நன்றி : தமிழ் தந்த சித்தர்கள்
சிலகாலம் மனத்தில் நிற்கும், பல பலகாலம் மனதில் நிற்கும். ஆனால், எதுவும் எல்லாக் காலமும் நிலைத்திருப்பதில்லை. நீங்கள் நினைத்திருந்ததை எல்லாம் மறக்கும்படி ஆகும்.படித்த நூல்கள், பெற்ற கல்வி, உற்ற மனைவி, பிள்ளைகள், உறவினர
்
என்று எல்லாவற்றையும் மறக்க வேண்டிவரும். உறக்கத்தில் மறப்பதைப்போல்
இறக்கும் போது அனைத்தையும் மறந்து விட நேரும். ஆகவே, நிலையற்ற வாழ்வை
விடுத்து நிலையான மரணமில்லாப் பெரு வாழ்வை அடைய முயற்சிக்க வேண்டும்
என்கிறார் சிவவாக்கியர்.
ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்த மாயம் சொல்லடா சுவாமியே!!!
- ஆசான் சிவவாக்கியர்.
ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்த மாயம் சொல்லடா சுவாமியே!!!
- ஆசான் சிவவாக்கியர்.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.