Wednesday, August 14, 2013

பெண் புத்தி பின் புத்தி

Source  :  கனா காண்கிறேன்

இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், எங்கு எந்த பிரச்சனை வந்தாலும், அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள்.

இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.

# இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை, இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.