நன்றி : Viji Senthil
தோழி Viji Senthil அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவை பகிர்ந்துகொள்கிறேன்
ஏ.ஆர்.முருகதாசை தெரிந்த நமக்கு Coimbatore ஏ.முருகானந்தன் அவர்களை தெரியாது.படியுங்கள்.
மாதவிலக்கு காலத்தில் தனது மனைவி பழைய துணிகளை பயன்படுத்துவதை கண்ட முருகானந்தன் ஏன் நீ நாப்கின் பயன்படுத்துவது இல்லை என கேட்க்கிறார். நான் நாப்கின் வாங்கும் செலவில் நமது குடும்பம் ஒரு வாரத்திற்கு பால் வாங்கி விடலாம் என்கிறார் மனைவி. வெல்டிங் பட்டறை வைத்து இருந்த முருகானந்தம் அன்று முதல் குறைந்த விலையில் நாப்கின் தாயாரிக்கும் இயந்திரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இரவும் பகலும் உழைத்து அவர் கண்டு பிடித்த நாப்கினை மனைவியிடம் தர, அது பயன்படாது என்று மறுக்கும் மனைவி அவர் முயற்சியை இகழ்கிறார். மனம் தளராத முருகானந்தம் தனது தொழிலை கை விட்டு விட்டு இதே முயற்சியாக இருக்க குடும்பத்தில் குழப்பம். தாயும், மனைவியும் இவரை பைத்தியம் என்று இகழ்ந்து பிரிந்து செல்கின்றனர். கோவை மருத்துவ கல்லூரியில் உதவி கேக்க அவர்களும் இவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. முயற்சி இவரை கை விடவில்லை. 2006ம் ஆண்டு இவர் கண்டு பிடித்த இயந்திரம் ஜனாதிபதியின் தேசிய விருது பெறுகிறது.
இன்று ?
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய முருகானந்தம் ஓரளவு, ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொண்டார். புகழ் பெற்ற IIT மற்றும் IIM நிறுவங்களில் உரையாற்றி வருகிறார். இந்தியாவில் 23 மாநிலங்கள் இவரை அழைத்து கிராமங்களில் இவரது இயந்திர பட்டறையை நிறுவி உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்கள் இதன் மூலம் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். வெறும் ஒரு ரூபாய்க்கு தரமான நாப்கின் விற்பனை செய்வதால், கோடிக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆப்ரிக்க நாடுகளிலும் தற்சமயம் தனது இயந்திரத்தை அறிமுகம் செய்ய உள்ளார். இங்கு உள்ள நண்பர்கள் கிராமப்புறங்களில் உள்ள பெண் தோழிகளிடம் இதை பற்றி எடுத்து உரைத்தால் நல்லது. அவர்களுக்கும் வருமானம். பெண்களின் ஆரோக்கியமும் மேம்படும். நேற்றைய ஹிந்து இதழின் METRO PLUS இல் இவரைப் பற்றிய செய்தி வந்து உள்ளது.
என்னைப் (Viji Senthil) பொறுத்த வரை ஏவுகணை,செயற்கை கோள்களை விடவும் இது உன்னதமான கண்டுபிடிப்பு. கோடிக்கணக்கான பெண்களின் சார்பில் திரு.முருகானந்தன் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.
--------------------------------------
நன்றி : THE HINDU
http://www.thehindu.com/life-and-style/society/article2875390.ece
Phone no.: 9283155128
email: muruganantham_in@yahoo.com

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.