Thursday, May 24, 2012

எண்ணெய் தேய்த்து குளித்தல் எதற்காக?

நன்றி : தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி


விரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லாநாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

இதயத் தூய்மையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நமது முதாதையர் கடைபிடித்திருந்தனர். நம்நாட்டில் காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக இடம் பெற்றுள்ளது. அடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி குளிப்பது நம்முன்னோர்கள் ஒரு சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்.

ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பேரும் சுக அனுபவத்தையே எண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். இதைவிட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன. ஒன்றாவதாக எண்ணெயில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் எண்ணெய் பூசியதும் வாயு கிடைப்பெறாமல் மாண்டு போகின்றன.

விரத நாட்களில் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?

நல்லெண்ணெய் விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிக முக்கியமானதாக கருதியிருக்கும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை கொண்டாடுவது வெறும் மூட நம்பிக்கை என்று கூறி வந்தனர். ஆனால், இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிப்பட்டுள்ளது.

சனி கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாகக் கருதிவரும் எண்ணெய் தலைக்குச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாக்குகின்றது.
இவ்வளையம் இருப்பதால் கிரகங்களினின்று வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த அலைகள் உடலுக்கு மிகவும் அவசியம். இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.