படம் : வானம்பாடி
பாடகர் : P.சுஷீலா
இசைஅமைப்பாளர் : K.V.மகாதேவன்
வரிகள் : கவியரசு கண்ணதாசன்
---------------------------------------------------------------------------------------




---------------------------------------------------------------------------------------
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓ..ஓ..கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓ..ஓ..எதிலும் அவன் குரலே
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் (2)
கண் மயங்கி ஏங்கி நின்றேன் கண்ணிச் சிலையாக நின்றேன் (2)
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே...ஓ..ஓ..கண்ணீர் பெருகியதே
(கங்கைக் கரை...)
கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் இரண்டில் அள்ளிக் கொண்டான் (2)
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான் (2)
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே...ஓ..ஓ..கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை
என்றோ அவன் வருவான்...ஓ..ஓ..என்றோ அவன் வருவான்
கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை (2)
கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை (2)
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ...ஓ..ஓ..காற்றில் மறைவேனோ
நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்...ஓ..ஓ..நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணாஆஅ....
கண்ணாஆஆஅ......
கண்ணாஆஆஆஅ........
(கங்கைக் கரை...)
-------------------------------
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.