Wednesday, July 3, 2013

ஏங்கும் என் மனம்

உலகின் மொழியில். இவனெழுதும் கவிதைக்கு முன்னால்...
இலக்கியம் இலக்கணமெல்லாம் அதன் தன்மை இழந்து தேய்ந்திடுகிறது ...
அடர்ந்த இருளின் பின் நாளில் ஓர் பிறைவிட்டிருக்குமே அப்படியானது இவன் புன்னகை ...

அழுக்கேறிக்கிடக்கும் கன்னக்குழிகளை உற்றுநோக்கிங்கள் இவன் கடவுளோடு பேசிக்கொண்டிருக்கும் தடயம் புலப்படும்...
நாளை பற்றிய சித்தாந்தஙகளில். இவனுக்கேதும் நம்பிக்கை இருக்கப்போவதில்லை...

மழை ஒழுகும் குடிசையில் நட்சத்திரம் தேடிக்கொண்�டிருக்கும் இவனுக்கு முன்னால் நானெல்லாம் வெறுங்குருடன்.

கண்கள் பணிக்க கரங்கள் காற்றோடு விளையாடும் இவனைப்பார்த்து ரசித்த நிமிடங்கள். வாழ்வின் புண்ணியக்கணக்கில் போய் சேர்ந்தது...
இனி பட்டாம்பூச்சிக்கும் குடைபிடிக்க ஏங்குமென். மனம்... 

நன்றி  -கவிதைக்காரன்.

#படக்கவிதை
இந்த புகைப்படமே ஒரு கவிதை போல இருக்கிறது.
இதைப் பார்த்ததும் உங்கள் கவிமனது என்ன சொல்கிறது.
ஒரு (தலைப்புடன்) கவிதையாய் எழுதுங்கள்.

இந்த புகைப்படத்தின் கீழேயே எழுதினால் அனைவரின் கவிதைகளையும் ஒரு தொகுப்பாக வாசிக்க எளிதாக இருக்கும்.

புகைப்படம் : Nizhal Photography

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.