Tuesday, July 30, 2013

இரு ஜீவன்கள்


நேற்று என் வீட்டு அருகில் ஒரு மன நலம் சரியில்லாதவர் சுற்றி திரிந்துகொண்டிருந்தார். கையில் ஒரு துணி மூட்டை, அழுக்கு படிந்த தலை முடி, கிழிந்த ஆடை என்று பார்க்கவே பாவமாக இருந்தார்.


மனசு பொறுக்காமல் அவருக்கு உணவு கொடுத்தேன். கையில் இருந்து உணவை வெடுக்கென்று பிடிங்கினார்



பிடிங்கிய உணவை உண்ணாமல் எங்கோ கொண்டு சென்றார். எங்கு செல்கிறார் என்று அவரை பின் தொடர்ந்து பார்த்தேன். எங்கள் தெருவில் சுற்றி திரியும் ஒரு தெரு நாய் குட்டிக்கு அந்த உணவில் பாதி பங்கை அளித்தார். வாலை ஆடிக்கொண்டே சந்தோஷமாக உணவை உண்டது அந்த நாய் குட்டி.



இதில் நான் கண்டு வியந்தது என்னவென்றால் பல வேளைகளில் அந்த நாயையும் சரி அந்த நபரையும் சரி பலர் கல்லால் அடித்துள்ளார்கள். கல்லால் அடித்தவர்கள் அனைவரும் நல்ல மன நிலையில் உள்ளவர்கள் தான் ஆனால் ஒரு முறை கூட அந்த இரு ஜீவன்களையும் பாவத்தோடும், பாசத்தோடும் பார்த்தது இல்லை. கல்லால் அடிபட்ட ஜீவன்களை வெறி நாய் என்றும், பைத்தியக்காரன் என்றும் பட்டம் கட்டினர். 
ஆனால் உண்மையில் அந்த இரு ஜீவன்களுமே வெறியன் பைத்தியக்காரன் அல்ல, நம் தெருவை சுற்றி திரியும் ஜீவன்களுக்கு உதவாத, தினம் தினம் அவர்களை கல்லால் அடித்துக்கொண்டிருக்கும் நாம் தான் வெறியர்கள், பைத்திய காரர்கள், மன நோயாளிகள். 

-பிரவீன்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.