Monday, October 8, 2012

தாயுள்ளம் !! ( காவிரி : கன்னட - தமிழ்)

நன்றி :   சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?  & பிரபாகரன் நந்தன
காவிரியின் கரைதனிலே
கனலேறும் காலுடனே
தாலுலர நிற்கின்றோம்
தாய் வரவினை கண்டிடவே.

தமையனவன் தடுத்திட்டான்
தானுயர வேண்டி எண்ணி
தஞ்சைவாழ் மகவெலாம் -துணிந்திட்டார்
நஞ்சை உணவாய் எண்ண.

கன்னடத்தின் அணையினின்று
கசிந்திடுதே (தண்)கண்ணீராய்-அங்கே
தவித்திடுதோ தாயுள்ளம்
தன் மகவை கண்டிடவே.
படம் : கிருஷ்ணராஜ சாகர் அணை


அணையில் நீர் கசிவது சாதரணமாக நடக்கும் நிகழ்வு... ஆனால் அதை தஞ்சையில் நீரில்லாமல் தவிக்கும் விவசாயிகளை (மகன்களை / மகள்களை) பார்த்து வரும் தாயின்(காவரியின்) கண்ணீர் என்று கவிஞர் தன கற்பனையை ஏற்றி கூறி இருப்பதால், இது தற்குறிப்பேற்ற அணியாயிற்று..

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.