Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Saturday, December 12, 2015

கல்யாணம் - புது வீடு - வெளிநாடு

படித்ததில் மிகவும் பிடித்தது. எழுதியவருக்கு ?? !  வாழ்த்துக்கள்...
"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்" 
*
"வெளிநாடு வந்துப்பார்"......
இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
*
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
*
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
*
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
ஆனாலும், குடும்பத்தில் யாராவது ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....

"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........
அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
*
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".

****************************************
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா
ஏன்னு தெரியல.... சும்மா சொல்லணும் போல தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே....!!

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள்......
இன்னும் இவர் போன்று எத்தனை உடன்பிறப்புகளோ... நண்பர்களோ.... தெரியவில்லை...

புத்தி வந்து உருப்படியா பொழச்சா சரி தான்

சென்னை மழை துன்பத்துக்கு அப்புறம், பாதிப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்தது, முக்கியமாக இழைனர்கள் முன்னுக்கு வந்து செய்த காரியங்கள்.. அரசியல், ஆட்சி, அதிகாரிகள் என்று எல்லாவற்றையும் தூசுதட்டி உருப்பட வைக்கலாம் என்ற ரொம்ப நல்ல பதிவுகள் எல்லாம் வந்துச்சு.. ஆனா இது எல்லாம் எவ்ளோ நாள் நீடிச்சுது ??? 
நாட்டுல மக்களுக்கு தெளிவு /சிறந்த அறிவு இல்ல, அதனால ஆட்சியாளன் சரி இல்ல, அதிகாரிகள் சரி இல்ல, இதனால ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான நல்ல கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்கள் எதுவும் இல்லாம பெரும்பான்மையான மக்கள் இருக்கோம்.. இப்படி ஒரு சுழற்சியில் சிக்கி (டெஅட்லாக்) மீளமுடியாமல் இருக்கோம்.
தமிழ் சினிமா, அதை பாக்கும் மக்கள் சீரழிய, நாசமா போக என்ன என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் மும்முரமா பண்றாங்க சிலர். ஒரு சிலர் இப்படி இவ்வளவு கீழ்த்தனமா கிளம்பீருங்க...
ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு, யாருக்கோ கொஞ்சம் பேர்த்துக்கு தின்ன சோறு ஜீரணம் ஆகாமலோ, அடிச்சா மப்பு ரொம்ப அதிகமாகியோ, இல்ல ஏதோ மனநிலை சரி இல்லாம இருந்தப்ப, இதை பண்ணிடாங்க. அதை கண்டுக்காம விட்டுட்டு, நாம நம்ம வேலைய உருப்படியா பாக்க போயிருந்தா தான் என்ன.. ??
இந்த சிறுபுத்தி இருக்கும் மனுசங்க (அது கலைத்துறை'ல யாரா இருந்தாலும் - அதை ஆதரிக்கும் மக்களா இருந்தாலும்) இப்ப கேட்டு சிரிகுரவங்க / ரசிகுரவங்க, பின்னாடி இதுமாதிரி எதாவது உங்களுக்கு நடந்தா, குயோ முறையோனு கத்தும் போது மத்தவங்க இதே மாதிரி பண்ணுவாங்க அதை மறக்காம மனசுல வச்சுகிடுங்க....
இந்த சூழ் நிலையில்
- இதை எல்லாம் பார்த்து வளரும் இளைய தலைமுறை எப்புடி இருக்கும்.. ??
- பெற்றோரின் மிக சரியான வளர்ப்பு என்பது எவ்வளவு மெனக்கெட்டு பார்த்தாலும் சுலபமானது இல்லை, அல்லது பல பேருக்கு இது சாத்தியமே இல்லை என்பது மிகவும் வருத்தம் தரும் உண்மை.. 
இனி வரும் தலைமுறைக்காவது நல்ல இயற்கையோடு ஒன்றிணைந்த சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் நட்பன்புகளும் வரும்னு கனவுல மட்டும் தான் நினச்சுக்கனும் போல..
இப்போ எனக்கு, எங்க பாட்டி ரொம்ப வெறுத்து போனா சொல்லும் வரி தான் ஞாபகம் வருது "எப்படியோ இதெல்லாம் கடந்து போய்டும், யாரு கண்டா நாசமா போகாம இனிமேலாவது புத்தி வந்து உருப்படியா பொழச்சா சரி தான்"

Friday, December 4, 2015

மனிதனும் இயற்கையும் மனிதமும்

இன்றைய தேதிக்கு சென்னையிலும் கடலூரிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் இயற்கையின் சீற்றமும் அதனால் மக்களின் வாழ்க்கை நிலையம் கண்கூடாக பார்க்கிறோம்.

இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் வெறுமனே வருத்த பட்டு என்ன பயன், ஒன்றும் இல்லை...

இயற்கையாகவே மனிதனுக்குள் மனிதம் இருக்குமா என்பது தெரியாது, ஆனால் வளரும் சூழல் அதை தீர்மானிக்கும் என்றே நினைக்கிறேன்..
இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் இதனால் மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி என்று எவ்வளவோ பிரிவினையிலும், இயந்திர மற்றும் இயற்கைக்கு எதிரான முரணான வாழ்கையும், ஆசைகளும் இப்படி எண்ணற்ற காரணங்களால் பிரிந்து திரிந்த மக்களுக்கு இப்போதைய இயற்கை சீற்றம் சொல்லி வைத்த பாடம் இதுதான் "மனிதமும் இயற்கையும் அடிப்படையாக அரவணைத்து கொண்ட வாழ்க்கை தான் நிலையானது , நிம்மதியானது , அதுவே நம் அனைவரின் நெஞ்சார்ந்த விருப்பமும், ஆனால் ஏதோ காரணங்களால் தெரிந்தே இதெல்லாம் மறந்து ஓட / வாழ பழகிவிட்டோம்.. இப்போது பாருங்கள் "மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி " என்று எந்த பாகுபாடில்லாமல், அனேகமாக அணைத்து அல்லது பெரும்பாலான மக்கள் உதவுவதும், உறுதுணையாக இருபதும்.. நம் சுயரூபம் ஒருவேளை இது தானோ ?? ஒரு வேலை இருக்கலாம் .. !!

