Wednesday, July 3, 2013

கிராமமும் நகரமும்


காலையில் கீச்சிடும் குருவிகள் அங்கே
காதில் கேட்கும் நிசப்தம் இங்கே

காலையில், களிப்பூட்டும் மஞ்சள் அங்கே
கானல் வெறுப்பூட்டும் வெயிலோன் இங்கே

பார்க்கும் இடமெல்லாம் பசுமையும் சோலையும் அங்கே
பார்த்தாலே மலைப்பூட்டும் பிரம்மாண்ட பில்டிங்குகள் இங்கே

பகலில் கஞ்சி பசியை போக்கும் அங்கே
பரபரபுக்கு நடுவே பாதி பிரட் இங்கே

கலப்பை பிடிக்கும் கைகள் அங்கே
கம்பியூட்டரை தட்டும் கைகள் இங்கே

மதியத்தில், மனைவியுடன் சோறு அங்கே
மனைவிக்கும் கனவனுக்கும் சோர்வு இங்கே

சென்னிற கதிரோன் சிரிக்கும் அங்கே
சேனல்கலில் சீரியல் துவங்கும் இங்கே

மாலையில் திவிட்டா இன்பமூட்டும் திண்ணைகள் அங்கே
'மாட்டிக்குவோமோ' என்று திட்டிக் கொண்டுபோகும் வாகனஓட்டிகள் இங்கே

அம்மா கையால் கூட்டாஞ்சோறு அங்கே
'அம்மா, என்ன ஏன் பெத்த?' என்ற சண்டை இங்கே

இரவில் நிம்மதியுடன் சேர்த்து மதியையும் கண்டு தூங்கும் கண்கள் அங்கே
'இன்று போல் இன்னும் எத்தனை நாள், விதியே?' என்று மயங்கும் கண்கள் இங்கே

-இர. சபரீஷ்வரன்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.