Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Friday, October 19, 2012

இளையராஜா இது நியாயமா? - ஈழதேசம்

நன்றி : ஈழதேசம் &  அனைத்துலக தமிழர் மையம்
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?

============================================


இளையராஜாவுக்கு இசை வணக்கம். இந்த கட்டுரை எழுதியிருக்கவே கூடாது என்று நாட்களை தள்ளித்தள்ளிப் போட்டோம். ஆனால், முடியவில்லை.

கவிஞர்களில் கண்ணதாசனுக்கு தனி இடம் இருப்பது போல, இசை உலகில் இனி யார் வந்தாலும், இளையராஜாவுக்கு இருக்க

ும் தனி இடத்தை பிடிப்பது கடினமே.

உன் இசையின் விசை எமக்குத் தெரியும்.

தமிழகத்திலிருந்து அறுபதுகளில் விரட்டியடிக்கப்பட்ட இந்தி, அரசுபூர்வமாக இல்லாமல் இசைபூர்வமாக எழுபதுகளில் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் நுழையத் தொடங்கியது.

அப்போது இந்தி எதிர்ப்பு நடத்திய கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் அவற்றுக்கு இந்தி எதிர்ப்புத் தேவை இல்லாமல் போய்விட்டது.

ஒருகட்டத்தில் இந்தி இசையே தமிழகத்தை ஆக்கிரமித்துவிடுமோ என்ற கட்டத்தில்தான் உமது ’அன்னக்கிளி’ வந்தாள்.

தமிழ் இசையைக் கொண்டுவந்தாள். தமிழ்நாட்டில் ஓர் இசைப்புரட்சி நிகழ்த்தினாள்... இந்தி வார்த்தைகளால் தமிழகத்தில் நிரம்பிவந்த இசையை விரட்டியடித்து இசை ரீதியாக நீ மட்டுமே இந்தி எதிர்ப்புப் போர் நடத்தினாய்.

இளையராஜா இன்று உம் இசையை இந்தி கேட்டுவாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழை நீ தலை உயர்த்தினாய்.

நன்றிகள்.

அதே நேரம், இப்போது உலக இசையே வணங்கும் உன்னை, இப்போது தேவையில்லாமல் தமிழர்களுக்கு எதிரான குறியீடாக மாற்ற முயற்சி செய்கிறது சிங்களம் அல்லது சிங்களத்தின் அடிவருடும் சில துரோகத் தமிழ்க் கூட்டம்.

வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கனடா நாட்டில் உன் இசை நிகழ்ச்சியாம். டிக்கெட்டுகள் விற்றுக் கொண்டிருக்கின்றனவாம்.

இந்துக்களுக்கு எப்படி மார்கழி மாதம் புனிதமாதமோ, முஸ்லிம்களுக்கு எப்படி ரமலான் புனிதமாதமோ, கிறித்துவர்களுக்கு எப்படி தவக்காலம் புனிதமானதோ

அப்படித்தான் ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் புனித மாதம்.

எங்கள் விடுதலைக்காக சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை நன்றியோடு நினைவுகூறும் மாதம்.

எம் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மாவீரர் தினத்தில் எம் இனத்துக்காக இன விடுதலைக்காக தன் உயிரையே விதையாக்கிய மாவீரர்களை வணங்கிப் போற்றுவார்.

மாதங்களில் நவம்பர் மாதம் எங்கள் நாடி நரம்புகளில் எல்லாம், நன்றி உணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஒரு சேர பொங்கி, மாவீரர்களின் நினைவைப் போற்றுவோம்.

அப்பேர்ப்பட்ட மாதத்தில் நாங்கள் எந்த கலை நிகழ்ச்சியும், களியாட்டமும் நடத்துவதில்லை. களியாட்டங்களுக்கும் செல்வதில்லை.

ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருக்கும் இந்த உணர்ச்சிப் பிரவாகத்தை முறியடிப்பதற்காக சிங்களக் கைக்கூலிகளால் உங்களது நிகழ்ச்சி கனடா நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் வீரியமாக நடக்கும் கனடா நாட்டில் நடத்தப்படுகிறது என்ற செய்தி வேதனை அளிக்கிறது.

