நன்றி : தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி
வீட்டில் பூச்சித்தொல்லையா இருக்கா?
வீட்டில் நாம் குடியிருக்கிறோமோ, இல்லையோ, ஆனால் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக நன்கு வீட்டை உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையே. அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கிறது. இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.
1. எறும்புத் தொல்லையை நீக்க...
வீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, சாக்லேட் மற்றும் கழுவ போட்டிருக்கும் டீ கப்பில் எறும்புகளாக இருக்கிறதா? ஏனெனில் எறும்புகளுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சம் வைத்திருக்கும் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதுவே அதன் சொர்க்கம், உணவு என்றும் கூட சொல்லலாம். அத்தகைய உணவுப் பொருட்களை வெளியிலேயே வைத்தால் போதும், பின் வீடே எறும்பு மயமாகிவிடும். இத்தகைய எறும்பை வராமல் தடுக்க, வீட்டில் இருக்கும் கிச்சனை தினமும் படுக்கும் முன் சுத்தம் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். அவ்வாறு செய்தும் எறும்புத் தொல்லை நீங்கவில்லை என்றால், மாதத்திற்கு ஒரு முறை கிச்சன் முழுவதையும் மண்ணெண்ணெய் வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எங்கும் எறும்பு வருவதை தடுக்கலாம்.
2. பல்லி வராமல் தடுக்க...
வீட்டில் எந்த சுவற்றைப் பார்த்தாலும் ஒரு பல்லியாவது இல்லாமல் இருக்காது. அதற்கு நிறைய பேர் முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால் பல்லியானது வராது என்று நம்புகின்றனர். உண்மையில் அப்படி வைத்தால் வராது தான், ஏனெனில் அதில் இருந்து வரும் நாற்றத்தினால் பல்லியானது வராமல் தடுக்கலாம்.
3. கொசுக்களை அழிக்க...
கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் உணவைத் தான் உண்ணுகின்றன. ஆனால் கொசுக்களானது நமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. பெரும்பாலும் கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராமல் கூட கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் கொசுக்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக நிறைய வீட்டுப் பொருட்கள், அதனை அழிக்க இருக்கின்றன. அவை,
- கற்பூரம் மற்றும் மண்ணெண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் மெசினான ஆல்-அவுட், குட் நைட் பாட்டிலில் ஊற்றி பிளக்கில் மாற்றிவிட வேண்டும். இதனால் கொசுவை வராமல் தடுக்கலாம்.
- தேங்காய் ஓட்டை எரிக்கும் போது வரும் புகையால் கூட கொசுவை வராமல் தடுக்கலாம்.
4. கற்பூரத்தால் பூச்சிகளை தடுக்கலாம்...
கற்பூரமானது ஒரு சிறந்த பூச்சிக் கொல்லிப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சல்பர் இருப்பதால், பூச்சிகள் அதன் வாசனையில் இறந்துவிடும். மேலும் கற்பூரமானது ஒரு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் நிறைந்த பொருள். கொஞ்சம் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, அதனை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி வந்தால், அந்த நாற்றத்திற்கு வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.