Monday, July 8, 2013

டெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம்

 
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்ற சித்தர் கோட்பாடுகளின் படி பருவகால சூழ்நிலைகளில் பூமியில் மாறுபாடுகள் உண்டாகும் போது உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் தட்ப வெட்பங்களுக்கு தகுந்தார் போல் உடல் நிலை மாற்றமடையும்.

இதில் பல நோய்கள் உடலில் தோன்றி பின் மறைந்து விடும். சில நோய்கள் மட்டும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

அதில் ஒன்றுதான் தற்பொழுது தமிழகத்தை மிரட்டிக்கொண்டு இருக்கும் "டெங்கு காய்ச்சல்"எனும் கொடிய நோயாகும். இது கொசுவால் பரவக்கூடிய நோயாக உள்ளது.

இதனை தடுப்பதற்கும்,ஒழிப்பதற்கும் அரசு பல்வேறு வகையில் திட்டங்கள் வகுத்து செயல் படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தா பிரிவுகளில் "நிலவேம்பு குடிநீர்" கசாயம் இலவசமாகவே வழங்கப்படுகின்றது.

சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் 'நிலவேம்பு குடிநீர்" டெங்கு காய்ச்சலை போக்கும் ஆற்றல் வாய்ந்தது மேலும் இதனைக் குடிப்பதால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி நிலவேம்பு கசாயத் துடன்,சந்திரோதய மாத்திரை,பிரம்மானந்த பைரவ மாத்திரை, மாதுளை மணப்பாகு, அன்னபேதி செந்தூரம் போன்ற சித்தமருத்துவ மருந்துகளையும் உண்டு பயனடையலாம்.

"நிலவேம்பு குடிநீர்"கசாயம் 9-வகையான மூலிகைகள் கலந்து தயாரிக்கப் படுகின்றது. நிலவேம்பு என்பது ஒரு மிகுந்த கசப்பு சுவை கொண்ட தாவரமாகும்.

1 -நில வேம்பு
2 -விலாமிச்சை வேர்
3 -பேய்ப்புடல்
4 -சுக்கு
5 -சந்தனம்
6 -பற்படாகம்
7 -வெட்டி வேர்
8 -கோரைக் கிழங்கு
9 -மிளகு

போன்ற ஒன்பது சரக்குகளும் ஒரே எடை அளவுடன் சேர்த்து ஒன்றிரண்டாய் இடித்துக் கொள்ளவும்.

குடிநீர் செய்முறை :

25 -கிராம் சூரணத்தை 800 -மிலி தண்ணீரில் ஊரவைத்து காய்ச்சி 125 -மிலி ஆகக் குறுக்கிக் கொள்
ளவும்.

20 -மிலி நிலவேம்பு கசாயத்தை 3 -டம்ளர் நீரில் கலந்து பெரியவர்கள் காலை -மாலை என இரண்டு
வேளை குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு 15 -மிலி கசாயத்தை தண்ணீரில் கலந்து காலை -மாலை இரண்டு வேளை குடிக்க
லாம். இவ்வாறு குடித்து வர டெங்கு காய்ச்சலை போக்கலாம். டெங்கு காய்ச்சல் இல்லாதவர்களும்
இதை தடுப்பு மருந்தாக குடிக்கலாம்.

Source : http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.