இப்பொழுது
நம் அனைவரும்
- யார் எவ்வளவு உதவி செய்தார்கள், செய்யவில்லை, ஏன்
- யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் , கொடுக்கவில்லை, ஏன்
- இது யாருடைய குற்றம்,
என்றெல்லாம் இப்போது விவாதிச்சு - பகிர்ந்து பெரிதாக என்ன ஆகிவிட போகிறது.??  ஆகையால்
- உங்கள் நன்றிகளையும், வருத்தங்களையும், பெருமைகளையும் நிச்சயம் பிறகு ஒரு நாள் பதிவு செய்யலாம்.

இன்றைய உடனடி தேவை : மனித நேயத்தோடு.... .... ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் இந்த இடரினைக் கடக்க வேண்டும் என்பதே!

இனி நாளைய விடியல் என்பது : இனிமேலாவது "மனிதமும் , இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதும் - அல்லது குறைந்தபட்சம் முரணாக - எதிராக வாழ்வதை தவிர்ப்பது. ". -- இன்றைய இந்த துன்ப கணங்கள் நமக்கு மறுபடியும் ஞாபக படுத்திவிட்டு சென்றுள்ளது இது ஒன்றே ஒன்று தான் ...

இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு செழிக்கட்டும்.
மனிதம் மலரட்டும் .

Friday, August 16, 2013

ஆடி முடிந்தது ஆவணி வந்தது

Source : உலக தமிழ் மக்கள் இயக்கம்

நாளை ஆவணி மாதம் பிறப்பு
இன்று 1188 ம் ஆண்டு முடிந்து , நாளை 1189 ம் ஆண்டு ஆரம்பம் . சிம்ம மாத ஆரம்பம் .
(ஸ்ரீ பதி என்பவர் வானியல் மற்றும் ஜோதிஷத்தில் மிகவும் பாண்டித்தியம் மிக்கவர். அவருடைய கணிதம்தான் ஜோதிடத்தில் இன்றும் கையாளப்படுகிறது. ஜாதகங்கள் கணிக்கப் படுகின்றன).

தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்த முறைதான் பின் பற்றப்படுகிறது
நம் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருவள்ளுவர் ஆண்டுக்கும் அடிப்படை ஸ்ரீபதி பத்ததிதான்.

ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது.

குறை ஒன்றும் இல்லை

ஓவியம்


மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை மெயின் ரோட்டில் உள்ள சுவற்றில் வரையப்பட்ட ஓவியம் இது.....,
மயிலாடுதுறையில் பரவலாக பேசப்பட்ட செய்தி.....,
இந்த ஓவியம் வரைய எந்த வகையான கலர் பெயிண்டுகளும் பயன்படுத்த படவில்லை.....,
 பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கலர் சாக்பீஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.....,

இந்த ஓவியத்தை வரைந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம் அளித்தார்.....,
இவர் படம் வரையும் போது மக்கள் கூட்டமாக பார்த்தல் சிறிது போக்குவரத்து ஏற்ப்பட்டது.....,
இவர் இவ்வாறு தான் அணைத்து ஊர்களிலும் படம் வரைவதாக கூறப்படுகிறது..

Wednesday, August 14, 2013

மக்கள் திலகம்

'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

நன்றி-Bala Nagarajan

 

தன்மானச்சிங்கம் கோதையம்மாள்


பெயர்: கோதையம்மாள்.

வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை..)

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..
பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..

ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை.. வலுக்கட்டாயமாக  கொடுத்துவிடுகிறார். )

எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..)


ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம். 

அதனாலென்ன தன் மானம் இல்லாதவர்களுக்கெல்லாம் தன்மானச்சிங்கம் என ’பேனர்’ வைக்கும் என் திரு நாட்டில், இவருக்கு பேனர் வைக்க என் பொருளாதாரம் இடம் கொடுக்காதுதான்..அதனால் என்ன... என் முகநூல் பக்கத்தில் மனதார பேனர் வைக்கிறேன்.. நீங்கள் முடிந்தால் ‘share’ செய்யுங்களேன்... 

Thanks : Ramesh Rama.

Source : ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலத்திலும் Relaxplzz )

Sunday, August 11, 2013

இந்தியாவின் ஏழை முதலமைச்சர்


கொலை பண்ணவன் , கொள்ளை அடிச்சவன் இவங்களே பிரதமர் ஆக ஆசைபடும் போது . இவரை எல்லாம் நம்ம கண்ணுக்கு தெரியாம போனது வருத்தம் தான் . மீடியாக்கள் தப்பி தவறி கூட இவர் பெயரை உச்சரிக்க மாட்டார்கள் .

இந்தியாவின் ஏழை முதலமைச்சர்

முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கௌன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடி கள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்ச ராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது.

நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந் திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதல மைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.தற்போது 64 வயதாகும் மாணிக் சர்க்கார் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகி யுள்ளார். அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார்.சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத் தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம். அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ. 46,000-தான். இந்தத் தம்பதிக்குக் குழந் தைகள் இல்லை. சொந்த வீடோ, வாக னமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது.முதலமைச்சருக்கு என்று ஒரு சம் பளம் உண்டல்லவா? அதையும் கட்சிக் குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார்.

கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ.5000 தருகிறது. ‘இந்த பணமும் எனது மனை வியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க் கைக்குப் போதுமானது’ என்கிறார் சர்க்கார்.‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி.‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார்.சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியி லேயே சர்க்காரை மேற்குவங்காள பல் கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர். சர்க்காரின் குடும்பத் தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.

-எஸ்.கே.இதயாநன்றி: துக்ளக் (13.3.2013)


Source-► தமிழால் இணைவோம்

Thursday, August 1, 2013

இருப்பதைக் கொடுத்தால்

இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”.

