Sunday, July 17, 2011

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திறுபேன்...
(ஆனந்தம்...)

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும் வழக்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
(ஆனந்தம்...)

இன்னும் நூறு ஜென்மம்கள் சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென் பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே
(ஆனந்தம்...)

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.