Tuesday, July 23, 2013

அழகு

அலங்காரம் இல்லா முகம் அழகு
ஆணவம் இல்லா அறிவு அழகு

அன்பு கலந்த கோபம் அழகு
அளவு கடக்கா ஆசை அழகு

பாகுபாடு இல்லாப் பாசம் அழகு
பண்பை இழக்காப் படிப்பு அழகு

ஒழுக்கம் நிறைந்தக் காதல் அழகு
ஒருவருக்கும் துன்பம் தராத இன்பம் அழகு

முன்னேறத் தூண்டும் அவமானம் அழகு
முடிவே இல்லா முயற்சி அழகு

தன்னலம் கருதா உதவி அழகு
தாய் மொழி மறவா தகுதி அழகு

# இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அழகோ அழகு.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.