Monday, March 5, 2012

பறவையே எங்கு இருக்கிறாய்

பாடல்: பறவையே எங்கு இருக்கிறாய்
படம்: கற்றது தமிழ் - Tamil M.A
வருடம் : 2007
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: இசைஞானி இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

--------------------------------------------

Medley

En vaazhkayile vandhadhu moone moonu letter
still i remember my first letter

prabha nee ennai thediyipeennu enakku theriyum
naanum ammavum inge maharashtra-le thoorathu maama veetile irukkom
nee varadhukko letter ezhadathukko yetha samayam varappo naan solren

nerathakku saappidu
vaarathukku moonu nalavadhu kuli
andha socks-a thovaichu podu
nagam kadikkadhey
kadavulai vendikko - ananthi

Song:

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…
அடி என்பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம்
பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

உன்னோடு நானும்
போகின்ற பாதை
இது நீளாதோ
தொடு வானம் போலவே…

கதை பேசிக்கொண்டே
வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்…
இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா…
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா…

முதன்முறை வாழபிடிக்குதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே …

முதல் முறை கதவு திறக்குதே
முதல் முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே …

ஏழை…காதல்…மலைகள்தனில் தோன்றுகின்ற… ஒரு நதியாகும்….
மண்ணில் விழுந்தும் ஒருகாயமின்றி…. உடையாமல்…உருண்டோடும்…நதியாகிடுவோம்….
இதோ இதோ இந்த பயணத்திலே…. இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்

பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா…

முதன்முறை வாழபிடிக்குதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…

முதல் முறை கதவு திறக்குதே
முதல் முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…


No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.