Friday, March 30, 2012

வெள்ளை சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல

பனைவெல்லம், கருப்பட்டி, வெல்லம், தேன், கரும்புச்சாறு என்று நம் மூதாயர் கண்டிபிடித்த இனிப்பு பொருள் ஏனோ இன்று காதிகிராஃப்ட்ஸ் மற்றும் கூட்டறவு நிலையத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருளாகிபோனது. எல்லாம் இப்ப சர்க்கரை தான். சரி இந்த சர்க்கரை நம் கரும்பில் இருந்து தானே கிடைக்கிறது என்று தன்னை தானே ஆசுவாசப்டுத்திகொள்வர்களுக்குத்தான் இந்த ஆர்ட்டிக்கள்.

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் அல்லது டார்க் மஞ்சலாக தான் கிடைக்கும். அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது. ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது. அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் "சல்ஃபர் டையாக்ஸைடு" கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை "பிளீச்" செய்யும். அதன பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது. அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கபட்டு "அஃப்ஃபினேஷன்" எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதீ இருக்கும் துகள்கள் சிரப்புக்கு பயன்படுத்தபடுகிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம் சர்க்கரைக்கு பதிலாக " சுகர் மாதிரி", லோ கேலரி ஸ்வீட்னர், போன்ற செயற்க்கை சர்க்கரை தயவு செய்து உபயோகிக்க வேண்டாம். சர்க்கரை அதிகமானல் கூட பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை இந்த இயற்க்கை சர்க்கரை மேட்டர் முழு கெமிக்கல் கலவை தான். முடிந்தால் கடையில் கிடைக்கும் பிரவுன் சுகர் அல்லது நாட்டு சர்க்கரை, தேன், பனை வெல்லம், கருப்பட்டி, அல்லது அளவான சர்க்கரை உட்கொள்ளுங்கள். தயவு செய்து சும்மா பவுடர் மாதிரி உள்ள ரீஃபைனிங் சுகர் எளிதாக கரையும் ஆனால் உடலுக்கு நல்லதல்ல. குளுகோஸ், சுக்ரோஸ், ஃப்ருட்கோஸ் அளவு முடிந்தால் பார்த்து வாங்கி பயன்படுத்தவும்.

கடைசி டிப்ஸ் - இந்தியாவில் தான் உலகத்தில் முதன் முதலாக சர்க்கரை தயாரிக்கபட்டது அதுவும் 300 கி.மு வில் தான்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.