வரிகள் : வாலி
படம் : பூந்தோட்ட காவல்காரன்
வருடம் : 1988
இசை : இளையராஜா
பாடகர் : கே.ஜ.ஜேசுதாஸ்
----------------------------------------------------
----------------------------------------------------
ஆ : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கன்னமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி....
ஆ : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
பெ : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
பெ : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்
ஆ : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
ஆ : மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் ஓடியதே
இரு: அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
ஆ :சிந்திய வெண்மணி சிப்பியில் ................
தாய் தனத்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
பெ : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
ஆ : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
பெ : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
ஆ : என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
இரு: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
இரு: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானுடன் என் மகனே
சிந்திய வெண்மணி சிப்பியில் .....
you tube : http://youtu.be/e_fCjI0YTX0
சிந்திய வெண்மணி சிப்பியில் .....
you tube : http://youtu.be/e_fCjI0YTX0
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.