இந்த வாசகத்தைப் பார்த்த இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான்.

சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில்,

உணவின்றித் தவித்த இரு குழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர்.

. பொட்டலங்களைக் கொடுத்தான்.

முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.

அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது.

இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின.

கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது.

Source : # ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...

நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா
.

Source : I Love Tamilnadu

சென்னையில் வீடு வாங்குவது கனவு தான்..


சென்னையில் வீடு வாங்குவது என்பது இனி ஐடி ஊழியர்களுக்கும், ரிட்டையர்டு ஆகும் உயரதிகாரிகளுக்கும் கனவு தான்.. சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட 60000 பிளாட்டுகளை வாங்க ஆள் இல்லே!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதியில் ஏறத்தாழ 60000 அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாத நிலையில் இருக்கின்றது.. இவற்றை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.. பத்திரிகைகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்.. பில்டர்களில் விளம்பரங்களில் சதுரஅடிக்கு 100 முதல் 400 வரை குறைத்து விற்பனை செய்வதாக அறிவிக்கின்றனர்.. அப்போதும் விலை போகவில்லை. ஏன் இந்தத் தொய்வு என்பதை ஆராய்ந்து பார்த்ததில் சில காரணங்களை கண்டறிய முடிந்தது..

1. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் காலி மனைகள் மற்றும் அடுக்குமாடிக்குடியிருப்புகளின் விலைகள் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது.. சென்னை புறநர்ப்பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், வண்டலூர், ஊரப் பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டுப்பாக்கம், போரூர், பூந்தமல்லி, மேடவாக்கம், பெரும்பாக்கம், கெளரிவாக்கம், செம்பாக்கம், மதனபுரம் , முடிச்சூர் போன்ற பகுதிகளில் கூட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை சதுர அடி ரூ.3200 முதல் ரூ.4500க்கு சென்றுவிட்டது. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், வேலையாட்களுக்கு கொடுக்கும் அதிகப்படியான தினக்கூலி இவை எல்லாமே இந்த விலை உயர்விற்கு கூடுதல் காரணங்களாக சொல்லப்படுகின்றது. சென்னை நகரின் மையப்பகுதியில் அடுக்குமாடிக்குடியிருப்புகளின் விலை முறையே ரூ.15000 முதல் 25 ஆயிரம் வரை ஒரு சதுர அடி விற்பனையாகின்றது.

2. இது தவிர கார்பார்க்கிங் முன்னரெல்லாம் இந்த விலையிலேயே அடங்கிப்போனது. ஆனால் இப்போது கார்பார்க்கிங் என தனியாக ரூ.1.50 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை தனியாக கொடுக்கவேண்டியுள்ளது.. மின்சார மும்முனை இணைப்பு முன்பெல்லாம் அதிக பட்சமாக ரூ.25ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போதோ அது 50 ஆயிரம் முதல்ஒரு இலட்சம் வரை சென்றுவிட்டது.. இது தவிர பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கினால் (பாதாள சாக்கடை இல்லாத இடங்களில்) எஸ்.டி.பி (Sewage treatment plant) சார்ஜஸ் என ஒரு 50ஆயிரம், கார்ப்பஸ் பண்ட் என சதுரஅடிக்கு ரூ.50முதல் 100 வரை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சர்வீஸ் டாக்ஸ் 2.9 பர்சென்ட் குடியிருப்பின் விலையில் செலுத்த வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிளாட் வாங்கி அங்கு குடியமர்ந்து விட்டால் மெயின்ட்டனன்ஸ் சார்ஜஸ் என்று சில ஆயிரங்களை செலுத்தவேண்டும்.

3. பிளாட் வாங்கும் போது யு.டி.எஸ்.(undividable share of the property) எத்தனை சதுரஅடியோ அதற்கு அந்த இடத்தின் அரசின் கைடுலைன் வேல்யூ ஒரு சதுர அடிக்கு என்னவோ அதற்குண்டான கட்டணத்திற்கு 7சதவீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி பத்திரப்பதிவு செய்யவேண்டும்.. 1 சதவீதம் டி.டி. பத்திரப்பதிவு துறைக்கு எடுத்துக்கொடுக்கவேண்டும். இப்போது கைடுலைன் வேல்யூ கூடிவிட்டதால் பல ஆயிரங்கள் கூடுதல் செலவு.

4. இவ்வளவிற்கும் மேலாக வங்கியில் கடன் வாங்கும் போது பிராஸசிங் கட்டணம் பாயின்ட் 2 சதவீதம் முதல் பாயின்ட் 3 சதவீதம் வரை செலுத்தவேண்டும்.. சரி இவை எல்லாம் முன்னர் இல்லையா என்ற கேள்வி எழலாம். ஆனால் 2000 வருடத்தில் ஐடி பணியில் சேர கேம்பஸ் இன்டர் வியூவில் தேர்வானவர்கள், நேரிடையாக தேர்வானவர்களுக்கு சம்பள பேக்கேஜ் வருடத்திற்கு 3.2 இலட்சம் முதல் 3.6 இலட்சம் வரை ஐடி நிறுவனங்கள் வழங்கின. அன்றைய நிலவரப்படி ஒரு மாத சம்பளம் பிடித்தமெல்லாம் போக 22 ஆயிரம் முதல் 30 வரை ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. அப்போது சென்னை புறநகர்களில் 1000 ச.அடி கொண்ட ஒரு பிளாட்டின் விலை 8 இலட்சம் முதல் அதிக பட்சமாக 12 இலட்சம் வரையே விற்கப்பட்டது. அப்போது இந்த மாதச் சம்பளத்தின் அடிப்படையை வைத்துப் பார்க்கும் போது ஐடிதுறையில் பணிபுரியும் நபருக்கு அதிகபட்ச மாக 15 இலட்சம் வரை வீட்டுகடன் வழங்க வங்கிகள் முன்வந்தன. 90 சதவீதம் வரை கடனுதவி.

