இன்னைக்கு காலைல FB வந்ததும் எனக்கு தெரிஞ்ச விசயங்களே பாத்து எனக்கு தோணினது இது தான்..
நேத்து வரைக்கும் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்த ஒரு நபர் இன்னைக்கு திடீர்னு இல்ல, ஆனா இதுலே எனக்கு தெரிஞ்சு ஒரு காரணமும் என்னால் யோசிக்க முடியவில்லை, அதெல்லாம் இனி நான் யோசிக்க போறது இல்லை... ஒரு வேலை அவங்களுக்கு ஏதும் காரணம் இருக்கலாம்..
இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும், ஏனோ தெரியல, என்னை அறியாமல் என்னில் ஒரு சிறு புன்னகையும் #அன்பே சிவம் படத்தின் இந்த வசனங்களும் நியாபகம் வருது.. அதை எனக்கு தெரிஞ்ச மாதிரி என்னோட விளக்கமும் சேர்த்து இங்கே பதிக்கிறேன்...
குறிப்பு : எனக்கு தமிழோ, கவிதையோ , தெரிஞ்ச வசனங்களோ கூட மிக சரியாய் எழுத்து / இலக்கண பிளை இல்லாம எழுத/சொல்ல வராது.. முடிஞ்சவரை சரியாய் எழுத முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதனால இதை படிக்க நேரும் நபர்கள் இதை கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. நேரமும், மனமும் இருந்தால் பிழைகளை சுட்டிகாட்டுங்கள் , திருத்திகொள்கிறேன்.
முதலில் காரணம் கருதி என்னை பற்றி கொஞ்சம் :
எனக்கு தாய் மொழி தமிழா இருந்தாலும் ஆரம்ப பள்ளி முதல் பட்ட மேல்படிப்பு, வேலை என்று இன்று வரை ஆங்கில வழி கல்வி மற்றும் அதை சார்ந்தே இருந்தததும், என் சுற்றம், சூழ்நிலை, நண்பர்வட்டம் மற்றும் பல காரணங்களால் என்னால் தாய் தமிழை பாடப்புத்தகம் தவிர்த்து வேறு ஏதும் படிக்கவோ ருசிக்கவோ முடியவில்லை.. பள்ளி மேல்படிபிலும் என் கையெழுத்து நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் என்னை அடையாளம் கண்டு கொண்ட தமிழ் அய்யாவின் அன்பாலும், தயவாலும் கொஞ்சம் ஊக்கம் கிடைத்தது. எனக்கு தாய்மொழி வலி சிந்தனை இல்லாமல் ஆனதை எண்ணி பலமுறை மிகவும் வருந்தி இருக்கேன்.. அதற்க்கு முயற்சியும் வழியும் தேடி அலைந்தும் இருக்கிறேன்.. இதனால் கல்லூரியில் பட்ட மேல்படிப்புக்கு எனக்கு தமிழ் / ஆங்கில இலக்கியம் படிக்கவே ஆர்வம், ஆசை இருந்தும், பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களின் நிர்பந்தத்தில் அது முடியாமல் போனது. கல்லூரி நாட்களில் (முதல் வருடம் மட்டும்) தமிழ் ஆங்கில இலக்கிய பேராசிரியர்களின் தயவாலும் கொஞ்சம் படிக்கச் நேர்ந்தது.. ஆனால் அது முதல் வருடம் மட்டுமே. பின்னாளில் அது ஏனோ முடியாமல் போனது.. ஆனால் அதற்கு எல்லாம் ஒரு ஆறுதலாய் இருந்தது இந்த முகபுத்தகம் /ப்ளாக் தான்.
