எல்லாத்துலயும் நீ தான் பர்ஸ்ட் வரணும் என்று சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து வளரும் பிள்ளைகள் தோல்வி என்று வந்து விட்டால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. பள்ளிகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட தோல்வி என்றால் அங்கேயே அழுதுவிடுவதும், மீண்டும் வாய்ப்புத் தருமாறு கெஞ்சுவதும் பார்க்கும் போது இப்படி முதல்ல வரணும்னு சொல்லி வளர்க்கும் பெற்றோர்களின் மீது தான் முதலில் நமக்கு கோபம் ஏற்படுகிறது..
இரண்டவாது மூன்றாவது என்று வந்தால் வருங்கால வளர்ச்சி எந்த வகையில் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.. அனைத்திலும் முதலாவதாக வந்தவர்கள் வாழ்வில் வெற்றியைப் பெற்றுவிட முடிவதில்லை. அனைத்திலும் இறுதியாக வந்தவர்கள் வாழ்வில் தோல்வியை மட்டும் கண்டதில்லை.
இதனை பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதில்லை.. இப்படி ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றிலும் முதலாவது என்று சொல்லிக கொடுத்து வளர்க்கும் பிள்ளைகள் வருங்காலத்தில் எதையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை. தோல்வி என்று வந்துவிட்டால் அதை தாங்கும் மனப்பக்குவமும் இல்லாமல் விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகிறார்கள்..
இந்த விபரீதமான மனநிலையை பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்..
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.