5. அரசுப்பணியில், வங்கிகளில், தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றோர்களுக்கும் இந்தவிலை என்பது அவர்களுக்கு கிடைத்த ஓய்வுகால பிராவிடன்ட் பண்ட் மற்றம் இதர அலவன்சுகளின் மூலம் பெறப்பட்ட பணத்தில் வாங்க முடிந்தது.

6. ஐடி துறையில் பணிபுரிந்தோருக்கு, அதாவது அவர்களின் மாத சம்பளத் தில் 50 மடங்கு வரை அதிகபட்சமாக வங்கிகள் கடன் வழங்கின. உதாரணமாக ஒருவர் 25000 ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றார் என்றால் அவருக்கு வங்கிகள் ரூ.1250000 வரை கடன் வழங்கின. அந்த கடனில் ஒருவர் எளிதாக அடுக்குமாடிக்குடியிருப்பை வாங்க முடிந்தது.. ஆனால் இப்போது படித்துவிட்டு ஐடி துறைக்கு பணிக்கு போவோருக்கும் இதே பேக்கேஜ் தான் எல்லா ஐடி நிறுவனங்களும் வழங்குகின்றன. 13 வருடங்களாக சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை.

7. 2000 த்தில் வாங்க முடியாதவர்கள் அதன்பின்னர் விலை ஏறினாலும் அவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் சம்பள உயர்வு மற்றும் பிரமோஷன் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் குடியிருப்புகளின் விலை ஏறினாலும் வாங்க முடிந்தது. சென்னையில் வீடு வாங்குவது என்பது இவர்களுக்கு சாத்தியமானது.. கூடிய வரை வாங்கவேண்டும் என்று நினைத்தவர்கள் கடந்த 12, 15 வருடங்களில் எளிதாக வாங்கிவிட்டனர்.. இன்னும் அவர்கள் வாங்கிய வீட்டிற்கு கடனை கட்டிக்கொண்டிருப்பார்கள்.. இன்றைக்கு சம்பளம் அவர்களுக்கு 60ஆயிரம் முதல் 1 இலட்சம் என்றாலும் கூட மாதாந்திர தொகை அதிகபட்சமாக 25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கட்டவேண்டியிருக் கும். இது அவர்களுக்கு எளிதானதும் கூட..

8. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் ஐடி துறைக்கு புதிதாகப் போனவர்கள் வீடு வாங்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.. காரணம் டபுள் பெட்ரூம் கொண்ட பிளாட்டின் விலை தற்போது 30 இலட்சத்திற்கும் மேல் போய்விட்டது.. அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் முதல் 12 இலட்சம் வரைதான் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மீதமுள்ள தொகையை இவர்களால் எப்படி செலுத்தமுடியும்? முன்னரெல்லாம் 90 சதவீதம் வரை கடனுதவி அளித்துவந்த வங்கிகள் 10 சதவீதத்தை குறைத்து இப்போது 80 சதவீதம் வரை மட்டுமே வழங்குகின்றன. அன்றைய நிலவரப் படி பிராசசிங் கட்டணம், பத்திரப்பதிவு எல்லாமே சில ஆயிரங்களில் முடிந்து போனது. ஆனால் இன்றைய நிலையில் எல்லாமே இலட்சங் களுக்கும் பல ஆயிரங்களுக்கும் சென்றுவிட்டது. இதுதவிர இப்போது வாங்கும் பிளாட்டிற்கு சர்வீஸ் டாக்ஸ் வேறு கூடுதலாக செலுத்தவேண்டும்..

9. 3 வருடங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்தவர்களிடம் எப்படி 20 சதவீத முன்பணத்தொகை சேமிப்பாக இருக்கும்? அதாவது 30 இலட்சம் ஒரு பிளாட்டின் விலை அடக்கமென்றால் இவர்கள் அதில் 20 சதவீதம் அதாவது 6 இலட்சம் ரூபாய் செலுத்தவேண்டியது கட்டாயமாகிறது.. 6 இலட்சத்தை சென்னையில் வாடகைவீட்டில் இருந்து கொண்டு ஐடி பணியில் இருந்தாலும் சேமிப்பது என்பது இயலாத காரியம். வருடத்திற்கொருமுறை இன்க்ரிமென்ட் என்பது 40ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகின்றது. இவர்கள் வீடு வாங்கவேண்டுமென்றால் குறைந்த பட்சம் 8 இலட்ச ரூபாய் பேக்கேஜ் ஆண்டிற்கு இருக்கவேண்டும்.. அப்போதுதான் 40 இலட்ச ரூபாய் வரை வங்கிக் கடன் கிடைக்கும்.. இந்த பேக்கேஜிக்கு செல்ல குறைந்தபட்சம் இவர்களுக்கு இன்னும் ஏழெட்டு வருடங்கள் ஆகலாம்.. ஆனால் அப்போது வீடுகளின் விலை கோடிகளுக்கு சென்றுவிடும்.

10. பொதுவாக பில்டர்கள் எல்லாம் ஐடி துறையில் பணிபுரிவோர்களையே டார்கெட்டாக வைத்து கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான குடியிருப் புகளை விற்றுத் தீர்த்தனர்.. இப்படி வாங்கியவர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐடி துறையில் பணிபுரிந்தோர்கள் தான் என ஒரு புள்ளி அறிக்கை கூறுகின்றது. மீதமுள்ள 35 சதவீதம், யாரென்று பார்த்தால் வெளிநாடுகளில் பணிபுரிந்த என்.ஆர்.ஐக்கள், டாக்டர்கள், ஆடிட்டர்கள், அரசு உயர்பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்றவர்கள், வங்கி அதிகாரிகள்..

11. ஆனால் கடந்த சில வருடங்களில் இப்படி விலை ஏகத்துக்கும் எகிறிப்போனதால் வீடு வாங்கவேண்டும் என்று நினைத்தாலும் ஐடி துறையில் இருப்பவர்களாலேயே வாங்க முடியாமல் முடங்கிப்போய் உள்ளனர்.

12. திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஐடிதுறையில் பணி புரியும் நிலையில் இருவரின் சம்பளத்தை கணக்கிட்டு சேர்ந்து வாங்கவேண்டுமென்றாலும் இருவரின் சம்பளத்திலும் சரி பாதி லோனுக்கு போய்விடும். இன்றைய விலைவாசியில் மிச்சம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சென்னையில் குடும்பம் நடத்துவது என்பது மிகப்பெரிய சிரமம். இன்னும் குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு அனுப்பவேண்டுமென்றால் அதற்கு கூடுதலாக செலவு செய்யவேண்டும். இந்நிலையில் இவர்களே இப்படித் தடுமாறும் போது அரசு பணியில் பத்தாயிரத்திற்கும் 20 ஆயிரத்திற்கும் சம்பளம் வாங்குவோர்கள் சென்னையில் பிளாட்டுகளை எப்படி வாங்க முடியும்?

13. 2000 ஆண்டு முதல் 2010 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பிராவிடன்ட் பண்டு மற்றும் இதர படிகள் எல்லாமும் சேர்த்து 5 இலட்சம் முதல் அதிக பட்சமாக 12 இலட்சம் வரை கிடைத்தது.. இதனைக்கொண்டு இருக்கும் சேமிப்பினை வைத்து இவர்களால் அந்த தொகையில் வீடு வாங்க முடிந்தது.. ஆனால் இப்போது ஒரு உயர் அதிகாரி ஓய்வு பெற்றாலும் கூட அதிக பட்சமாக 15 இலட்சம் முதல் 22 இலட்சம் வரையே எல்லா நிலுவைத்தொகையும் கிடைக்கும்.. இவர்களால் எப்படி 30 இலட்சம் முதல் 40 இலட்சம் வரையுள்ள பிளாட்டுகளை வாங்க முடியும்?

14. விற்காமல் இருக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புகளை எப்படி விற்பது என்று பில்டர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். வாங்கும் ஆசை இருந் தாலும் நம்மால் சென்னையில் ஒரு பிளாட் வாங்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் கடந்த மூன்று வருடத்தில் ஐடி துறையில் பணிக்கு சென்றவர்கள் ஒரு புறம் இருக்கு, ரிட்டையர்டு ஆகி கிடைக்கும் செட்டில் மென்ட் பணத்தில் ஒரு பிளாட்கூட வாங்கமுடியவில்லையே என அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், தனியார் கம்பெனிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர்கள் ஏக்கப்பெருமூச்சு விடும் அளவிற்கு இன்று நிலைமை இருக்கின்றது.

இதற்கெல்லாம் என்ன தான் வழி?

ஒன்று சென்னையில் அடுக்குமாடிக்குடியிருப்புகளின் விலைகள் குறையவேண்டும். அல்லது புதிதாக ஐடி துறையில் பணிக்கு சேர்வோர்களின் சம்பள பேக்கேஜ் அதிகரிக்க வேண்டும்..

இவை இரண்டும் சாத்தியம்தானா? இரண்டுமே சாத்தியமில்லாமல் போகும் போது கட்டி முடிக்கப்பட்டுள்ள பிளாட்டுகளின் நிலை? அதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த பில்டர்களின் நிலை?

Tuesday, July 30, 2013

இரு ஜீவன்கள்


நேற்று என் வீட்டு அருகில் ஒரு மன நலம் சரியில்லாதவர் சுற்றி திரிந்துகொண்டிருந்தார். கையில் ஒரு துணி மூட்டை, அழுக்கு படிந்த தலை முடி, கிழிந்த ஆடை என்று பார்க்கவே பாவமாக இருந்தார்.


மனசு பொறுக்காமல் அவருக்கு உணவு கொடுத்தேன். கையில் இருந்து உணவை வெடுக்கென்று பிடிங்கினார்



பிடிங்கிய உணவை உண்ணாமல் எங்கோ கொண்டு சென்றார். எங்கு செல்கிறார் என்று அவரை பின் தொடர்ந்து பார்த்தேன். எங்கள் தெருவில் சுற்றி திரியும் ஒரு தெரு நாய் குட்டிக்கு அந்த உணவில் பாதி பங்கை அளித்தார். வாலை ஆடிக்கொண்டே சந்தோஷமாக உணவை உண்டது அந்த நாய் குட்டி.



இதில் நான் கண்டு வியந்தது என்னவென்றால் பல வேளைகளில் அந்த நாயையும் சரி அந்த நபரையும் சரி பலர் கல்லால் அடித்துள்ளார்கள். கல்லால் அடித்தவர்கள் அனைவரும் நல்ல மன நிலையில் உள்ளவர்கள் தான் ஆனால் ஒரு முறை கூட அந்த இரு ஜீவன்களையும் பாவத்தோடும், பாசத்தோடும் பார்த்தது இல்லை. கல்லால் அடிபட்ட ஜீவன்களை வெறி நாய் என்றும், பைத்தியக்காரன் என்றும் பட்டம் கட்டினர். 
ஆனால் உண்மையில் அந்த இரு ஜீவன்களுமே வெறியன் பைத்தியக்காரன் அல்ல, நம் தெருவை சுற்றி திரியும் ஜீவன்களுக்கு உதவாத, தினம் தினம் அவர்களை கல்லால் அடித்துக்கொண்டிருக்கும் நாம் தான் வெறியர்கள், பைத்திய காரர்கள், மன நோயாளிகள். 

-பிரவீன்

Monday, July 29, 2013

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா!

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா !! சொன்னா நம்புங்க..
======================================================

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க

2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க

3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க

4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்

5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையாப் பதில் சொல்ற பிள்ளைங்க

6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க

7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்
பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படற பொண்ணுங்க.

9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்

10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என்ன !!  இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க..

