பொன்னியின் செல்வன் முற்றும்......
நான் என் கல்லூரி நாட்களுக்கு பிறகு நீண்ட நாட்கள் (சுமார் நான்கரை ஆண்டுகள் ) கழித்து
'அமரர் கல்கி' அவர்களின் இந்த அருமையான நாவெல் படிக்கலானேன்...... சங்ககாலத்து சோழநாட்டிலே புவி சக்கரவர்த்தி சுந்தர சோழர் நாட்டிலே சில காலம் வாழ்ந்து விட்டு வந்திருக்கிறேன் ... என் அடிநெஞ்சில் பதிந்துவிட்ட ஒரு அருமையான வரலாற்று நாவல் இந்த 'பொன்னியின் செல்வன்'... இதில் வந்த
வல்லத்து இளவரசர் வந்தியத்தேவரும் , இளைய பிராட்டி குந்தவையும் , சுந்தர சோழ சக்கரவர்த்தி, அனிருத பிரமராயர்,அருள்மொழி வர்மரும் (பொன்னியின் செல்வனான ராஜா ராஜா சோழரும் ), அவர் அருமை காதலி கொடும்பாளூர் இளவரசி வானதியும், இன்னமும் பளுவேடையர்களும், நந்தினியும் , சேதன் அமுதனும் (உத்தம சோழன்), அவர் காதலியும் பட்டமகிஷி பூங்குலழியும் , ஆழ்வார் கடியனும் , மலையமானும், கந்தமாறனும் , மணிமேகலையும் இந்த அருமை கதையின் மூலமாக என் நெஞ்சில் என்றும் தங்கிவிட்டார்கள்...
அமரர் கல்கி'கு என் நன்றிகளை காணிக்கை ஆகுகிறேன் .....
http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan
Update on : 21.07.2013
அமரர் கல்கி அவர்களின் அமர காவியமாகிய பொன்னியின் செல்வன் ஒரு ஒலிப்புத்தகமாக வெளிவந்துள்ளது.தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது. இந்த புத்தகம் படித்த பிறகு தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு
முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் தோன்றும்.
வந்தியத்தேவன், குந்தவை, ராஜ ராஜ சோழன், பழுவேட்டரையர், நந்தினி,
ஆழ்வார்க்கடியான் அனைவரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல்
உண்டாகும். உண்மை நிகழ்வுகளோடு அங்கங்கு கதை சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் என்றும் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.
இந்த கதாபாத்திரஙகளையும் நடந்த சம்பவஙளையும் நம்மால் கண்ணால்தான் பார்க்க
மூடியாது ஆனால் கேட்கவாது செய்யலாமே என்ற் ஆசையில் உருவானதுதான் இந்த
ஓலிப்புத்தகம். 2000 க்கும் மேற்பட்ட பக்கஙகள் 15க்கும் மேற்பட்ட பாடல்கள்.
எல்லாவற்றையும் தொகுத்து ஒரு 78 மணி நேர ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளோம் 60க்கும் மேற்பட்ட நாடக தொலைகாட்சி கலைஞர்கள் இந்த கதாபாத்திரங்களுக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள்.மறக்க முடியாத இந்த மாந்தர்கள் தங்கள் முன்னால் ஒலி வடிவில் வலம் வரப்போகிறார்கள்.
பின்னணி இசையும் மற்ற விசேஷ ஒலிகளும் உங்களை சோழர்கள் காலத்திற்கே 1000 வருடங்கள் பின்னால் அழைத்துப் போகப்போகின்றன.
தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கும் புத்தகம் படிக்க நேரம்
இல்லாதவர்களுக்கும், இப்படிப்பட்ட ஒரு ஒலிப்புத்தகம் ஒரு பெரிய
வரப்பிரசாதமாகும்.
மேலும் பலர் இந்த சரித்திர நாவல்களின் ஆங்கில
மொழிபெயர்ப்பை தேடி அலைகிறார்கள் கல்கி அவர்களின் எழுத்தை தமிழில்
படித்தால்தானே சுவை. அவரது எழுத்தின் வன்மைதானே இந்த நாவலின் வெற்றிக்கு
காரணம் ஆகையால் ஒரு தமிழ் புத்தகத்தை தமிழிலேயே கேட்டுப்பயன்பெறலாமே!
இந்த ஒலிப்புத்தகம் MP3 FORMATல் 3 DVD களில் பதிவு செய்யப்பட்டு வெளிவருகிறது
பாடல்களுக்கு திரு சத்யசீலன் இசை அமைத்துள்ளர்
திறமை மிக்க தொழில் கலைஞர்கள் இதன் ஒலிப்பதிவில் உறுதுணையாக இருந்து மிகச் சிறப்பாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.