Sunday, May 6, 2012

நஞ்சும் அமுதமும்


பகிர்வுக்கு நன்றி :  : Nagoorkani Kader Mohideen Basha

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்

நாம் பிறரிடம் பேசும் போது உள்மனதில் வஞ்சகம், பொறாமை, கோபம், காழ்ப்புணர்ச்சி போன்றவை இருப்பினும்அவரிடம் நல்லமுறையில் இனிப்பாக பேசி பழகுவோம். அல்லது காரியத்தை சாதித்துக்கொள்வோம்.

இதை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்பர்.

விஷம் போன்று தாக்கும் கொடுமையான சொற்களை உள்ளேயே அடக்கிக்கொண்டு நல்ல இனிப்பான சொற்களை மட்டும் எல்லோரிடமும் பேச வேண்டும். இந்த மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை.

இதை குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதில் இருந்தும் வள்ளுவ பெருந்தகை கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் சொல்லாடலிலும் அறியலாம்.

இதைத்தவிர மேலும் ஒரு வெளிப்படையான விளக்கம் இப்பழமொழி கூறுகிறது

நாக்கு பார்ப்பதற்கு ஒன்றாகவே இருந்தாலும் அதில் பல பாகங்கள் உள்ளது. இன்றைய மருத்துவ அறிஞர்கள் நாக்கை பகுத்தாய்ந்து கூறுவது இனிப்புச்சுவையை உணரும் சுவை அரும்புகள் நாக்கின் நுனிப்பகுதியில் உள்ளது.

கசப்புச்சுவையை அறியும் சுவை அரும்புகள் நாக்கின் கடைசி தொண்டைப்பகுதியி்ல் உள்ளது என்பதாகும்.


இதையே வெளிப்படையாக இப்பழமொழி அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் என்று எடுத்து முதியோர்களின் மருத்துவ அறிவையும் விளக்குகிறது.

நன்றி : Www.Tamizhamudhu.Com
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.