Thursday, July 25, 2013

கற்பில் சிறந்தவள் மாதவி


கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா ?.
************************************************

தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின் கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

கண்ணகி தான் கற்பில் சிறந்தவள் என்று ஏன் நமக்குக் கூறப்பட்டது??

தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்றுச் சிலப்பதிகாரத்தை படித்து முடித்த நேரத்தில் முடிவு செய்துவிடுவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு மாதவி தான் அவளை விடச் சிறந்தக் கற்புக் கரசி என்பதுத் தெரியும்.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன் மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதைத் தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத் தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக் கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும் தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாகச் சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியைச் சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம். அவள் அவ்வாறுச் செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும் வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள் அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச் சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி. தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச் சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச் சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா என்றறியேன் நான்.ஒருவேளைக் கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச் சூழ்நிலையிலும், தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.

-ஆதிரா.


கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.
************************************************
தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின் கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

கண்ணகி தான் கற்பில் சிறந்தவள் என்று ஏன் நமக்குக் கூறப்பட்டது??

தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்றுச் சிலப்பதிகாரத்தை படித்து முடித்த நேரத்தில் முடிவு செய்துவிடுவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு மாதவி தான் அவளை விடச் சிறந்தக் கற்புக் கரசி என்பதுத் தெரியும்.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன் மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதைத் தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத் தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக் கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும் தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாகச் சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியைச் சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம்.அவள் அவ்வாறுச் செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும் வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள் அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச் சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி.தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச் சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச் சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா என்றறியேன் நான்.ஒருவேளைக் கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச் சூழ்நிலையிலும், தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.

-ஆதிரா.

அழகிய நாட்கள்



 
அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???
 

குழந்தை பருவ நினைவுகள்


குழந்தை பருவத்தை நினைவூட்டும் வினாக்கள்..
இவற்றில் எதையேனும் நீங்கள் செய்ததுண்டா ?

வீட்டில் கிடைக்கும் உடைந்த பொருட்களை எல்லாம் தேடி சொப்பு சாமான் சேர்த்ததுண்டா??

குழம்பு வைக்க மிளகாய்த்தூள் வேண்டுமென செங்கல்லை விரல் தேயத் தேய்த்து செங்காமட்டை அரைத்ததுண்டா??

மண்ணில் கேக் செய்து தோழி பிறந்தநாளை கொண்டடியதுண்டா??

திருவிழாக் கடையில் பலூனுக்காகவும் பஞ்சுமிட்டாய்க்காகவும் அடம் பிடித்ததுண்டா??

நிலவு வந்த நேரத்தில் அப்பாவின் வரவிற்காக காத்திருந்த அம்மாவின் சேலையில் ஒளிந்து கொண்டு அப்பாவின் கைகளையே பார்த்ததுண்டா ??

மழைக் காலத்தில் சிவனேன்னு செடியில் அமர்ந்திருந்த தட்டான (தும்பி) புடிச்சி ஏதோ ஓடி ஓடி பாட்டாம் பூச்சிய புடிச்ச மாறி "ஏய் புடிச்சுடண்டி புடிச்சுடண்டி னு " கத்தியதுண்டா ??

பத்து பைசா அம்மாட்ட வாங்கி பெட்டிக் கடையைத் தேடி தேன் மிட்டாய் தேங்காய் மிட்டாய் குடல் வத்தல் என ருசித்ததுண்டா??

பள்ளிக் கூட வாசலில் இலந்த வத்தல் ,மாங்காய் என வாங்கி நொறுக்கி கொண்டே வீடு போய் சேர்ந்ததுண்டா ??

பள்ளி முடிந்ததும் விளையாடிவிட்டு கால தாமதமாய் வீடு செல்ல , உங்க அம்மா உங்களை வெளுத்து வாங்கியதுண்டா??

டிக் டிக் யாரது ? தேவதை?என்ன வேண்டும்? கலர் வேண்டும் என்ன கலர் ??

பூ பறிக்க வருகிறோம்..பூ பறிக்க வருகிறோம் எந்த பூவை பறிக்கனும் எந்த பூவை பறிக்கனும்?

ஒரு குடம் தண்ணி ஊத்த ஒரு பூ பூத்துச்சாம்.இரண்டு குடம் தண்ணி ஊத்த இரண்டு பூ பூத்துச்சாம்..

இந்த பாட்டுகளை பாடி விளையாடியதுண்டா??

கல்லூரி படிக்கும் அண்ணாவையோ அக்காவையோ பாத்தா "நீங்க பதிமூனாவது தான படிக்கிறிங்கனு கேட்டதுண்டா??

ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய்னு குட்டி சைக்கிள் வாடகைக்கு எடுத்து நீங்களே சைக்கிள் பழகியதுண்டா??

காயம் படாம சைக்கிள் கத்துக்க முடியாதுன்னு சொன்னவன் கிட்ட "அதெல்லாம் நாங்க கத்துபோம்னு " சவுண்ட் விட்டு அடுத்த நாளே விழுந்து வாரியதுண்டா??

கருப்பு வெள்ளை தொலைக் காட்சியை வெறிக்க பாத்து "இதுல எப்படி மனுசங்க தெரியறாங்க,ஒருவேல பெட்டிய உடைச்சு பாத்தா உள்ள இருப்பாங்களோன்னு "விஞ்ஞானி போல் யோசித்ததுண்டா??

காலையில் எழும்பையில் ரேடியோவின் கோபால் பல்பொடி விளம்பரத்துடன் எழுந்ததுண்டா??

அப்பாவின் சட்டை போட்டு பார்த்ததுண்டா??

ஒரே ஒரு மஞ்சைப் பையில் உங்கள் பள்ளிக் கூட புத்தகங்கள் அடங்கியதுண்டா ??

