Sunday, May 6, 2012

குழந்தையின் உலகம்

பகிர்வுக்கு நன்றி :  : Nagoorkani Kader Mohideen Basha

குழந்தையின் உலகம் விசித்திரமான வேடிக்கை......
*கடுமையான விமரிசனங்களோடு வளர்க்கப்படும் குழந்தை எதையும் மட்டம் தட்டி ஒதுக்கக் கற்றுக் கொள்கிறாள்.

*நையாண்டி செய்து வளர்க்கப்படும் குழந்தை எதைக் கண்டும் வெட்கி ஒதுங்க ஆரம்பிக்கிறாள்.

*அவமான உணர்ச்சியோடு வளர்க்கப்படும் குழந்தை ,குற்ற உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகிறாள்.

*பொறுப்போடு வளர்க்கப்படும் குழந்தை ,நிதானத்தோடு இருக்கிறாள்.

*சரியான தூண்டுதலோடு வளர்க்கப்படும் குழந்தை ,தன்னம்பிக்கையோடு திகழ்கிறாள்.

*தக்க பாராட்டுதல்களுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லவற்றை ரசிக்க கற்றுக் கொள்கிறாள்.

*நியாய உணர்வோடு வளர்க்கப்படும் குழந்தை நேர்மையைக் கடைப் பிடிக்கிறாள்.

*பாதுகாப்போடு வளர்க்கப்படும் குழந்தை மற்றவர்களை நம்பப் பழகுகிறாள்.

*தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தன்னையே புரிந்து கொண்டவனாக இருக்கிறாள்.

*அன்பு,நட்பின் அர்த்தம் புரிந்து வளர்க்கப்படும் குழந்தை நிஜமான அன்பைக் கொடுக்கவும் ,பதிலுக்கு அதைப் பெறவும் தெரிந்து கொள்வதால் ஆயுசு முழுவதும் நிம்மதியாக இருக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறாள்.

-குழந்தையின் உலகம் விசித்திரமான வேடிக்கை......

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.