இளையராஜா உமக்கு எம் வேதனைகள் தெரியாததல்ல...

நினைவிருக்கிறதா உங்களுக்கு 1984-ம் ஆண்டு?

சென்னை நேரு விளையாட்டரங்கு இப்போதைய நவீன வசதிகளுடன் இல்லை. அந்த அரங்கில் ‘ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேஷன் ஆப் லிபரேஷன் டைகர்ஸ்’ எனப்படும் விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக நீங்கள் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினீர்கள்.

அந்த அமைப்பை சுருக்கமாக ‘சால்ட்’ என்று அழைப்போம்.

’சால்ட்’ அமைப்புக்காக நீங்களும் உங்கள் தம்பி கங்கை அமரனும் நடத்திய இசை நிகழ்ச்சி மூலம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு பத்துலட்சம் ரூபாய் நிதி வசூலித்துத் தந்தார் புலவர் புலமைப்பித்தன்.

அப்போது சால்ட் அமைப்புக்கு பேபி பொறுப்பாளராக இருந்தார். நிரஞ்சன், கேசவன் போன்ற தேசிய தலைவரின் தம்பிமார்கள் இந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக உழைத்தனர்.

அப்பேர்ப்பட்ட விடுதலை எழுச்சிக்கு உதவிய உன் இசை, இன்று தமிழ் என்ற பெயரில் சிங்களக் கைக்கூலிகளின் பிடியில் சிக்கி... மாவீரர் தின நிகழ்வுகளை சிதைக்கப் பயன்படுவது நியாயமா?

இளையராஜா...

உலகத் தமிழர்களின் விடுதலை உணர்வுகளை தட்டி உசுப்பவேண்டிய உம் இசை...

அவர்களின் விடுதலை எழுச்சியை திசை திருப்பும் விசையாவதோ?

உன் இசையை நிறுத்தச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

உன் இசையால் ஒரு பாடல் உருவாகலாம்.

உன் இசையால் இன்னும் ஒன்பதாயிரம் பாடல்கள் தோன்றலாம்.

உன் இசையால் இன்னுமொரு ஆஸ்கார் கூட வாங்கலாம்.

உன் இசையால் தமிழுக்கும் தமிழனுக்கும் இழுக்கு வரலாமா?

யாருக்கு இசைப்பிடிக்காது. ஹிட்லருக்கு இசை பிடிக்காது. அது மனித உருவத்தில் வந்த மிருகம்.

அந்த மிருகத்தை விட கோடி கோடி கொடிய நஞ்சு படைத்த மிருகம் ராஜபக்‌ஷே. அந்த மிருகத்துக்கு தீனி போடும் வகையில், நம் உறவில் இருக்கும் ஒரு கறுப்பாடு, கால, நேரத்தை கணக்கில் கொள்ளாமல் உங்களை விலை பேசி இருக்கிறது.

கனடாவில் இந்த நிகழ்ச்சியை நடத்துபவன் தமிழன் தானே? என்று நீங்கள் கேட்கலாம். அவன் தமிழன் என்றால், கருணாநிதியையும் நீங்கள் தமிழன் என்று ஏற்க வேண்டி இருக்கும்?

ஓர் இனத்தின் வேண்டுகோளாகவே இது வைக்கப்படுகிறது.

ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு வைக்கும் வேண்டுகோள் இது.

தமிழ்நாட்டின் ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க, ராஜ கம்பீரம் பொருந்தியவன் இளையராஜா.

இசை சக்ரவர்த்தியே, நவம்பர் மாத நிகழ்ச்சியை தள்ளி வைத்தால், ராஜ பக்‌ஷே கூட்டத்துக்கு இன்னுமொரு சறுக்கல். அதுதான் உன் கீரிடத்தில் ஏறப்போகும் நவரத்தினக்கல்லாக இருக்கும்.

கடைசியாக...

1984-ம் ஆண்டின் ‘சால்ட்’டில் கொஞ்சம் எடுத்து உங்கள் இதயத்தில் போட்டுப் பாருங்கள். கனடா நாட்டில் நீங்கள் செல்வதாக இருக்கும் இசை நிகழ்ச்சியை நிச்சயம் ரத்து செய்வீர்கள்?!

நன்றி - ஈழதேசம்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.