சாமி கும்பிடு னு அம்மா சொன்னா கண்ண மூடர மாறி மூடிட்டு ஒத்த கண்ண தொறந்து எல்லாரும் என்னா பண்றாங்கன்னு நோட்டம் விட்டதுண்டா??

ஞாயிற்று கிழமை மட்டுமே கிடைக்கும் கறி சோற்றிற்காக காத்திருந்ததுண்டா??

வானூர்திக்கு (flight ) டாட்டா காட்டி அதை பறவை போல் ரசித்ததுண்டா ??







பெண்களின் குழந்தை பருவத்தை நினைவூட்டும் வினாக்கள்..

வளையல் ஜோடி சேர்க்கும் விளையாட்டிற்காக உடையாத வளையலையும் உடைத்து வளையல் துண்டுகள் சேர்த்ததுண்டா??
 
அம்மாவின் நெற்றிமேல் இருக்கும் பொட்டை பார்த்து நீ மட்டும் அங்க வச்சிருக்க எனக்கு மட்டும் ஒரு பொட்டு தானா ? என்று வினவியதுண்டா??


சில்லுக் கோடு ,செதுக்கு,நொண்டி, நாடு பிடித்தல், போன்ற விளையாட்டுக்களை குதித்து குதித்து ஆடுகையில் என் கொலுசு சத்தம் போட வேண்டும், இப்பவே கொலுசு போட்டு விடுடி னு அம்மாவை படுத்தியதுண்டா??

நாம் ஆடிய விளையாட்டெல்லாம் போதாதென பசங்க விளையாடும் பச்சை குதிரை, கில்லி,கிர்க்கெட் பக்கம் சென்று "டேய் என்னையும் சேத்துக்குங்க டானு " கேட்டு அவமானபட்டதுண்டா??

கொடியில் காயும் துண்டை எடுத்து தாவணிப் போட்டு கண்ணாடி முன் நின்றதுண்டா ??

அம்மாவிடம் தலை வாருகையில் அடிக்கடி தலையைத் திருப்பி கொட்டு வாங்கியதுண்டா ??


அக்காவ பாரு அவ எப்படி இருக்கா, நீயும் தான் இருக்கியேன்னு அட்வைஸ் வாங்கியதுண்டா??
 
அம்மாவின் பெரம்படியில் இருந்து தப்பிக்க சுற்றலான பாவாடை அணிந்து,விழாத அடிக்கு விழுந்தது போல் நடித்ததுண்டா ??
 .
.
.
.

கடைசியாய் ஒன்று..

பூப்படைந்த ஒரே நாளில் உங்கள் உலகம் பூட்டப் பட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்து(அதற்கு மேல் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருக்கும்) வெறும் பல்லாங்குழியும், கல்லாங்காயும் தாயமும் மட்டும் ஆடியதுண்டா??


-ஆதிரா



Tuesday, July 23, 2013

தங்கமீன்களைச் சுமந்தவனின் வலி

 
தங்கமீன்களைச் சுமந்தவனின் வலியை அறிவீர்களா?
ம.செந்தமிழன்

என்றைக்கு திரையரங்க வாசலில் இரு கைகளையும் உயர்த்தச் சொல்லி, நம்மைச் சோதனையிடத் தொடங்கினார்களோ, அன்றைக்கே திரைப்படங்களுக்கும் நமக்குமான உணர்வுப்பூர்வ உறவு அற்றுப்போனது. இடைவேளையில், நாம் எந்த நிறுவனத்தின் நீரைப் பருக வேண்டும், அதற்கு என்ன விலை தர வேண்டும் என்பதைக்கூட திரையரங்க முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தைகளுக்கான பால் புட்டிகளைக் கூட அனுமதிக்க மறுக்கும் அரங்குகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், தங்கமீன்கள் வெளியிடுவதை அவர்கள் தள்ளிப்போடுவதில் என்ன ஆச்சர்யம் வேண்டிக்கிடக்கிறது?
‘பாலை’க்கு அரங்குகள் கிடைக்காதபோதும் இதே நிலைதான். நாங்கள் முற்றிலும் புதியவர்கள், எந்த பெரிய முகமும் இல்லை, எந்தப் பெரிய நிறுவனமும் இல்லை. வெளியீட்டுக்காக அலைந்தபோது, ஒரு பெரும் நிறுவனத்தின் பிரதிநிதி, ’வெளியிட வேண்டுமெனில், 75 லட்சம் கட்டணம் தர வேண்டும்’ என்றார். எங்கள் படத்தின் மொத்தச் செலவே அதைக் காட்டிலும் குறைவு.

தங்க மீன்களோ, கௌதம் வாசுதேவ் மேனன் எனும் பிரபலத்தின் தயாரிப்பு, யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, இன்னும் பல கலைஞர்களும் பிரபலமானவர்களே. இயக்குனர் ராம், புதியவர் அல்ல.
ஆனாலும், அவர்கள் ஜூலை 26 என நாள் குறித்து அறிவித்த பின்னரும் அந்த நாளில் வெளியீடு மறுக்கப்படுகிறது. இதற்குப் பணமும் செல்வாக்கும் மட்டுமே காரணம் என நான் எண்ணவில்லை. மாறாக, திரைப்படங்கள் குறித்த மதிப்பீடுகளே அடிப்படைக் காரணம். வலுவான கதை, வலுவான காட்சியமைப்பு இருந்தால், அவ்வகைப் படங்களைக் கண்டு வணிகர்கள் அஞ்சுகிறார்கள் அல்லது அவற்றை வெறுக்கிறார்கள். புதிதாக எவரேனும் ஒரு முயற்சியில் இறங்கினால், அம்முயற்சியை எள்ளி நகையாடும் வழக்கம் திரைத்துறையினரிடையே கூட உள்ளது. 

