Saturday, December 12, 2015

கல்யாணம் - புது வீடு - வெளிநாடு

படித்ததில் மிகவும் பிடித்தது. எழுதியவருக்கு ?? !  வாழ்த்துக்கள்...
"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்" 
*
"வெளிநாடு வந்துப்பார்"......
இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
*
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
*
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
*
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
ஆனாலும், குடும்பத்தில் யாராவது ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....

"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........
அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
*
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".

****************************************
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா
ஏன்னு தெரியல.... சும்மா சொல்லணும் போல தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே....!!

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள்......
இன்னும் இவர் போன்று எத்தனை உடன்பிறப்புகளோ... நண்பர்களோ.... தெரியவில்லை...

புத்தி வந்து உருப்படியா பொழச்சா சரி தான்

சென்னை மழை துன்பத்துக்கு அப்புறம், பாதிப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்தது, முக்கியமாக இழைனர்கள் முன்னுக்கு வந்து செய்த காரியங்கள்.. அரசியல், ஆட்சி, அதிகாரிகள் என்று எல்லாவற்றையும் தூசுதட்டி உருப்பட வைக்கலாம் என்ற ரொம்ப நல்ல பதிவுகள் எல்லாம் வந்துச்சு.. ஆனா இது எல்லாம் எவ்ளோ நாள் நீடிச்சுது ??? 
நாட்டுல மக்களுக்கு தெளிவு /சிறந்த அறிவு இல்ல, அதனால ஆட்சியாளன் சரி இல்ல, அதிகாரிகள் சரி இல்ல, இதனால ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான நல்ல கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்கள் எதுவும் இல்லாம பெரும்பான்மையான மக்கள் இருக்கோம்.. இப்படி ஒரு சுழற்சியில் சிக்கி (டெஅட்லாக்) மீளமுடியாமல் இருக்கோம்.
தமிழ் சினிமா, அதை பாக்கும் மக்கள் சீரழிய, நாசமா போக என்ன என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் மும்முரமா பண்றாங்க சிலர். ஒரு சிலர் இப்படி இவ்வளவு கீழ்த்தனமா கிளம்பீருங்க...
ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு, யாருக்கோ கொஞ்சம் பேர்த்துக்கு தின்ன சோறு ஜீரணம் ஆகாமலோ, அடிச்சா மப்பு ரொம்ப அதிகமாகியோ, இல்ல ஏதோ மனநிலை சரி இல்லாம இருந்தப்ப, இதை பண்ணிடாங்க. அதை கண்டுக்காம விட்டுட்டு, நாம நம்ம வேலைய உருப்படியா பாக்க போயிருந்தா தான் என்ன.. ??
இந்த சிறுபுத்தி இருக்கும் மனுசங்க (அது கலைத்துறை'ல யாரா இருந்தாலும் - அதை ஆதரிக்கும் மக்களா இருந்தாலும்) இப்ப கேட்டு சிரிகுரவங்க / ரசிகுரவங்க, பின்னாடி இதுமாதிரி எதாவது உங்களுக்கு நடந்தா, குயோ முறையோனு கத்தும் போது மத்தவங்க இதே மாதிரி பண்ணுவாங்க அதை மறக்காம மனசுல வச்சுகிடுங்க....
இந்த சூழ் நிலையில்
- இதை எல்லாம் பார்த்து வளரும் இளைய தலைமுறை எப்புடி இருக்கும்.. ??
- பெற்றோரின் மிக சரியான வளர்ப்பு என்பது எவ்வளவு மெனக்கெட்டு பார்த்தாலும் சுலபமானது இல்லை, அல்லது பல பேருக்கு இது சாத்தியமே இல்லை என்பது மிகவும் வருத்தம் தரும் உண்மை.. 
இனி வரும் தலைமுறைக்காவது நல்ல இயற்கையோடு ஒன்றிணைந்த சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் நட்பன்புகளும் வரும்னு கனவுல மட்டும் தான் நினச்சுக்கனும் போல..
இப்போ எனக்கு, எங்க பாட்டி ரொம்ப வெறுத்து போனா சொல்லும் வரி தான் ஞாபகம் வருது "எப்படியோ இதெல்லாம் கடந்து போய்டும், யாரு கண்டா நாசமா போகாம இனிமேலாவது புத்தி வந்து உருப்படியா பொழச்சா சரி தான்"

Friday, December 4, 2015

மனிதனும் இயற்கையும் மனிதமும்

இன்றைய தேதிக்கு சென்னையிலும் கடலூரிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் இயற்கையின் சீற்றமும் அதனால் மக்களின் வாழ்க்கை நிலையம் கண்கூடாக பார்க்கிறோம்.

இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் வெறுமனே வருத்த பட்டு என்ன பயன், ஒன்றும் இல்லை...

இயற்கையாகவே மனிதனுக்குள் மனிதம் இருக்குமா என்பது தெரியாது, ஆனால் வளரும் சூழல் அதை தீர்மானிக்கும் என்றே நினைக்கிறேன்..
இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் இதனால் மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி என்று எவ்வளவோ பிரிவினையிலும், இயந்திர மற்றும் இயற்கைக்கு எதிரான முரணான வாழ்கையும், ஆசைகளும் இப்படி எண்ணற்ற காரணங்களால் பிரிந்து திரிந்த மக்களுக்கு இப்போதைய இயற்கை சீற்றம் சொல்லி வைத்த பாடம் இதுதான் "மனிதமும் இயற்கையும் அடிப்படையாக அரவணைத்து கொண்ட வாழ்க்கை தான் நிலையானது , நிம்மதியானது , அதுவே நம் அனைவரின் நெஞ்சார்ந்த விருப்பமும், ஆனால் ஏதோ காரணங்களால் தெரிந்தே இதெல்லாம் மறந்து ஓட / வாழ பழகிவிட்டோம்.. இப்போது பாருங்கள் "மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி " என்று எந்த பாகுபாடில்லாமல், அனேகமாக அணைத்து அல்லது பெரும்பாலான மக்கள் உதவுவதும், உறுதுணையாக இருபதும்.. நம் சுயரூபம் ஒருவேளை இது தானோ ?? ஒரு வேலை இருக்கலாம் .. !!

இப்பொழுது
நம் அனைவரும்
- யார் எவ்வளவு உதவி செய்தார்கள், செய்யவில்லை, ஏன்
- யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் , கொடுக்கவில்லை, ஏன்
- இது யாருடைய குற்றம்,
என்றெல்லாம் இப்போது விவாதிச்சு - பகிர்ந்து பெரிதாக என்ன ஆகிவிட போகிறது.??  ஆகையால்
- உங்கள் நன்றிகளையும், வருத்தங்களையும், பெருமைகளையும் நிச்சயம் பிறகு ஒரு நாள் பதிவு செய்யலாம்.

இன்றைய உடனடி தேவை : மனித நேயத்தோடு.... .... ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் இந்த இடரினைக் கடக்க வேண்டும் என்பதே!

இனி நாளைய விடியல் என்பது : இனிமேலாவது "மனிதமும் , இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதும் - அல்லது குறைந்தபட்சம் முரணாக - எதிராக வாழ்வதை தவிர்ப்பது. ". -- இன்றைய இந்த துன்ப கணங்கள் நமக்கு மறுபடியும் ஞாபக படுத்திவிட்டு சென்றுள்ளது இது ஒன்றே ஒன்று தான் ...

இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு செழிக்கட்டும்.
மனிதம் மலரட்டும் .