Friday, June 15, 2012

மலேசியா வாசுதேவன்.

நன்றி : தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

“ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். எனது காலத்தில் எல்லா இசையமைப்பாளர்களையும் நான் மிகவும் மதித்துள்ளேன். ஆனால் வாய்ப்புக்காக அவர்களிடம் சென்றதில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளி விட்டு எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை"

"எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறைதான் இருக்கிறது. அதுவே போதும். இவ்வாழ்வில் பெருமைப்படுவதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை, வருத்தப்படுவதற்கும் ஒன்றுமில்லை. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையும் ஆள் நான்” என்று ஒரு பேட்டியில் மலேசியா வாசுதேவன் கூறியிருந்தார்.

இன்று மலேசியா வாசுதேவனின் 69 ஆம் பிறந்தநாள்.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.