‘பாலை ஒரு சினிமாவே இல்லை’ என்றவர்களை நாம் கண்டோம். அப்படத்தை வெளியிட முடியாமல் திணறியபோது, எங்களை மிகவும் புண்படுத்தியவை, இவ்விதமான கருத்துகளே. ஆனால், நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்தோம். எங்கள் உழைப்புக்கான பலன்களைப் பெற்றோம். தோற்கவும் இல்லை, ஒதுங்கி ஓடவும் இல்லை.
இப்போது, எங்கள் குழுவின் ஏறத்தாழ அனைத்து உறுப்பினர்களும் அவரவருக்கான அடுத்த நிலைகளில் மனநிறவுடன் முன்னேறிச் செல்கிறோம்.

’கற்றது தமிழ்’ மீதும் மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மக்கள் அப்படத்தைத் தூக்கிச் சுமந்தார்கள். எண்ணற்ற இளைஞர்கள், முற்போக்கு இயக்கங்கள், சிற்றிதழ்கள், திரைப்பட இயக்கங்கள், சமூக வலைதள எழுத்தாளர்கள் என ஊரே கூடி அந்தத் தேரை இழுத்தது. அதனால்தான், அந்தத் திரைப்படம் வெளியாகி, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அதன் இயக்குனர் இன்னும் உயிர்ப்புடன் இயங்குகிறார்.
அவரது அடுத்த திரைப்படம் மிக நீண்ட இடைவெளியில் வெளியானாலும், முதல் நாள் முதல் காட்சியில் காண வேண்டும் எனத் துடிக்கும் மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். 

தங்க மீன்கள் கதையை ராம், எங்கோ ஒரு ஊரில் இருந்து கொண்டு எனது அலைபேசியில் வாசித்துக் காட்டுவார். அப்போது நான் எங்கள் நிலத்தில் வாய்க்கால் வெட்டிக் கொண்டோ, இயற்கை எரு தயாரித்துக் கொண்டோ இருப்பேன். ஏறத்தாழ பத்து நாட்கள் தினசரி தாம் எழுதிய கதையை எனக்குப் படித்துக் காட்டுவார். இப்படி ஒரு கதை தமிழில் திரைப்படமாக வந்தால், அது உன்னதமாயிற்றே என நான் சிலிர்த்த நாட்கள் அவை. என் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரிடமும், ‘இந்தப்படம் வெளியானால், தமிழ் சினிமாவே மாற்றம் பெறும்’ என நான் கூறியதுண்டு.

அதன் பின்னர், உருப்படியான தயாரிப்பாளர் கிடைக்காமல் ராம் அலைபாய்ந்த போதெல்லாம், அவருடன் இணைந்தே அலைபாய்ந்தவன் நான். மாரிச்செல்வம் எனும் அவரது உதவி இயக்குனரும், நானும் அண்ணன் தம்பிகளாக மாறிப் போனோம். என் மனைவியும் மகனும் மாரிச் செல்வமும் நெருங்கிய உறவுக்காரர்களானார்கள். 

தங்க மீன்கள், ராம் மனதில் சூல் கொண்டு முட்டை உடைத்து வெளிவரத் துவங்கிய காலத்தில், நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம். தங்க மீன்கள் எங்கள் குடும்பத்தின் அங்கம் என நான் எண்ணுவதுண்டு.
இப்போது, அது உங்கள் பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறது. 

இந்தப் படம் வெளியிடும் காலம் தள்ளிப் போவது, வேறு எவரைக் காட்டிலும், ராம்-க்கு எவ்வளவு வேதனையைத் தரும் என்பதை நான் மிக நெருக்கமாக உணர்கிறேன். ராம், நடித்திருப்பது, தமிழ் சினிமாவின் மிக நல்ல மாற்றங்களுக்கான அறிகுறி என்றே நான் நம்புகிறேன்.

நண்பர்களே, ஐந்து ஆண்டுகள் ஒரு கருவைச் சுமப்பது, எளிதல்ல. ஏதோ ஒரு குப்பையைச் சுமந்து உங்கள் தலையில் கொட்டிவிட்டு, உங்கள் பணத்தைப் பிடுங்க ராம், முற்படவில்லை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கான தங்கமீன்களை அவர் சுமந்து பெற்றிருக்கிறார். 

இப்போது, அரங்கங்கள் மறுக்கப்படும் இந்தக் காலத்தில், நாம் என்ன செய்யலாம் என சிந்திப்போம். நல்ல சினிமா வேண்டும் என எண்ணுகிறோம். அப்படியான மாற்றத்தைச் சாத்தியப்படுத்துவதில் நம் கடமை என்ன?
இந்த இடைப்பட்ட காலத்தில், நம்மால் எந்தளவுக்குத் தங்கமீன்கள் குறித்த தகவல்களைக் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவு கொண்டு செல்வோம். முதல் மூன்று நாட்கள் முன்பதிவில் முடிந்துபோயின, எனும் நிலைக்குப் பணியாற்றுவோம்.

உங்கள் பார்வைக்குக் கொண்டுவரப்படும் திரைப்படம், உங்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றிவிடக்கூடாது, எனும் எண்ணமே எங்களைப் போன்ற இயக்குனர்களை ஆட்டிப் படைக்கிறது. இதற்காகவே, நாங்கள் வெளிக்காட்டவியலா இன்னல்களைச் சுமக்கிறோம். எங்களுக்கு நல்ல கல்வியுண்டு, குடும்பம் உண்டு, வேறு பணிசெய்தால், செல்வமும் உண்டு. இவற்றைக் கருதாது எங்களை நாங்களே இச்சுழலில் தள்ளிவிட்டுக் கொண்டு நீந்துகிறோம் என்பதே உண்மை.

பாலை, காப்பாற்றப்பட்டது. அதன் இயக்குனரான நான் இப்போது, அடுத்த திரைப்படத்தில் மனநிறைவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எனது நிலையை உருவாக்கியதில், உங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
தங்கமீன்கள் படத்தை, வணிக வெற்றிப் படமாக எடுத்துச் செல்வதிலும் உங்களால் பங்களிப்பு செய்ய இயலும் என நம்புகிறேன்.
இது சாத்தியமாக வேண்டும் என இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன்!