Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Tuesday, February 7, 2012

"நாவலன் தீவு " - "குமரிப் பெருங்கண்டம்"

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.



இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

*************************************************************************

குமரிக் கண்டம் - உண்மையும் புனைவும

நன்றி : PUSHPARAJ

நேற்றிரவு நண்பர் ஒருவர் ஓர் ஐயம் எழுப்பினார் - லெமூரியா உண்மையா கற்பனையா என்று.

அது விஷயமாக இன்று காலை எழுந்ததும் முன்பு எழுதிய பழைய மடல்களை தேடியெடுக்க ஆரம்பித்தேன். விளைவாக முன்பு சேகரத்தில் இருந்த பழைய ஆய்வுக் குறிப்புகளெல்லாம் வெளிப்பட்டு, அவற்றில் பலவற்றையும் படிக்காமல் அப்படியே நிலுவையில் விட்டிருந்ததை நினைவூட்டின. குறிப்பாக சுமதி ராமசாமி எழுதிய 'The lost land lemuria' நூலை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அவற்றுக்கு பின்னர் எழுதப்படும் கட்டுரை இன்னும் முழுமையானதாக இருக்கக்கூடும். இப்பொழுதைக்கு சிலவற்றை மட்டும் காண்போம்.

லெமூரியா பற்றி ஏற்கெனவே நான் எழுதிய குறிப்புகள் சில:

18/02/2010: யூகங்களையும் ஹேஷ்யங்களையும் நம்பிக்கைகளாக ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அதையே மரபாகக் கொண்டு புனையப்பட்ட பழந்தமிழ் பாடல்களை தங்களுக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் பரப்பிவிட்ட கதைதான் லெமூரியா நம்பிக்கை. இதைப் பற்றி ஆய்ந்தவர்களின் கூற்று இவ்வாறுதான் இருக்கிறது. அங்கே இருந்த மனிதர்களுக்கு தலைக்கு நடுவே கண் இருந்தது என்பது போன்ற விநோத விவரணைகளையெல்லாம் ஸ்காட் தன் நூலில் குறிப்பிட்டுள்ளாரென்றால் அது எவ்வளவு நம்பிக்கைக்குரியது என்பதை அவரவர் முடிவுக்கே விட்டு விடலாம்.

02/09/2010: லெமூரியா கண்டம் என்று ஒரு கண்டம் இருக்கவேயில்லை. அது இரு ஆய்வாளர்களின் கற்பனையில் உதித்த ஒன்று. அதை தேவநேய பாவாணர் போன்ற ஆரியத்துக்கு எதிராக திராவிடத்தை முன்னிறுத்திய தமிழறிஞர்கள் குமரிக் கண்டத்துடன் முடிச்சிட்டு அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விட்டனர். அதை இன்று மீண்டும் ஓர் ஆய்வாளர் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டேன்.


12/10/2011: லெமூரியா என்பதே ஊகத்தை அடிப்படையாக கொண்ட கோட்பாடு. அதற்கான கால நிர்ணயமும் கப்சா வேலை தான். லெமூரியா தியரி கண்டத்தட்டு நகர்வு கோட்பாடுகள் வெளியிடப்பட்டு ஏற்கபட்டவுடனே அடிபட்டு போய்விட்டன. மனித இனம் முதன் முதலில் எங்கே தோன்றியது என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது. இப்போதுள்ள நவீன மனிதன் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்டவன். 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அங்கிருந்து கிளம்பி உலகமெங்கும் பரவ ஆரம்பித்தான். அந்த பரவல் காரணமாக நியாண்டர்தால் மனித இனம் அழிந்து போனது.

இன்னொரு விரிவான குறிப்பை எழுதியிருந்த ஞாபகம் இருக்கிறது. அதை சட்டென்று தேடி எடுக்க முடியவில்லை.

நிற்க. மனித குலத்தின் வரலாறு பற்றிய ஆய்வுகள் குறித்து பல்வேறு கருதுகோள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. பூகோள ரீதியாக மனித இனம் எங்கேயெல்லாம் வாழ்ந்திருந்தது, கண்டத் தட்டுக்களின் நகர்வுக்கு முன்னர் நிலபரப்பு எப்படி இருந்தது என்பனபற்றை அவை விளக்க முயன்றிருக்கின்றன. அவைகளில் ஓர் ஆய்வுப் பிரிவு மறைந்த கண்டங்கள் (lost continents) பற்றியது.

அதன் கீழாக வருவது தான் லெமூரியா (lemuria). அது உண்மையில் ஊகத்தின் அடிப்படையில் முன்மொழியப்படும் ஒரு கற்பனை கண்டம். லெமூரியா போலவே மூ, அட்லாண்டிஸ், துலே போன்ற மேலும் பல மறைந்த கண்டங்கள் பற்றிய நம்பிக்கைகளும் உலகின் பல பிரதேசங்களிலும் நிலவுகின்றன. லெமூரியா இந்தியாவின் கீழே தென் மேற்காக இந்திய பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே ஆப்பிரிக்கா வரை பரந்து விரிந்திருந்தாக நம்பப்படுகிறது.

