Thursday, August 15, 2013

சுதந்திரம்


Nanbar  தழல் திருவண்ணாமலை avargalin Mugaputhaga suvatril idhai padithen, Yennal maruka mudiyavillai. Kasapana unmaigal dhan... Idho pagirgiren..
கொலைகளுக்காக கொண்டாடலாம்.

குண்டு வெடிப்புகளுக்காக கொண்டாடலாம் .


மீனவர்களை தொடர்ந்து பலி கொடுப்பதற்காக கொண்டாடலாம் 

அந்நிய நாடுகளின் அடிமையாய் இருக்கும் அரசு வாய்த்திருக்கிறதே அதை நினைத்து கொண்டாடலாம். 

கனிமவளங்களை சுரண்டுவதற்கு கட்டற்ற சுதந்திரம் இருக்கிறதே அதை கொண்டாடலாம் . 

குழுவாக இணைந்து யாரை வேண்டுமானாலும் வன்புணர்வு செய்ய முடியுமே அதற்காக கொண்டாடலாம் . 

பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகிற தேசத்தில் பிறந்ததற்காக கொண்டாடலாம் . 


ஒட்டு போட காசு கொடுக்கும் அரசியல் வாதிகளை வாழ்த்தி கொண்டாடலாம். 


சாதியின் பேரால் எத்தனை சவக்குழிகள் வேண்டுமானாலும் தோண்டலாமே அதற்காக கொண்டாடலாம். 


வெள்ளைக்காரனை விரட்டிவிட்டு அவனுடைய மொழிக்கும்,


பொருட்களுக்கும் அடிமையாய் இருக்கிறோமே அதற்காக கொண்டாடலாம்

எத்தனை பேரை எல்லையில் பலி கொடுத்தாலும் பொங்குவதோடு வடிந்துவிடும் பொங்கல் பானைகளை வைத்திருப்பதற்காக கொண்டாடலாம்

எல்லையில் காவு கொடுக்க வீரர்கள் இருக்கிறார்கள் .நாட்டில் காவு கொடுக்க எதையும் அறிந்து கொள்ள விரும்பாத செம்மறியாட்டு கூட்டமாய் மக்கள் இருக்கிறார்கள் என ஆட்சியாளர்கள் கொண்டாடலாம் .


குறைந்த பட்சம் குடித்து கும்மாளமிட ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என கொண்டாடலாம் 


ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே ..... 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.