தொலைக்காட்சியில் நடிகர்/நடிகைகளின் செயற்கையான புன்சிரிப்பில் பூரிக்காமல்
'குக்கரில்' வழக்கமான சோற்றை தவிர்த்து
அரசியல் வாதிகளின் போலி வாழ்த்துகளை அலட்சியப்படுத்தி
பாலிஎஸ்டர் போன்ற போலி உடுப்புக்களை விடுத்து
எங்கோ நமக்காக கடனில் மூழ்கி கிடக்கும்
நம் உடன் பிறவா உழவனை நினைத்து
பருதியாடைகளை பெருமையுடன் அணிந்து
நம் உறவுகளுடன் இயற்கையாய்
கொண்டாடுவோம் , இபொங்களை
தமிழர்களே !
தை திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் உங்கள் இல்லங்களில் உற்சாகமும் மகிழ்வும் பொங்கட்டும் வருடம் முழுவதும் நிலைத்திருக்கட்டும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.