லெமூரியா கருதுகோளை முதலில் வெளியிட்டவர்கள் மேலைய நாட்டு அறிஞர்கள் ஜெர்மனியின் எர்ன்ஸ்ட் ஹிக்கலும் (1868), அவருக்கு பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிலிப் ஸ்கலேட்டரும் ஆவர். ஹிக்கல் மடகாஸ்கரில் வசித்த லெமூர்களை இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் வசித்த அதை ஒத்த இனமாகிய தேவாங்குடன் இணைத்தும், இந்த இடங்களில் பாறைகலின் ஒரே தன்மையை கணக்கில் கொண்டும் இங்கே முற்காலத்தில் ஒரு கண்டம் இருந்திருக்கிறது என்னும் கருத்தை வெளியிட்டார். ஆனால் அதற்கு பெயர் எதையும் வைக்கவில்லை. பின்னால் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு வழிமொழிந்த ஸ்க்லேட்டர் தான் அதற்கு லெமூரியா எனப் பெயரிட்டார்.

ஆனால் இவர்களின் இந்தக் கோட்பாட்டை பின்னால் வந்த ஆய்வாளர்கள் நிராகரித்துவிட்டனர். காரணம், லெமூர்கள் குரங்குகள் அல்ல. அதிலிருந்து மனித இனம் தோன்றியது என்பது குரங்கிலிருந்து மனித இனம் தோன்றியது என்னும் மனித பரிணாமவியல் கொள்கைகளையே மறுதிருத்தத்துக்கு உட்படுத்துவதாக இருந்தது.

இவர்களுக்குப் பின்னர் 1904-ல் ஸ்காட் எலியாட் என்பவர் வெளியிட்ட The lost lemuria என்னும் நூல் மீண்டும் லெமூரியா சித்தாந்தை எடுத்துக்கொண்டு நிறுவ பார்ப்பதாக அமைந்தது. எலியாட் மனித இனத்தின் 5 மில்லியன் ஆண்டு வரலாற்றை தனக்கு தோன்றிய விதமாகவெல்லாம் எழுதி வைத்தார். உதாரணமாக எலியாட் லெமூரிய மனிதர்களை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் என்பதை அவரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:


Description of Lemurian Man.
The following is a description of a man who belonged to one of the later sub-races-probably the fifth. "His stature was gigantic, somewhere between twelve and fifteen feet. His skin was very dark, being of a yellowish brown colour. He had a long lower jaw, a strangely flattened face, eyes small but piercing and set curiously far apart, so that he could see sideways as well as in front, while the eye at the back of the head--on which part of the head no hair, of course, grew--enabled him to see in that direction also. He had no forehead, but there seemed to be a roll of flesh where it should have been. The head sloped backwards and upwards in a rather curious way. The arms and legs (especially the former) were longer in proportion than ours, and could not be perfectly straightened either at elbows or knees; the hands and feet were enormous, and the heels projected backwards in an ungainly way. The figure was draped in a loose robe of skin, something like rhinoceros hide, but more scaly, probably the skin of some animal of which we now know only through its fossil remains. Round his head, on which the hair was quite short, was twisted another piece of skin to which were attached tassels of bright red, blue and other colours. In his left hand he held a sharpened staff, which was doubtless used for defence or attack. It was about the height of his own body, viz., twelve to fifteen feet. In his right hand was twisted the end of a long rope made of some sort of creeping plant, by which he led a huge and hideous reptile, somewhat resembling the Plesiosaurus. The Lemurians actually domesticated these creatures, and trained them to employ their strength in hunting other animals. The appearance of the man gave an unpleasant sensation, but he was not entirely uncivilised, being an average common-place specimen of his day." ....




நுங்கு போல் நெகிழ்வான உடலமைப்பை கொண்டிருந்த லெமூரியர்கள் 15 அடி உயரம் இருந்தனர். அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு கண் தலைக்குப் பின்னால் இருந்தது. முன்வசமாக எவ்வளவு வேகமாக நடக்க முடிந்ததோ, அதே வேகத்தில் பின்புறமாக அவர்களாக நடக்க முடிந்தது என்றெல்லாம், இன்னும் பல விசித்திர பண்புக்கூறுகளை எல்லாம், எலியாட் எழுதிப் போகிறார். இவற்றிற்கு தன்னுடைய உள்ளுணர்வை மட்டும் ஆதாரமாக காட்டுவது அறிவியல் ரீதியாக ஏற்புடையதல்ல.

