Sunday, August 11, 2013

அத்தனை அழகையும்



பச்சை குழந்தையின் பாதம்
பருவப் பெண்ணின் முகப்பரு
பட்டாடை போர்த்திய செவ்வானம்
பாடித் திரியும் பட்டாம் பூச்சி
பள்ளிச் சிறுமியின் அழுகை

காற்றில் சிரிக்கும் பூக்கள்
காதல் கொண்ட வண்டுகள்
காகிதத்தில் செய்த ஓடம்
காலைத் தழுவும் கடலலை
கார் மேகத்தின் கருமை

விடலையின் அரும்பு மீசை
வீரனின் நெஞ்சுத் தழும்பு
விடியல் நேரத்து வெண்பனி
வியர்வைத்துளி வழியும் நெற்றி
விரிசல் கொண்ட தண்டவாளம்

மழலையின் கொஞ்சும் மொழி
மார்கழி மாதத்து ரங்கோலி
மண்ணை முத்தமிடும் மழை
மலையிலிருந்து கொட்டும் அருவி
மங்கையின் மகரந்த இதழ்

அந்தி பொழுதின் மஞ்சள் வெயில்
அறுவடைக்கு காத்திருக்கும் வயல்
ஆகாயம் தொட முயலும் பட்டம்
ஆத்தங்கரையோர அரசமரம்
ஆற்றோடு செல்லும் பரிசல்

அத்தனை அழகையும்
ரசித்துக் கொண்டிருக்கிறோம்..
அமர்ந்த இடத்தில் இருந்து 

கூகுளில் பதிவிறக்கம் செய்து..

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.