Sunday, May 6, 2012

நட்பு - (Friendship)



பகிர்வுக்கு நன்றி :  : Nagoorkani Kader Mohideen Basha


சங்க காலம் தொட்டு இன்று வரை நட்பு ஒன்றே மாறாமல் இருக்கின்றது. தன்னையே கொடுப்பது அன்பு ஒன்றே.

நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:

1 அகந்தை / ஒரே நிலையில் விடாப்பிடியாக நிற்பது.

2 பேராசை / ஆசை

3 நெருங்கிய உறவாக இருப்பதாக பிறர் முன் காட்டிக் கொள்வது. ( பகல் வேஷம்)

4 எதிர் பார்ப்புகள்

5 உணர்ச்சியற்று இருப்பது / அளவுக்கு மீறிய உணர்ச்சி வயப்படுவது

6 விவேகம் / வைராக்கியம் இல்லாமல் இருப்பது

7 ஒரு தீர்மானம் கொண்டு மனிதர்களிடம் பழகுவது. ( நல்லவன் தீயவன் முடிவெடுத்து விட்டு பழகுவது அல்லது ஒதுங்கி விடுவது )

8 நன்றி மறந்தவர்கள் என்றோ நன்றி கெட்டவர்கள் என்றோ பேசுவது

இப்படி இருப்பவர்கள் எல்லோரும் அதிக அளவில் நண்பர்களைக் கொண்டிருப்பதில்லை. விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை , அன்பு பாராட்டாதவர்கள் இவர்களை நட்பாக பார்ப்பதும் இல்லை...நண்பர்களாக சேர்த்துக் கொள்வதும் இல்லை.

நம்மிடம் பழகுபவர் ஒரு பொய்யினை சொல்லி அவர் சொன்னது பொய் தான் என்று ஊர்ஜிதம் ஆகிவிட்டால் நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள்
* வருத்தம்
* கோபம்
* வஞ்சிக்கப்பட்ட உணர்வு
* ஏமாற்றம்
* பரிவின்மை
* கைவிடப்பட்ட உணர்வு
* வியப்பு
* அதிர்ச்சி
* தர்ம சங்கடம்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் தெரியும் என்பார்கள்.
எனவே, அன்போடு பழகுவதும், உண்மையாய் பழகுவதும், விட்டுக் கொடுத்து வாழ்தலும் தான் நண்பர்களை உருவாக்குகின்றன.  இந்த நண்பர்கள் நட்பால் பின்னிப் பிணைந்து யாராலும் பிரிக்க முடியாத அளவிற்கு உணர்வால் மனதால் ஒன்று பட்டு விடுவதால் நட்பு பெருமைக்குரிய பேசப்படுகிற அளவிற்கு ஆலமரமாய் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது.

உங்களின் சுபாவம் நீங்களே அறிவீர்கள். அதில் குறைகள் இருந்தால் அவற்றினை மாற்றிக் கொள்வதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

உங்களின் சிடுமூஞ்சித்தனம், எரிச்சல் படும் சுபாவம், கோபம் கொள்வது உங்களை விட்டு விலகும்போது , உங்களின் குடும்பத்தார் மட்டுமல்ல அனைவரும் உங்களோடு கை கோர்ப்பார்கள் நட்போடு.

நீங்கள் விரும்புவது இதைத் தானே!

1 comment:

  1. Silar idhil yedhai seidhalum purindhu kolla maatargal.. :) Adhuku yaarum onnum panna mudiyadhu bossu.. :)

    ReplyDelete

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.