Movie Name : Engeyum eppodhum
Music Director : Sathaya.C.
Year of release : 2011
Cast : Jai, Anjali, Annanya,
Movie Director : Saravanan
Lyricist : Na.Muthukumar
Producer : A.R.Murugadoss
1. Siru kavidhai
நம்பவில்லை
நம்பினேன்
ஏன் நம்பவில்லை ?
எதற்காக நம்பினேன் ?
நம்பியதற்கும், நம்பாததற்கும் காரணம் உண்டோ ?
உண்டு
நம்பிக்கை தான் வாழ்க்கை
எப்படி ?,
சொல்லு எப்படி ?,
சொல்லு சொல்லு சொல்லு ?
எப்படி ?
============================================
2.
கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா முறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா முறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன கேட்டா குறச்சலுன்னு பேர வைப்பேங்க
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல
கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
களட்டி விடவும் மனசே இல்லை
என்ன கொடுமையடா
காஞ்சி போன முளகா உள்ள
கொட்டி கிடக்குது விதைய போல
காரமாக வெடிச்சா உள்ள
பாவ நிலமயடா
ஆகாயம் மேலே தான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
வெயிலோடு மழையும் தான்
ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்த கொஞ்ச நேரம் பயணம் சென்று
முடிவது எங்கேயோ
அட அட
டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
அட என்ன கேட்டா சுமைதாங்கின்னுபேரு வப்பேங்க
கப்பல் வாங்க வந்திருப்பாளோ
செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திரிப்பாளோ
ஒன்னும் புரியலையே
டிரைலர் போல முடிந்திடுவாளோ
ட்ரைன போல நீண்டிவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ
ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேட்டு
ஆள கொல்றாரே
இவ இவ வந்த போதில் வந்த கோபம்
இப்ப இல்லையடா
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்
சாகர் ச சா சா ச ரி க ம நி
சாகர் ச சா சா ச ரி க ம நி
கோவிந்தா இன்பமிங்கே கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா முறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
=============================================
3.
உன் பேரே
தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
சூடான பேரும் அதுதான்
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான்
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை,
மிளரவைக்கும் மிருகம்மில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா ?
பெரிதான பேரும் அதுதான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்ததே போகும்,
எப்படி சொல்வேன் நானும்,
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா ?உன் பேரே
தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்=============================================
4.
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான் உன் காதல் உணர வைத்தாய்
ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம் தடதடதட வென துடிக்க
நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும் ...
மனம் நடந்ததை நடிக்கும் ...
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப் பார்க்குதே...
பார்க்குதே ..பார்க்குதே ..தோற்குதே
அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தான் அடி
இந்த மௌனத்தின் மயக்கம் ..
ரொம்ப பிடிக்குது எனக்கும் ..
உன் பேச்சும் மூச்சும் என்னைத் தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள் பற்றிக் கொண்டதே..
கொண்டதே.. கொண்டதே... வென்றதே
சொட்ட சொட்ட ....
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.