Wednesday, August 14, 2013

வீரவணக்கம்

இறந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம்...!
நேதாஜி....வீரவணக்கம்...

ஹிட்லர் ஐரோப்பியத்தில் செய்ததை தான் பிரிட்டன் இந்தியாவில் செய்கிறது" என்றார் நேதாஜி....

இரண்டாம் உலகப்போரின் போது சிறிய நாடுகள் கூட கொள்கை ரீதியாக தங்கள் விரும்பிய பக்கம் சேர்ந்து ஒரு உக்கிரமான போர் மேடையில் தங்கள் வீரத்தை காட்டின.இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆங்கிலேயரை விரட்ட நினைத்தார் நேதாஜி. ஆனால் ஒரு மாபெரும் போர் நடந்த வரலாறு உடைய பாரதம் கண்மூடி தனமாக ஆங்கிலேயருக்கு ஆதரவு என்று காந்தியின் பெயரால் அறிவித்தது.

"லண்டன் மாநகரம் தாக்கப்பட்டால் அது நமக்கும் அவமானம்" என்றார் காந்தி. "முன்பு நமது இந்திய நகரங்கள் ஆங்கிலேயரால் தாக்கப்பட்டதை விட லண்டன் தாக்கப்படுவது தான் வருத்தப்பட கூடிய செயலா? நேதாஜி கேட்டார். "ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்த்தே இந்தியா களமிறங்குகிறது" என்றார் நேரு. ஹிட்லர் ஐரோப்பியத்தில் செய்ததை தான் பிரிட்டன் இந்தியாவில் செய்கிறது" என்றார் நேதாஜி. நேதாஜியின் எந்த கேள்விக்கும் பதிலே இல்லை.

இறுதியாக போருக்கு பின் காங்கிரஸ் நேதாஜியை பிடித்து தருவதாக உறுதி தந்து ஒரு கோழைத்தனமான சுதந்திரம் அடைந்தது. காங்கிரஸ் அன்றிலிருந்து இன்று வரை படை பலம் வாய்ந்த நமது ராணுவத்தை சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்தியதே இல்லை. சொந்த நாட்டின் மக்களை மிரட்டவும், அண்டைநாட்டில் போராடும் மக்களை கொல்லவும் மட்டுமே பயன்படுத்தியுள்ளது. இது தொடர்ந்தால் சீனா ஊடுருவுவதும், பாகிஸ்தான் சுடுவதும் தொடர்கதையாகிப்போகும். இறந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம்...!

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.