Saturday, July 6, 2013

சிலை

# படித்ததில் பிடித்தது #

ஒருவர் ஒரு கடைக்குச் சென்றார்.

அங்கே எல்லாப் பொருட்களுக்கும் நடுவே வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை அவர் கவனத்தை ஈர்த்தது.

அதில் ஒரு சீட்டுத் தொங்கியது.

சிலையின் விலை ரூ. 1000; சிலை பற்றிய கதையின் விலை ரூ. 3000 என்று சொன்னது சீட்டின் வாசகம்.

சிலை போதும். கதை வேண்டாம் என்று ரூ. 1000 கொடுத்து சிலையை வாங்கிக் கொண்டு போனான்

சிலையோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து சில எலிகள் வரத் துவங்கின.

அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது.
என்ன செய்வதென்று தெரியாமல் அவர், அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையைக் கடலில் வீசி விட்டார்.

பின் தொடர்ந்து வந்த எலிகளும் கடலில் குதித்து மூழ்கின.
நிம்மதி அடைந்து திரும்பியவர் யோசித்தபடியே, மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார்.

கடைக்காரர் அந்த சிலையின் கதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைத் தேடி வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.

“ வேண்டாம்.

அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல்வாதியின் சிலை கிடைக்குமா?” என்று கேட்டார்.

Source : via Shahulhamid.  (ரிலாக்ஸ் ப்ளீஸ்)

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.