Saturday, July 13, 2013

செத்தான்டா சேகரு

ஒரு குடிகாரன் பாரில் உக்காந்து அழுது கிட்டிருந்தான். .
அவன் முன்னால் ஒரு கிளாசில் நிறைய சரக்கு இருந்தது.

அப்போ அங்க வந்த இன்னொருவன் அதை எடுத்துது மட மடன்னு குடிச்ச்சிட்டான்.

இந்தப் பையன் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தான்,.
வந்தவனும் ஓகே .....ஓகே .....எனக்கு அழுவது பிடிக்காது. உனக்கு வேண்டும் என்கிற அளவுக்கு வாங்கித் தருகிறேன் அழாதே என்றான்.

இவனோ, அது பிரச்சினை இல்லை. இன்று எனக்கு ஆபீசில் சரி பாட்டு. வீட்ட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. நானும் வீட்டுக்கு வர காரை எடுக்கப் போனேன். கார் திருட்டுப் போயிருந்தது. போலிசும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வாடகை கார் பிடித்து வீட்டுக்குப் போனேன். வீடு போனதும் தான் தெரிந்தது என் பர்சை அந்த வாடகைக் காரில் விட்டுட்டேன்ன்னு,....

அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை, அவளும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. சரின்னு தான் இந்த பாருக்கு வந்தேன்.

என் வாழ்கையை இத்தோட ..... முடிச்சுக்க்கலாம்ன்னு தான் சரக்கு முழுசும் விஷம் கலந்து வைத்து விட்டு..... காத்திருந்தேன்.

அப்போ தான் அதைநீ எடுத்து சொட்டு விடாம குடிச்ச,
இப்போ உன்னை நினைத்துத் தான் அழுது கிட்டு இருக்கேன். 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.