Thursday, August 1, 2013

குடிமகனே

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள்.

மூன்றாவது நாளாக மதுரையில் ஜோ பிரிட்டோ மற்றும் நந்தினி உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 

சென்னை மற்றும் கோவையில் மது கடைகள் முற்றுகை, காரைக்குடி மற்றும் தஞ்சை மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று தொடங்குகின்றனர்...... 

தொடர்புக்கு 9080655521,9043912494

# வெல்லட்டும் மாணவர்கள் போராட்டம், ஒழியட்டும் மது 


--------------------------------------------------------------------------------------------


ஏதோ ஒரு ஊரில் .. ஏதோ ஒரு TASMAC கடையில்..... 

"ஏன் டா மச்சி... யாருடா இந்த பொண்ணு நந்தினி... வூட்ல வேற வேலையே இல்லையோ..... நம்ப கடையை மூட சொல்லுதுப்பா அது..."
"அது காமடிப்பா... படிச்சோம்மா ..எதனா வேல சென்ஜோம்மா.... அப்பிடியே கண்ணாலம் , புள்ளிங்கோ னு இருந்தோமா னு இல்லாம...." 

"சீன் போடுது பா .."
"அதுக்கு டைம் சரி இல்ல மச்சி...."
"நாலு நாள் கத்தி புட்டு வூட்ட பார்க்க போயிடும் டா .... அப்பால அல்லாரும் மறந்துடுவானுங்க - நீ வுடு மச்சி!!!"

வேறு ஏதோ ஒரு ஊரில்... ஏதோ ஒரு TASMAC கடையில் 

"மாப்ள... நாட்டுல ஒவ்வொருத்தவிங்களும் எப்படியெல்லாம் புப்ளிசிட்டி தேடுராங்கே பாரு டா..." 

"எது டா...." 

"அதான்ப்பா அந்த மதுரை நந்தினி.. மது விளக்கு கோரி உண்ணாவிரதம் இருக்குதாம்.... அம்மணி க்கு மதர் தெரசா னு நினைப்பு..."

"அதுக்கு என்னா பிரச்சனையாம்.... நம்ப குடிச்சா அதுக்கு என்ன வயித்தெரிச்சல்...? " 

"இந்த டிவி காரைங்க சில பேரு ஏத்தி விடுராயிங்க டா..."
"அதெல்லாம் அடுத்த பிரச்சனை ஏதாவது கிளம்பற வரைக்கும் தான் டா மாப்ள.... அவிங்கள விடு ..."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில வருடங்கள் கழித்து இப்படி பேசும் குடிமகன்களின் மகளோ, மனைவியோ உற்றார் பிரிந்த சோகத்தில், கோபத்தில், வேறு எந்த குடும்பத்துக்கும் இந்த கதி வந்து விட கூடாது என்கிற ஆதங்கத்தில்...... ஏதாவது ஒரு ஊரில்.. ஒரு மூலையில் போராடுவார்கள்...
- ரா. ராஜகோபாலன்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.