பகிர்வுக்கு நன்றி : தழல் திருவண்ணாமலை
வேறொன்றும் அறிகிலேன் நான்
சாட்சியாய் நிற்பதை தவிர
கனவுகளில் மட்டும் இன்றும் உண்டு
புரவியேறி போர் புரிந்ததும்
மன்னனுக்காய் சிரமறுத்ததும்
எனது பூமி சிதைக்க படுகிறது
காடுகள் சூறையாடப்படுகின்றன
உணவு ,பண்பாடு, கலைகள் ,
அடையாளம் அனைத்தும்
அழித்து ஒழிக்கபடுகின்றன
விழிகளிலிருந்து வழிகிறது நீர்
துடைக்க மனமில்லாமல்
கையாலாகத்தனத்தின் உச்சமாய்
வேறொன்றும் அறிகிலேன்
நான் சாட்சியாய் நிற்பதை தவிர
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.