Thursday, August 8, 2013

கற்பனையல்ல நிகழப்போகும் நிஜம்

உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் ?
எந்த எந்த தேதியில் எவ்வளவு பணம் எடுத்துள்ளீர்கள் என்பதை யாரோ ஒருவர் அறிந்து கொள்வதை விரும்புவீர்களா ?

நீங்கள் உங்கள் மனைவியுடன் சென்று வந்த தனிமையான பயணம் நீங்கள் அறியாத யாரோ ஒருவருக்கு தெரியும் எனில் உங்கள் மனநிலை என்ன ?

நீங்கள் உங்கள் வீட்டு தேவைக்கு வாங்கும் பொருளிலிருந்து , செல்லும் பயணம் ,செல்லும் இடம் அனைத்தும் தொடர்ந்து நீங்கள் அறியாமல் அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு கொண்டே இருப்பதை விரும்புகிறீர்களா ?

இது கற்பனையல்ல நிகழப்போகும் நிஜம் .

உங்களுக்கு தனிமை என்பதே இனி கிடையாது .எல்லாமே யாரோ ஒருவர் அறிந்த ரகசியம் தான் .ஆதார் என்ற பெயரில் உங்களுக்கு நீங்களே வைத்து கொள்ளும் ஆப்பு .ஒரு மனிதனின் கை விரல் ரேகைகள் எவ்வாறு தனித்தன்மை வாய்ந்தவையோ அது போலவே ஒவ்வொரு மனிதனின் கருவிழிகளுக்குள் உள்ள பாப்பா எனப்படும் விழிதிரையும் தனித்தன்மையானவை .ஆதார் அட்டையின் போது கை ரேகை மட்டுமின்றி விழித்திரையும் பதிவு செய்யப்படுகிறது . ஆதார் அட்டையின் பணிகள் முடிந்த பின் உங்களுடைய வங்கி கணக்குக்கு , சிம் கார்டுக்கு , எரிவாயு இணைப்புக்கு , பொருட்கள் வாங்கும் போது (என இன்னும் என்னென்ன நிகழ கூடிய சாத்தியம் உள்ளதோ )கேட்கப்படலாம் .ஒற்றை அடையாள எண்ணில் (ஆதார் அடையாள எண் )உங்களது மொத்த செயல்பாடுகளையும் தொகுக்கும் முயற்சி .

ஏன் இதுவரை இல்லையா ? இல்லை இதுவரை உள்ள அடையாள அட்டைகளில் இவர் தான் உண்மையான இந்த பெயரில் உள்ள நபர் என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளது .மிக துல்லியமாக கண்டறியவே இந்த திட்டம் .இதை திரட்டுவதில் ஈடுபட்டிருப்பது இந்திய அரசு அல்ல .இந்திய அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் .இந்த தகவல்கள் அனைத்தும் வேற்று நாட்டிற்கு கைமாறும் பட்சத்தில் என்ன என்ன கேடுகள் சூழ வாய்ப்பிருக்கிறது என்பதை யோசிக்கவே அதிர்ச்சியாயிருக்கிறது . நம் மீதோ நாட்டின் மீதோ நேசம் கொண்ட ஆட்சியாளர்களை நாம் பெறவில்லை . நம்மை ஆட்சி செய்பவர்கள் அண்டை நாட்டின் அடிவருடிகள் தான் . அன்னியர் சவாரி செய்வதற்கே ஆள்பவர்களால் ஒப்புகொடுக்கப்படும் கோவேறு கழுதைகளா நாம் ?மீண்டும் நிரந்தர அடிமைகளா நாம் ?



Source : http://www.vikatan.com/new/article.php?module=magazine&mid=1&sid=912&aid=30330

இதை மிக விரிவாக காட்சி வடிவில் என்ற enemy of the state ஆங்கில படம் புரிய வைக்கும் .

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.