இப்போது நான் சொல்ல விரும்புவது :
அன்புள்ள சகமனிதருக்கு,
எனக்கு எழுத்து உலக அனுபவம், தமிழ் புலமை எல்லாம் சுத்தமாவோ, இல்ல நீங்க எதிர்பாக்குற அளவுக்கு இல்லாமல் இருந்தாலும்,சில வருஷம் முன்னாடி, இந்த (முகபுத்தகம் /ப்ளாக்) எழுத்து உலகம் எனக்கு சுத்தமா பரிச்சியபடாத அப்போ , நான் பார்த்த/படிச்சு எழுத்துக்கள் எளிமையா எனக்கு கொஞ்சமாவது புரியுரே மாதிரி எழுதின நெறைய நபர்கள்ள நீங்களும் ஒருத்தர்... நேர காலம் இல்லாம 24/7 ஆபீசே கதின்னு இருந்த கால கட்டம் அது. வேற எந்த பொழுதுபோக்கும் வடிகாலும் இல்லாம ரொம்ப பைத்தியம் புடிகுரே மாதிரி ரணமா இருந்தப்ப முகபுத்தகம் /ப்ளாக் தான் எனக்கு நல்ல உறுதுணையாக இருந்துச்சு.. அதில் நான் படிச்சு ரசிச்ச கவிதைகள் / கதைகள்ல / கட்டுரைகள் எல்லாம் என்னை ரொம்பவே கவர்துச்சு.. அதில் இருந்த பலரின் எழுத்துக்கள்ள உங்களுடையதும் ஒன்னு.. இவை எல்லாம் என்னை ஒரு அளவுக்காவது நல்ல முறையில் பாதிச்சிருக்க வேண்டும்.. அதனால் தான் அதுக்கு பின்னாடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகபுத்தகம் /ப்ளாக் தான் எனக்கு நல்ல தோழமையா இருந்ததை உணர்ந்தேன்.
இப்படி ஒரு சமயத்தில் சிறு காலமேனும் உங்கள் வலைப்பூவில் முகப்புத்தக பக்கத்தில் எனக்கு தெரிந்ததை கிறுக்க அனுமதி அளித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
உங்கள் "பதிவுகள்" பத்தின என் அனுபவங்களை நெறைய சொல்லலாம், ஆனா குடுத்த காசுக்கும் மேல கூவுரானே'நு ஒரு இளக்காரமான நினைப்பை யாருக்கும் வர வைக்க வேண்டாம்னு சொல்லல.
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யார் கிட்டயும் நான் நன்றியும் மன்னிப்பும் தக்க சமயத்தில் சொல்லவோ கேட்கவோ கூச்ச பட்டதே இல்ல. உங்க கிட்டயும் நன்றியும் சரி மன்னிப்பும் சரி ஏற்கனவே நான் எனக்கு தெரிஞ்சு கேட்கனும்னு தேவைப்பட்டபோ, தோனினப்போ கேட்டிருக்கேன்.. இருந்தாலும் இப்போதும் ஒரு முறை சொல்லிகிறேன்.. என்னை அறியாமல் நான் ஏதும் உங்களை புன்படுதீருந்தா என்னை மன்னிச்சிடுங்க.
http://hari1103.blogspot.com/2013/06/i-want-to-say-sorry-thank-you.html
http://hari1103.blogspot.com/2013/06/sorry-and-thank-you.html
எண்ணையும் இவ்வளவு நாள் மதிச்சு ( !! ??) இல்ல பொறுத்துகிட்டு, இப்பவும் அன்-ப்ரெண்ட் பண்ணினாலும், பிளாக் பண்ணாம, இது வரைக்கும் நான் சொன்னதுக்கு (கேட்ட கேள்விக்கு, கமெண்டுக்கு எல்லாம்) நேரம் ஒதுக்குன உங்களுக்கு ரொம்ப நன்றி..
எளிமையா எனக்கு (மொழி தெரிஞ்ச எல்லாருக்கும்) புரியுரே மாதிரி இருகுங்குரே ஒரே காரணத்துனால.. உங்களோட நெறைய எழுத்துக்கள் பதிவுகள் இப்பவும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்பவும் இனிமேல் எப்பவும். :)
இனிமேல் உங்க பொழப்ப கெடுக்க (தொல்லை பண்ண) மாட்டேன். பொழச்சு போங்க ... :P ஹ.ஹ.ஹ..
அடுத்த விநாடி ஒளிந்துகிடக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்..
உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான்..
ஆச்சர்யங்கள் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்..
அன்பு நன்றிகளுடன்
ஹரி ஷங்கர்.
நீங்களும், இனி நானும் சரி "இதுவும் கடந்து" போய்டே இருக்கே போறோம்.. :)
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.