதனால் அந்த மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றம் இவற்றை கணக்கில் கொண்டு உலக அளவில் குஜராத்திற்கு இரண்டாம் பரிசைக் கொடுத்துள்ளது ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக சங்கதிகளுக்கான துறை. பொதுமக்கள் சேவைக்காகவும் மறைவற்ற தன்மை , பொறுப்புள்ள மக்கள் நல நிர்வாகம் & இவற்றிற்காக கடந்த ஆண்டும் உலக அளவில் பரிசைத் தட்டிச் சென்றது குஜராத்திலுள்ள மோடி அரசு.
பத்து வருடத்திற்கு முன்னால், 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத் மாநிலம், ஒன்பது வருட மோடி ஆட்சியில் இன்று பற்றாக்குறையே இல்லாமல், 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் மக்களை ஏமாற்ற தரமற்ற பொருட்களை இலவசம் என்ற பெயரில் அள்ளித் தெளிக்கும்போது, குஜராத் அரசு ஏழைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையிலும் தரமான நிலையிலும் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது. ரேஷன் கடை என்றாலே தரத்தைப் பொறுத்தவரை குப்பைத்தொட்டி என்ற நிலை குஜராத்தில் இல்லை.
185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ள குஜராத்தில், இவற்றை முறையாக இணைத்ததன் மூலம் பத்து ஆண்டு காலத்தில் விவசாயப் பொருளாதாரம் பிரம்மிக்கத் தக்கவகையில் வளர்ச்சி பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக மின்சாரக் கட்டணம் பெரிதாக உயர்த்தப்படவில்லை. ஆனால், என்ன ஆச்சரியம் & பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஓடிய குஜராத் மின்சார வாரியம் இன்று லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘ஜோதிக்ராம் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் ‘பவர் கட்’டே இல்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இப்படிப்-பட்ட ஒரு தலைவர் நாட்டின் தலைமையை ஏற்றால் நாடு சுபிட்ச-மடையும் என்று கட்சிபேதமில்லாமல் பொதுமக்கள் நினைக்கு-மளவு மோடி சாதித்திருக்கிறார். ஹுண்டாயும், ஃபோர்டும் தமிழ்நாட்டை விடுத்து, அடுத்த முதலீட்டை குஜராத்தில் செய்யப் போகின்றன. இரண்டு மணிநேரத்தில் அவர்களுக்குத் தேவையான எல்லா லைசென்ஸ்களையும் கொடுப்பதாக வாக்களித்துள்ளார் மோடி. இப்படி இந்தத் தொழில் குழுமங்கள் அடுத்த முதலீட்டைக் குஜராத்தில் செய்வதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு முறையிட்டிருக்-கிறது(!). ரோஷப்பட்டு என்ன பயன்? வாங்குவதை வாங்கிக்-கொண்டு செய்ய-வேண்டியதைச் செய்யா-விட்டால், வப்பாட்டி கூட வாசலில் வருபவனுடன் போவாள் என்று சொல்வார்கள் & அந்தக் கதைதான் நம் மாநிலத்தில்!
-நன்றி :கார்க்கோடன்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.