மனித இனம் தோன்றியே ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் தான் ஆகின்றன என்கிறபோது, 5 மில்லியன் ஆண்டுகளின் மனித இனத்தை ஆராயும் எலியாட்டின் கருதுகோள்கள் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அத்துடன், தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி பூமியின் தென்பாதி ஒரு காலத்தில் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்திய துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா எல்லாம் இணைந்ததாக இருந்தது. அதற்குப் பெயர் கோண்ட்வானா (Gondwana). லெமூரியா அல்ல. இந்தப் பெருங்கண்டம், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து பிரிந்துவிட்டது. இப்போது இதனுடன் எலியாட்டின் லெமூரியா கோட்பாட்டையும், அங்கே லெமூர்கள் தமிழ் பேசிக்கொண்டே பரிணாம வளர்ச்சி கண்டதையும் ஒப்பிட்டு பாருங்கள். இக்கருத்துக்களின் பின்னாலுள்ள அபத்தம் புரிய வரும்.

19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான லெமூரிய மரபு காலனிய ஆதிக்கத்தின்போது இந்தியாவினுள் நுழைந்தது. அறிவியல் நிராகரித்து விட்ட அக்கோட்பாட்டுக்கு இந்தியச் சூழலில் உயிர் கொடுத்தவர்கள் பிரம்ம ஞான சபையினர் (The theosophical society). அந்தச் சபையின் மேடம் பிளாவட்ஸ்கி தன்னுடைய இரகசிய சித்தாந்தம் என்னும் நூலில் லெமூரியா பற்றி விவாதித்துள்ளார். அவர் வகுத்துச் சொன்ன கோட்பாட்டின்படி மூல மனித இனங்கள் மொத்தம் 7. இதில் பரிணாம உயர்வு பெறாத 3வது இனம் லெமூரியாவில் இருந்தது. அது குஞ்சு பொரித்த விலங்கு. இதன்பிறகு 4வது இனத்துக்கு பாலுணர்வு வந்தது. அது கடலில் மூழ்கிவிட, 5வது இனம் அட்லாண்டிஸில் (இன்னொரு மறைந்த கண்டமாக நம்பப்படுவது) தோன்றியது. அந்த இனமே வெள்ளையர் இனம்... உயர்ந்த இனம். அதாவது புரியும்படிச் சொன்னால் ஆரிய இனம்.

இந்த இடத்தில் தான் தமிழறிஞர்கள் அதெப்படி ஆரிய இனம் உலகின் உயர்ந்த இனமாக இருக்க முடியும்... கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் எங்கள் தமிழினம் அல்லவா.. என்று கிளர்ந்தெழுந்து, பிரம்ம ஞான சபையினரின் ஆரியத்துக்கு எதிராக கையில் எடுக்க ஒரு கோட்பாட்டை தேடினர். அப்போதுதான் எலியாட்டின் லெமூரிய கண்டக் கொள்கை தங்களின் இலக்கியத்தில் வரும் சில விஷயங்களுடன் ஒத்திசைவாக இருப்பது தெரிய வந்தது. உடனே அதை அப்படியே சுவீகரித்துக் கொண்டு, சங்கப்பாடலில் வரும் ‘குமரி’ என்ற சொல்லை லெமூரியா குறிக்கும் நிலபரப்புடன் முடிச்சிட்டு, லெமூரியாதான் ‘குமரிக் கண்டம்’ என்று அழைக்கத் துணிபு கொண்டனர். அதற்கு எவ்வித ஆதாரத்தையும் பரிசீலிக்க அவர்கள் முனையவில்லை. இவ்விதமாக தமிழ் வரலாற்றில் குமரிக் கண்ட புனைவை புகுத்தியவர்களாக தமிழறிஞர்கள் ந.சி.கந்தையா, கா.அப்பாத்துரை, தேவநேய பாவாணர் ஆகிய பலரைக் கூறலாம்.

ஆனால் குமரிக் கண்டமும் (லெமூரியா), சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் நிலபரப்பும் வேறு வேறு. இப்போதிருக்கும் குமரி முனைக்கு தெற்கே அந்தக் காலத்தில் நிலபரப்பு மேலும் நீண்டிருந்தது. அப்போது அதுவே குமரியின் தென்முனையாக இருந்தது. அதன் நீட்சி தமிழகத்தின் கடலோரம் முழுவதும் நீண்டு பாக் நீரிணையை தழுவி இலங்கையுடன் இணைவதாக இருந்தது. இந்த நிலபரப்பில் ஓடிய ஆறுதான் இலக்கியங்கள் குறிப்பிடும் குமரி ஆறு மற்றும் பஃறுளி ஆறு ஆகியன. இந்நிலபரப்பு பின்னர் வரலாற்று காலத்துக்கு முன்பாக கடற்கோள்களினால் அழிந்துபட்டது.

-------------------------------------------------------------------------------------

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை உலகிற்கு தெரியப்படுத்த எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்..!!
இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.....

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.